Category Archive: ஆளுமை

கலாம் பற்றி சுஜாதா
எம்.ஐ.டி-யில் இயற்பியல் பேராசிரியர் ராகவாச்சாரி, தமிழில் ஈடுபாடு உள்ளவர். அவர், தமிழில் அறிவியல் கட்டுரைகள் எழுதுவதற்கு ஒரு போட்டி வைத்தார். நானும் கலாமும் அதில் கலந்து கொண்டோம். கலாம் எழுதிய கட்டுரை ‘ஆகாய விமானம் கட்டுவோம்‘ என்பது. நான் எழுதியது ‘அனந்தம்‘ என்னும் Infinity Mathematics பற்றிய கட்டுரை. சுஜாதா கலாம் பற்றி எழுதிய கட்டுரை
Permanent link to this article: http://www.jeyamohan.in/77439

கலாம்- கேள்விகள்

indexஅன்புள்ள சார் மேதகு அப்துல் கலாம் அவர்கள் இறந்த்தும் அனைத்து சமூக வலைதளங்களிலும் அவர் குறித்த அஞ்சலி செய்திக்குறிப்புகள் வ(ளர்)ந்த வண்ணம் இருக்கின்றன. முதலில் என் நண்பர் (மருத்துவர்) ஒருவரே வேறு விதமாக ஆரம்பித்தார்.. அவர் நகராட்சி பள்ளிகளுக்கு என்ன செய்தார் என.. அப்போதிருந்த மனநிலையில் அவரை எதிர்த்து பேச என்னிடம் ஏராளமான தகவல்கள் இருந்தன. அவரை எள்ளி நகையாடியாயிற்று.. அதன்பின் சாரு எழுதிய பதிவை ரகு கொடுத்தான். சாரு அவரை ரஜினியுடன் ஒப்பிட்டிருந்தார். விவேக்கையும் வைரமுத்துவையும் …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/77432

எம்.எஸ்.வி பாடும்போது
இளையராஜா ஒருமுறை சொன்னார், ”எத்தனை பாடல்களில் அவர் என் நெஞ்சை உருகவைத்து மெய்மறக்கச்செய்திருக்கிறார்! அவரது ஒவ்வொரு பாடலும் விலைமதிக்க முடியாத ரத்தினங்கள் அல்லவா? இசைவழியாக நான் எதையாவது அடைந்திருக்கிறேன் என்றால் அதை நான் எம் எஸ் வியின் பாதங்களில் காணிக்கையாக்குகிறேன் ஷாஜி எழுதி [நான் ஆங்கிலத்தில் இருந்து மொழியாக்கம் செய்து உயிர்மையில் முன்பு வெளியான ] கட்டுரை
Permanent link to this article: http://www.jeyamohan.in/77336

எம்.எஸ்.வி பற்றி சுகா
எம்.எஸ்.விஸ்வநாதன் மேல் எனக்கிருக்கும் தனிப்பட்ட ஈர்ப்புக்குக் காரணம், அவரது குரல். விஸ்வநாதனின் குரல் என் மனதுக்கு அளித்த சுகத்தை, வேறெந்த பாடகரின் குரலும் தரவில்லை. தேர்ந்த பாடக, பாடகிகளுடன் விஸ்வநாதன் இணைந்து பாடும் போது கூட, என்னால் விஸ்வநாதனின் குரலையே அதிகம் ரசிக்க முடிகிறது. ‘சொல்லத்தான் நினைக்கிறேன்’ படத்தின் ‘சொல்லத்தான் நினைக்கிறேன்’ பாடலில் ஜானகியை விடவும், ‘முத்தான முத்தல்லவோ’ படத்தின் ‘எனக்கொரு காதலி இருக்கின்றாள்’ பாடலில் பாலசுப்பிரமணியத்தை விடவும் விஸ்வநாதனின் குரலே ஆத்மார்த்தமாக மனதை வருடுகிறது. சுகா …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/77329

கண்ணதாசன்
அன்புள்ள ஜெ, நலம். நலந்தானா? கவிஞர் கண்ணதாசன் குறித்த உங்கள் பார்வையை அறிய ஆவலாக உள்ளேன். ஒரு கவிஞராக, எழுத்தாளராக, பாடலாசிரியராக, பேச்சாளராக, தத்துவ மாணவராக, அரசியல்வாதியாக அவரை எப்படி பார்க்கிறீர்கள் என்று. அவரது பாடல் வரிகள் ஓரிரு தலைமுறைகளையே கட்டிப்போட்ட, அமைதி தந்த , ஆறுதலளித்த, ஆவேசம்கொள்ளச்செய்த ஒரு இயல்பாகவே இருந்திருப்பதாக நினைக்கிறேன். மேலும் அவரது தமிழ் மொழியின் மீதான ஆளுமை என்னைப்போன்றவர்களை மிகவும் வியக்க வைக்கிறது. அவரை சந்தர்பங்களின் அரசன் என்று சொல்லலாமா?. ராம். அன்புள்ள ராம், கவிஞர்களைப்பற்றிய எந்த …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/5330

புதுமைப்பித்தனின் வாள்கல்கியின் எழுத்தை இலக்கியத்தின் உச்சமாக கருதி அதையொட்டி சிந்தனைசெய்தால் நாம் நல்ல இலக்கியங்களை உருவாக்க முடியாதென்று சொன்னார் க.நாசு. உலக இலக்கியங்கள் மீதும், இந்தியப்பேரிலக்கியங்கள் மீதும், நம் தமிழ் பண்டை இலக்கியங்கள்மீதும் உள்ள வாசிப்பே நம் ரசனையை உருவாக்கும் என்றும் நல்ல இலக்கியங்களை ரசிக்கவும் உருவாக்கவும் அதுவே அவசியம் என்றும் வாதிட்டார்.Permanent link to this article: http://www.jeyamohan.in/7798

எம். எஸ் .வியின் மலையாளப்பாடல்கள் – ஷாஜி
அன்பு ஜெயமோகன் கனடா, அமேரிக்கப் பயணம் சிறப்பு என நம்புகிறேன். அருண்மொழியும் குழந்தைகளும் நலம் தானே? எம் எஸ் வி யைப் பற்றி நான் மலையாளத்தில் எழுதிய விரிவான கட்டுரை (மலையாளம் வாரிக ஓணப்பதிப்பு 2014) நீங்கள் படித்திருக்கவில்லை என்று தெரியும். அவரது மலையாளப் பாடல்களைப் பற்றியான விரிவான பார்வை இதில் இருக்கிறது என்றே நினைக்கிறேன். சுட்டி இங்கே. http://epaper.malayalamvaarika.com/336496/Malayalam-Vaarika/05092014#page/98/1 வாய்பு கிடைத்தால் படித்து கருத்தை சொல்லுங்கள். ஷாஜி அன்புள்ள ஷாஜி வேறொருவர் இணைப்பை அளித்து இந்தக்கட்டுரையை …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/77072

எம்.எஸ்.வி ஒரு கட்டுரை- வெ சுரேஷ்
விஸ்வநாதன்- ராமமூரத்தியின் இசையில் அறுபதுகளில் வெளிவந்த பாடல்களுக்கு எந்தவொரு புதிய பாராட்டும் தேவையில்லை. அவை அவற்றுக்கான உயரங்களுக்குச் சென்று அமர்ந்துவிட்டவை. ஆனால் எழுபதுகளில் எம்எஸ்வி இசையில் வெளிவந்த பாடல்கள் அவற்றுக்குரிய இடத்தை இன்னும் பெறவில்லை என்றுதான் எண்ணுகிறேன். – See more at: http://solvanam.com/?p=41097#sthash.hF7Kv5l6.dpuf
Permanent link to this article: http://www.jeyamohan.in/76989

அஞ்சலி – எம்.எஸ்.வி
எம்.எஸ்.விஸ்வநாதனை நான் இருமுறை சந்தித்திருக்கிறேன். முதல்முறையாகச் சந்தித்தது ஷாஜியின் நூல் வெளியீட்டுவிழாவில். ஷாஜி அவருக்கு நெருக்கமானவர். மீண்டும் சந்தித்தபோது அவருக்கு அந்நிகழ்ச்சி  நினைவில் இருக்கவில்லை. ஷாஜியையே நினைவிருக்கவில்லை. பொதுவாக அவரது இசை பற்றிப் பேசிக்கொண்டிருந்தேன். அவரது பெரும்பாலான பாடல்களை அவர் நினைவில் வைத்திருக்கவில்லை. முதுமை என்பதை விட மேலாக அவரது இயல்பு அது என்று தெரிந்தது. மிதந்து சென்றுகொண்டிருந்தார். அந்த அலையெல்லாம் இசை. நான் நினைவறிந்த நாள்முதல் எம்.எஸ்.வி இசையை கேட்டுக்கொண்டிருக்கிறேன். இன்றும்கூட கேட்டேன். ஒவ்வொருநாளும் அவரது …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/76968

ந.பிச்சமூர்த்தியின் படைப்புப் பயணம்
சிறந்த எழுத்தாளர்கள் இருவகை. மானுடத்தின் அடிப்படை, நன்மையே என்ற நம்பிக்கை உடையவர்கள் முதல் வகையினர். மானுடத்தின் தீமையினால் இவர்கள் சீண்டப்படுகிறார்கள், சமநிலை குலைகிறார்கள். நன்மை மீதான தங்கள் நம்பிக்கையைத் தக்கவைத்துக் கொள்ளப் போராடுகிறார்கள். அதன் போக்கில் ஒரு விடையை, நிலைப்பாட்டை அடைகிறார்கள். அல்லது நம்பிக்கை இழந்து வெறுமையில் முட்டி நின்றுவிடுகிறார்கள். இரண்டாம் வகையினர் மானுடத்தின் அடிப்படை இயல்பு, தீமையே என்ற நம்பிக்கை உடையவர்கள். மானுடத்தின் விரிவில் இருந்து நன்மையைத் தேடித் திரட்டி எடுக்க, நம்பிக்கையை நிறுவிக் கொள்ள …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/23796

Older posts «

» Newer posts