Category Archive: உரை

என் உரைகள், காணொளிகள்
http://jeyamohanav.blogspot.in/ என் உரைகளின் காணொளிகள், ஒலிப்பதிவு வடிவங்கள் ஆகியவற்றை ஒரே இடத்தில் தொகுக்கும் முயற்சியாக நண்பர் வெங்கட்ரமணன் அவர்களால் உருவாக்கப்பட்டுள்ள இணையப்பக்கம் இது. வாசகர்களுக்கு உதவியாக இருக்கக்கூடும் ஜெ  
Permanent link to this article: http://www.jeyamohan.in/92039

கவிஞனின் சிறை
[தேவதச்சனுக்கு 2015க்கான விஷ்ணுபுரம் விருது வழங்கும் விழாவில் பேசப்பட்ட உரை] அரங்கில் கூடியிருக்கும் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த வணக்கங்களை தெரிவித்துக் கொள்கிறேன். என்னுடைய மூத்தசகோதரரும் பிரியத்துக்குரிய எழுத்தாளருமான நாஞ்சில் நாடன் இந்த மேடையில் அமர்ந்திருக்கிறார். என்னுடைய ஒருமையில் நான் அழைக்கும் ஒரே நண்பனாகிய யுவன் சந்திரசேகர் அமர்ந்திருக்கிறார். இந்த அரங்கில் இரண்டு முறை பாலுமகேந்திரா வரவேண்டியதாக இருந்தது. ஒருமுறை அவர் தயாரானபோது அவர் உடல்நிலை கருதி நான் தான் வரவேண்டாம் என்று சொன்னேன். இந்த மேடையில் அவருடைய …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/88413

வயதடைதல்
சிலசமயம் நாட்டுப்புறப்பாடல்களில் சில அற்புதங்கள் கண்ணுக்குப்படும். எப்படி என்றால் மற்ற எல்லாக் கலைகளும் மாறிக்கொண்டே இருக்கும். நாட்டுப்புறப்பாடல்களை மாற்றமாட்டார்கள். அவை காட்டுக்குள் ஆலமரத்தின் அடியில் இருக்கும் புராதன தெய்வங்கள் போல அப்படியே யாரும் கவனிக்காமல் அமர்ந்திருக்கும். திடீரென நாம் கவனிக்கும்போது நமக்கு இது என்ன என்ற அதிர்ச்சியும் பரபரப்பும் ஏற்படும். இந்தப் பாடல் வரி அப்படி என்னை கவர்ந்தது. நான் சாதாரணமாக அந்த வழியாகப் பேருந்திலே சென்றுகொண்டிருந்தேன். ஒலிபெருக்கிவழியாக ஏதோ பெரியவர் பாடிக்கொண்டிருந்தார். நல்ல கனமான காட்டான்குரல். …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/26080

வாழும் கணங்கள்
    ரயிலில் ஒருவர் கூடவே பயணம் செய்தார். என்னைப்பற்றி விசாரித்தார். நான் எழுத்தாளன் என்று பொதுவாகச் சொல்லிக்கொள்வதில்லை, உடனே எழுத்தாளன் என்றால் யார், அவனுக்குப் பொதுவாகத் தமிழில் என்ன வருமானம் வரும், அவன் எப்படி முதல்வகுப்பு அறையில் பயணம்செய்யக்கூடியவனாக ஆனான், எல்லாவற்றையும் நான் விளக்கியாகவேண்டியிருக்கும். ’பிஸினஸ் செய்கிறேன்’ என்று மட்டும் சுருக்கமாகச் சொல்வேன். ‘என்ன பிஸினஸ்?’ என்று கேட்டால் ‘கொடுக்கல்வாங்கல்’ என்று சொல்வேன். உண்மையில் இந்த வார்த்தைக்குச் சரியான அர்த்தம் என்ன என்று எனக்கு இன்றுவரை …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/19762

உரையாடும் காந்தி
  அன்புள்ள நண்பர்களே இந்த நாள் எனக்கு மிக முக்கியமானது. நான் பிறந்து வளர்ந்த குமரிமாவட்டச்சூழலில் கிறிஸ்துமஸ் இனிய நெகிழ்ச்சியான நினைவுகளை உள்ளடக்கியது. நண்பர்களின் பெரியவர்களின் நினைவுகள். பின்னாளில் கிறிஸ்து என் ஞானகுருவாக ஆனபோது அதற்கு இன்னும் ஆழமான அர்த்தம் வந்தது. இந்நாள் நித்யசைதன்ய யதிக்கு, சுந்தர ராமசாமிக்கு பிரியமான நாள். மனிதகுமாரனின் நாளில் உங்களுக்கு என் மனமார்ந்த வணக்கம். பைபிளில் ஓர் அழகான வரி. ‘நீங்கள் மண்ணில் உப்பாக இருக்கிறீர்கள்’. அவனை உங்களில் சிலர் இறைவனாக …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/33423

கவிதையின் அரசியல்– தேவதேவன்
  எங்களூரில் தினம் ஒரு இடத்தில் ‘தகடு எடுப்பு’ நடக்கும். மாலையானால் பேருந்தில் பூசாரி வந்திறங்குவார். பெரிய துணிப்பை, நீண்ட கூந்தல் பெரிய மீசை ஜிப்பா. அவரிடம் ”அண்ணாச்சி தகடு ஆரு வீட்டுக்கு?”என்று கேட்டபடி வேடிக்கைபார்க்கும் கும்பல் பின்னால் போகும். அந்தி கறுத்ததும் வீட்டுக்கு தென்மேற்கு மூலையில் நுனிவாழை இலை விரித்து, பச்சைமட்டைக்கீற்றில் தேங்காயெண்ணை ஊற்றி சுருட்டிய துணித்திரியில் பந்தம் கொளுத்தி, நான்குபக்கமும் நட்டு, நடுவே கல்லில் சாமி ஆவாகனம் பண்ணி நிறுத்தி ,மஞ்சள்பொடிகலந்த அரிசிப்பொரியும் உடைத்த …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/240

தாய்மொழி என்னும் ஏமாற்றுவேலை
பதினைந்தாண்டுகளுக்கு முன்பு ஒருமுறை மேற்குமலைகளில்  ஒரு சூழியல்குழுவுடன் நடந்துகொண்டிருந்தேன். வழிகாட்டி அழைத்துச்சென்ற பளியர் தன்னுடன் வந்த இன்னொரு பளியரிடம் சரளமாகப்பேசிக்கொண்டிருந்தார். அது தமிழ் மலையாளம் இரண்டுபோலவும் இருந்தது, இரண்டும் இல்லை. வழிகாட்டிப்பளியர்பேசியது தமிழா என்று என்னுடன்வந்த நண்பருக்குச் சந்தேகம். அவர் கேரளதேசியம் அல்லது மலையாளதேசியம் பேசும் சிரியன் கிறிஸ்தவர். நண்பர் “நீங்கள் பேசுவது மலையாளமா தமிழா?” என்றார். “இல்லை ஐயா, பளியபாஷை” என்றார். நண்பர் சிறிய அதிர்ச்சியுடன் என்னைப்பார்த்துவிட்டு “பளியமொழி தமிழா இல்லை மலையாளமா?” என்றார். அவர் …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/87378

கொடிக்கால் அப்துல்லா – என் உரை
  குமரிமாவட்ட உருவாக்கத்தில் பங்குகொண்ட தலைவர்களில் ஒருவரும், தொழிற்சங்க முன்னோடியுமான  கொடிக்கால் ஷேக் அப்துல்லா அவர்களைப்பற்றி எழுதப்பட்ட ‘கொடிக்கால் ஷேக் அப்துல்லா படைப்பாளிகளின் பார்வையில்’ என்னும் நூல் நாளை நாகர்கோயிலில் வெளியாகிறது நாள் 17 -4-2016 நேரம் மாலை 6 மணி இடம் கஸ்தூரிபாய் மாதர் சங்கம் கலெக்டர் ஆபீஸ் அருகே நாகர்கோயில்   தலைமை பொன்னீலன் நூல் வெளியீடு ஜெயமோகன் நூல் ஆய்வுரை ஆ. ஷண்முகையா எம் எஸ் அலிகான் நூல் பெற்றுக்கொள்பவர் புதுக்கோட்டை கே …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/87038

கசப்பு அண்டா மனிதன்! -செல்வேந்திரன்
நண்பர்களே, ஒரு காலை நடை விவாதத்தில் ஜெயமோகன் ஒரு அவதானத்தை சொன்னார். நம் ஊர்பக்கம் வீட்டுப் பக்கம் நாம் சந்திக்கிற வயதானவர்கள் பெரும்பாலும் மிகப்பெரிய அறுவை கேஸூகளக இருப்பார்கள். சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லி அறுப்பார்கள் அல்லது நாங்கள்ளாம் அந்த காலத்துல என நோஸ்டால்ஜிக் கலர் ரீல் ஓட்டுவார்கள், அல்லது கடுவன் பூனைகளாக கடித்து வைப்பார்கள். ஆனால், நைனா கி.ராஜநாராயணனுக்கு 98 வயது, அசோகமித்திரனுக்கு 85 வயது, இந்திரா பார்த்தசாரதிக்கு 86 வயது, இலங்கை எழுத்தாளர் தெளிவத்தை …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/86581

கனக செல்வநாயகம் நினைவுப்பேருரை
கனடா இலக்கியத்தோட்டம் அமைப்பின் நிறுவனர்களில் ஒருவரும் என் பெருமதிப்பிற்குரிய நண்பருமான   செல்வ கனகநாயகம் அவர்களின் நினைவாக நடத்தப்படும் பேருரை ‘இலக்கியமும் தத்துவமும். நிகழ்த்துபவர் அருள்திரு சந்திரநாதன் காலம் 12-3-2016 இடம் armadale community center 2401 denison st, marrkham  
Permanent link to this article: http://www.jeyamohan.in/85285

Older posts «