Category Archive: சமூகம்

விரியும் கருத்துப் புள்ளிகள் :வேதசகாயகுமாரின் பண்பாட்டு விமரிசனங்கள்.
சங்கப்பாடல் ஒன்றில் ஓர் இடம் வருகிறது. மள்ளர்களின் வயலில் இருந்து வைக்கோல்கூளம் பறந்துசென்று உமணர்களின் உப்புவயலில் விழுகிறது. அதன்மூலம் அவர்களுக்கிடையே பூசல் உருவாகிறது. இந்த வரி சாதாரணமாக அக்காலகட்டத்து சூழல் வருணனையாக சொல்லப்பட்டு கவிதை பிறவிஷயங்களுக்குச் செல்கிறது.   இந்த சங்கக் கவிதையைப் பற்றி பேச வரும் வேதசகாயகுமார் இந்த ஒரு நிகழ்ச்சியை கூர்ந்த கவனத்துடன் ஆராய்கிறார். அக்காலத்து சமூக மோதல் ஒன்றின் சித்திரம் இதில் உள்ளது. உமணர்களைப் பற்றிய குறிப்புகள் சங்கப்பாடல்களில் அதிகமாக வருகின்றன. உப்பு …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/4244

இளையராஜா, எம்.எஸ்.வி, ஞாநி
எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக இளையராஜா நடத்தும் இசைநிகழ்ச்சி சார்பாக ஞாநி சங்கரன் எழுதிய குறிப்பை பிறிதொரு தருணத்தில் என்றால் கீழ்மையின் உச்சம் என்றே சொல்வேன். ராஜா எம்.எஸ்.வியின் இறப்பு உருவாக்கிய அனுதாபத்தை வைத்து பணம் சம்பாதிக்க முனைகிறார் என்றும் அது கிரிமினல் நடவடிக்கை என்றும் ஞாநி எழுதியிருக்கிறார். ராஜாவின் நிகழ்ச்சி மூலம் பெறப்படும் பணம் எம்.எஸ்.வி பேரால் ஒரு டிரஸ்ட் அமைக்க செலவிடப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. அச்செய்தியை அறிந்தும் பொருட்படுத்தாமல் ஞாநி இதை வன்மத்துடன் எழுதுகிறார். …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/77246

வீரமணியின் பக்தி
விடுதலை வீரமணி செய்த முட்டாள்தனம் பற்றி ஒத்திசைவு ராமசாமி எழுதியிருக்கிறார். வேடிக்கையாக இருந்தது. திக காரர்களின் வழக்கமான அசட்டுத்தனம். அவர்கள் எப்போதுமே மேலைநாடுகளில் ஞானம் விளைவதாக நம்பும் மூடர்கள். ஆனால் நாசா ராமர்பாலத்தை அடையாளம் கண்டுவிட்டது என்றும் சனீஸ்வரன் கோயில் முன் துணைக்கோள்கள் திசைமாறுவதாக நாசாவே சொல்லிவிட்டது என்றும் நம்பும் இந்துபக்தர்களும் இதே மனநிலைகொண்டவர்கள்தான்
Permanent link to this article: http://www.jeyamohan.in/77206

புதுமைப்பித்தனின் வாள்
கல்கியின் எழுத்தை இலக்கியத்தின் உச்சமாக கருதி அதையொட்டி சிந்தனைசெய்தால் நாம் நல்ல இலக்கியங்களை உருவாக்க முடியாதென்று சொன்னார் க.நாசு. உலக இலக்கியங்கள் மீதும், இந்தியப்பேரிலக்கியங்கள் மீதும், நம் தமிழ் பண்டை இலக்கியங்கள்மீதும் உள்ள வாசிப்பே நம் ரசனையை உருவாக்கும் என்றும் நல்ல இலக்கியங்களை ரசிக்கவும் உருவாக்கவும் அதுவே அவசியம் என்றும் வாதிட்டார்.
Permanent link to this article: http://www.jeyamohan.in/7798

விளையாடல்
அன்பு ஜெயமோகன்,     ` தொழில்முறை விளையாட்டுகளையே நான் வெறுக்கிறேன். அவை மனித அகங்காரத்தின் வெளிப்பாடுகள்’.   மேற்கண்ட சொற்களின் பொருள் என்ன? புரியவில்லை. `தொழில்முறை விளையாட்டுக்கள்’ என்றால் – தொழில் செய்பவர்கள் செய்யும் தகிடுதத்தங்களைச் சொல்கிறீர்களா? அல்லது விளையாட்டை வாழ்க்கையாகக் கொண்டவர்களைச் சொல்கிறீர்களா?   உங்கள் விளக்கத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் – நான் சதுரங்க விளையாட்டை வாழ்க்கையின் தேடல்களில் ஒன்றாகக் கொண்டவன் :-)   அவசரம் இல்லை.   வி.சரவணன்     சிறுவயதில் …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/2489

பரிணாமவாதமும் இந்திய மதங்களும்
மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு உங்களுக்கு எனது முதல் கடிதம் இது. தவறுகள் இருப்பின் தயவு செய்து பொறுத்துக் கொள்ளவும். நான் கடந்த 20 வருடங்களாக Software  துறையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறேன். சமீப காலம் வரை ஆங்கில fiction , non – fiction எழுத்துக்கள் வாசித்து வந்தேன் (Carl  Sagan , Stephen Hawkins , Malcolm Gladwell , Richard Feynman , James  Rollins  ஆகியோர் என் குறைந்த வாசிப்பில், என்னை …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/21252

நான் இந்துவா?
அன்புள்ள ஜெயமோகன், நீண்ட நாட்களாகவே இதை பற்றி உங்களுக்குக் கடிதம் எழுத வேண்டும் என்று நினைத்து கொண்டிருந்தேன். இப்போதுதான் நேரம் வாய்த்தது. முதலிலேயே சொல்லி விடுகிறேன். எனக்குக் கடவுள் என்று சொல்லப் படுகிற புறச்சக்தியின் மேல் நம்பிக்கை இல்லை. இது திராவிடக் கழக புத்தகம் படித்தும் ஏற்பட்டதல்ல. முழுக்க முழுக்க என்னுடைய சொந்த மனக்குழப்பத்தாலும், அதன் மூலம் எழுந்த சிந்தனையாலும் ஏற்பட்டது. அதன் பிறகு ராமகிருஷ்ணர், விவேகானந்தர், ரமணர் போன்றவர்களின் சிந்தனைகளைப் படித்து அந்தக் கடவுள் என்ற …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/21656

தகர முரசு
கல்கத்தாவில் என் நண்பர் ஒருவர் கொஞ்சநாள் மலையாள நாளிதழின் செய்தியாளராக இருந்தார். சென்னையில் மெரினா கடற்கரையில் மலையாள எழுத்தாளர் ஒருவரும் நானும் அந்த நண்பருடன் பேசிக்கொண்டிருந்தோம். எழுத்தாளரும் இதழாளரும் மதுவின் போதையில் இதமாக தளர்த்திக்கொண்டிருந்தார்கள். கடலை விற்கும் ஒரு குள்ளச்சிறுவன் ஒரு தகர டப்பாவை அடித்தபடி எங்களைக் கடந்து சென்றான் நான் புன்னகை செய்தேன் ’என்ன?’ என்றார் எழுத்தாளர் . ’டின் டிரம்’ என்றேன். நோபல் பரிசு பெற்ற ஜெர்மானிய எழுத்தாளர் குந்தர் கிராஸின் நாவல் அது. …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/11268

வேதமூலம்
கரிய மெலிந்த உடலில் ஏராளமான ரத்தக்குழாய்களுடன், ஒட்டிய கன்னங்கள் மீது நான்குநாள் தாடியும், கூர்மையாக முறுக்கப்பட்ட அடியில் நிக்கோடின் பழுப்பு படிந்த வெள்ளை மீசையும் பச்சைநிறத்தில் முண்டாசுக்கட்டுமாக ஒரு மனிதர் தேடிவந்தார். ”அய்யா வணக்கமாக்கும்” என்றார்.”வாங்க”’ என்றேன்.”அஞ்சு நிமிஷம் கிட்டுமா?” என்றார் பணிவுடன். ”எதுக்கு?” என்றேன், என்ன விற்கிறார் என்று குழம்பி.”சதுர்வேதங்களைக் குறிச்சு ஒரு குறெ வர்த்தமானம் சொல்லணும்” என் திகிலை அனுமதியாகப் பெற்று உள்ளே வந்து அமர்ந்தவர் ”சாய வேண்டா, நான் பால் குடிக்குக இல்ல” …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/379

நமக்குள் இருக்கும் பேய்
நண்பர்களே, இந்த மேடையில் நான் வந்து நிற்பதற்கான காரணம் என்ன? ஆல்ஹகாலிக்ஸ் அனானிமஸ் என்ற அமைப்பு குடிநோயாளியாக இருந்து திருந்தியவர்களுக்காக உருவாக்கபப்ட்டது. குடிகாரர்கள் குடிகாரர்களிடம் பேசும் அமைப்பு. நான் ஒரு முன்னாள் குடிகாரன் என்று சொன்னபிறகுதான் இங்கே பேசவே ஆரம்பித்தார்கள். நான் இன்றுவரை குடித்ததில்லை. மதுவகைகளின் வாசனைகளையும் நிறங்களையும் கூட என்னால் சொல்லிவிட முடியாது. அப்படியானால் இங்கே எனக்கு என்ன இடம்? நண்பர்களே, நான் என் நண்பர்களிடம் இப்படிச் சொல்லிக்கொள்வதுண்டு. ‘நான் ஒரு குடிக்காத குடிகாரன்’ அதைத்தான் …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/14390

Older posts «