Category Archive: அறிவிப்பு

வெண்முரசு கலந்துரையாடல் : சென்னை – ஜூலை 2016
இந்த மாத சென்னை கூட்டம் பன்னிரு படைக்களத்தை பற்றியதாக இருக்கும். சுதா ஸ்ரீநிவாசன் “சுனந்தை முதல் கிருஷ்ணை வரை” என்கிற தலைப்பில் உரையாற்றுவார். அதற்கடுத்து மணிமாறன் (பாண்டிச்சேரி)  அவர்கள் தன் உரையை நிகழ்த்துவார். வெண்முரசு வாசகர்களையும், வெண்முரசு குறித்து அறிய ஆர்வம் உடையவர்களையும் அன்புடன் அழைக்கிறோம்.. நேரம்:- வரும் ஞாயிறு (17-07-2016) மாலை 4:00 மணிமுதல் 08:00 மணி வரை இடம்:- SATHYANANDHA YOGA CENTRE, 15/11, SOUTH PERUMAL KOIL, 1ST STREET, VADAPALANI (NEAR …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/88965

வெய்யோன் செம்பதிப்பு முன்பதிவு
  வெய்யோன் – வெண்முரசு நாவல் வரிசையில் ஒன்பதாவது நாவல்.கர்ணனைப்பற்றிய நாவல் இது. 848 பக்கங்கள் கொண்ட நாவல் இது. 40 வண்ணப் படங்களும் இந்நாவலில் உள்ளன. செவ்வியல் என்பது அனைத்துவகையான புனைவுவகைகளுக்கும் உள்ளே இடமளிப்பது. அதன் இயல்பே தொகுப்புத்தன்மைதான். அதற்குள் ஒருமையையும் ஒத்திசைவையும் அது அடையமுயல்கிறது. அதன் மையத்தரிசனத்தால் அதை நோக்கிச் செல்கிறது. வெய்யோன் இயல்பாகவே பரசுராமனின் கதையிலிருந்து தொடங்கி கர்ணனைக் கண்டடைகிறது. அன்னையென்றும் காதலி என்றும் துணைவி என்றும் பெண்மையால் அலைக்கழிக்கப்படும் கர்ணனின் சித்திரமாக …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/88859

இயல், தமிழ் இலக்கியத்தோட்ட விருதுகள்
டொரெண்டோவில் 2016, ஜூன் 18ம் தேதி அன்று தமிழ் இலக்கியத் தோட்டத்தின் பதினாறாவது இயல் விருது விழா ராடிஸன் ஹொட்டலில் நடைபெற்றது. இம்முறை வாழ்நாள் சாதனைக்கான இயல் விருது திரு இ.மயூரநாதன் அவர்களுக்கு வழங்கப்பட்டது. உலகளாவிய பன்மொழிக் கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவை ஆற்றல் வாய்ந்த குழுமமாக உருவாக்கியதே திரு மயூரநாதனின் சாதனையாகும். இயல் விருதைத் தொடர்ந்து மற்றைய விருதுகளும் அறிவிக்கப்பட்டன. சுந்தர ராமசாமி நினைவாக நிறுவப்பட்ட காலச்சுவடு அறக்கட்டளை ’கணிமை விருது’ திரு சே.இராஜாராமன் எனும் இயற்பெயர் கொண்ட நீச்சல்காரனுக்கு …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/88573

வெண்முரசு கலந்துரையாடல் – ஜூன் 2016
அன்புள்ள நண்பர்களுக்கு, வரும் ஞாயிறறுக்கிழமை (12/06/2016) இம்மாதத்திற்கான வெண்முரசு கலந்துரையாடல் வடபழனியில் உள்ள நம் நண்பர் செளந்தரின் ‘சத்யானந்தா யோகா நிலையத்தில்’  நடக்கவிருக்கின்றது. நம் குழும நண்பர் வேணு தயாநிதி அவர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வார். ஞாயிறு மாலை நான்குமணிக்கு கலந்துரையாடல் துவங்கும். வெண்முரசு வாசகர்களையும், வெண்முரசு குறித்து அறிய ஆர்வம் உடையவர்களையும் அன்புடன் அழைக்கிறோம். முகவரி மற்றும் நேரம்: சத்யானந்தா யோகா நிலையம் 15/11 தெற்கு பெருமாள் கோவில் முதல் தெரு வடபழனி (ஆற்காடு …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/88259

ஸ்பிடி சமவெளிப்பயணம்
பெங்களூரிலிருந்து நேற்று காலை 930க்கு விமானத்தில் சண்டிகர் வந்தோம்.  ராக்கெட் ராஜா என்று அழைக்கப்படும் நண்பர் இளையராஜா வரவேற்றார். அவர் ஏற்பாடுசெய்த காரில் சிம்லாவைக்கடந்தோம். ஒரு சிற்றூரில் தங்கியிருக்கிறோம். இம்முறை அன்றன்று பயணக்குறிப்பு எழுதமுடியாது. இனிமேல் இணைய வசதி கிடையாது. ஆகவே வந்தபின் பாக்கலாம் ஜெ    
Permanent link to this article: http://www.jeyamohan.in/88047

கோவையில் தினமலர் கட்டுரைகள் வெளியீட்டுவிழா
  நான் தினமலரில் அரசியல் குறித்து எழுதிய கட்டுரைகளின் தொகுதியான ‘ஜனநாயகச் சோதனைச் சாலையில்’ தினமலர் வெளியீடாக நூலாக வருகிறது அதன் வெளியீட்டுவிழா வரும் மே மாதம் 8 ஆம் தேதி கோவையில் நிகழவிருக்கிறது. கோவை நன்னெறிக்கழகம் அதை ஒருங்கிணைக்கிறது இடம்  சரோஜினி நடராஜ் கலையரங்கம் கிக்கானி பள்ளி கோவை நேரம் மாலை 6 மணி முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் டி.எஸ். கிருஷ்ண மூர்த்தி நூலை வெளியிடுகிறார் அனைவரையும் வரவேற்கிறேன்  
Permanent link to this article: http://www.jeyamohan.in/87569

சென்னையில் நண்பர்களுடன்…
சென்னையில் வரும் 30-4-2016 முதல் மூன்றுநாட்கள் இருப்பேன். சென்னையில் என் நண்பரும் யோகக்கலை ஆசிரியருமான சௌந்தர் அவர்கள் கட்டியிருக்கும் சத்யானந்தா யோகப்பயிற்சி நிலையத்தின் திறப்புவிழா. சௌந்தர் முன்னரே யோகநிலையம் நடத்திவருகிறார். அங்குதான் வெண்முரசு விமர்சனக்கூட்டம் மாதம்தோறும் நிகழ்ந்து வருகிறது. அதை இப்போது விரிவாக்கிக் கட்டியிருக்கிறார். மே மாதம் ஒன்றாம் தேதி யோகநிலையம் திறப்பு. அன்றே அங்கு நண்பர் டாக்டர் சுநீல் கிருஷ்ணன் அவர்களின் ஆயுர்வேத மருத்துவ ஆலோசனை நிலையமும் தொடங்கப்படுகிறது.  அன்று மாலை 4.00 மணிக்கு நடைபெறும் வெண்முரசு …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/87389

சத்தியத்தின் குமாரன் – ஜே.சி.குமரப்பா (நிலைத்த பொருளாதாரம் – நூல் வெளியீட்டு விழா)
மதிப்பிற்குரிய  ஜெயமோகன் அவர்களுக்கு, இறைவன் ஒரு போதும் எனது பிரார்த்தனைகளுக்குசெவி சாய்க்க தவறியதில்லை                                                                          – மகாத்துமா காந்தி நம்பிக்கை என்பது பரிபூரணமோ,கீற்றளவோ அதனை எவ்வளவு கைக் கொள்கிறோம் என்பதே நமது வாழ்வின் வெளிப்பாடு.சாமான்ய மனிதரான காந்தி அவரின் உள்ளம்,ஆன்மா மற்றும் செயல்பாட்டின் வழியே ஒளியினை பெற்றுக் கொண்டவர்கள்,தீவிரமாக சத்தியத்தை தொடர்ந்தனர்.அப்படி தன் வாழ்க்கையை சுட்டெரிக்கும் நெருப்பினை போலவே அமைத்துக் கொண்டவர் ஜே.சி.குமரப்பா . ஜே.சி.குமரப்பா  அவர்கள் உருவாக்கிய காந்திய பொருளாதார சிந்தனைகள்,செயல் திட்டங்கள் அவரின் கால …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/87423

கொடிக்கால் அப்துல்லா – என் உரை
  குமரிமாவட்ட உருவாக்கத்தில் பங்குகொண்ட தலைவர்களில் ஒருவரும், தொழிற்சங்க முன்னோடியுமான  கொடிக்கால் ஷேக் அப்துல்லா அவர்களைப்பற்றி எழுதப்பட்ட ‘கொடிக்கால் ஷேக் அப்துல்லா படைப்பாளிகளின் பார்வையில்’ என்னும் நூல் நாளை நாகர்கோயிலில் வெளியாகிறது நாள் 17 -4-2016 நேரம் மாலை 6 மணி இடம் கஸ்தூரிபாய் மாதர் சங்கம் கலெக்டர் ஆபீஸ் அருகே நாகர்கோயில்   தலைமை பொன்னீலன் நூல் வெளியீடு ஜெயமோகன் நூல் ஆய்வுரை ஆ. ஷண்முகையா எம் எஸ் அலிகான் நூல் பெற்றுக்கொள்பவர் புதுக்கோட்டை கே …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/87038

நெல்லையில் பேசுகிறேன்
    நெல்லையில் வரும் ஏப்ரல் 3 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று லட்சுமி மணிவண்ணனின் கவிதைநூலான ’கேட்பவரே’ ஐ வெளியிட்டுப் பேசவிருக்கிறேன்   அனைவரும் வருக    
Permanent link to this article: http://www.jeyamohan.in/85874

Older posts «