Category Archive: அரசியல்

ப்ரெக்ஸிட் முடிவும் கொய்மலர் வர்த்தகமும்
    ப்ரெக்ஸிட் முடிவும் கொய்மலர் வர்த்தகமும் 1.கென்ய மலர் மன்றம் தன் சுற்றறிக்கையில், ப்ரெக்ஸிட் முடிவினால் கென்ய கொய்மலர் ஏற்றுமதி குறிப்பிட்ட அளவு சரிவடையக்கூடும் என்று அறிவித்துள்ளது. 2.உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதார நாடான பிரிட்டன், மலரும், மலர் சார்ந்த பொருட்களிலும் கிட்டத்தட்ட ஒரு பில்லியன் யூரோக்கள் சந்தை பங்கு கொண்டதும், நெதர்லாந்தின் இரண்டாவது பெரிய இறக்குமதி சந்தையுமாகும். அதன், 2015-ன் நெதர்லாந்திலிருந்து கொய்மலர் மற்றும் உள்ளரங்க செடிகள் இறக்குமதி மதிப்பு 900 மில்லியன் யூரோக்கள். …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/88875

கேரள வன்முறை
http://www.bbc.com/news/world-asia-india-36299827 அன்புள்ள ஜே எம் மேலே உள்ள இணைய முகவரியில் உள்ள கட்டுரையை வாசித்தேன்.  கல்வி அறிவு மேம்பட்ட கேரளத்தில் இது என்றால் நம்ப முடியவில்லைதான். காரணம் என்ன?  வன்முறையை செயற் களமாகக் கொண்ட கம்யூனிஸ்ட் கட்சியின் தாக்கமா?  இல்லை, இந்தியா முழுதும் சீழ்ப் படுத்திக் கொண்டு இருக்கும் சுயநலமும் அரசியல் சீர் கேடும் தானா ? அன்புடன் சிவா *** அன்புள்ள சிவா வழக்கம்போல இதையும் முன்னரே எழுதிவிட்டேன் வடகேரள வன்முறை வடகேரள வன்முறை ஒரு …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/87903

அரசியல் கடிதங்கள்
  அன்புள்ள ஜெயமோகன், உங்களது ‘ஏஷியா நெட்’ பேட்டியில் இரண்டு விஷயங்களைக் கவனித்தேன். முதலாவது ‘பாடி லாங்குவேஜ் (body language)’. மலையாளிகளுக்கென்று தனித்துவமான உடல் மொழி இருக்கிறது. சக மலையாளிகளிடம் சம்சாரிக்கும் போது அந்த உடல்மொழி அவர்களிடம் தூக்கலாக இருப்பதனைக் கவனித்திருக்கிறேன். உங்களிடம் அந்த உடல்மொழி மிஸ்ஸிங். இரண்டாவது உச்சரிப்பு. உங்களின் மலையாள உச்சரிப்பு ஏறக்குறைய தமிழைப் போல இருந்ததாக என்னுடைய தனிப்பட்ட எண்ணம். மூக்கின் உபயோகம் குறைந்தது தமிழில் புகுந்து விளையாடி கஸரத் எடுத்ததன் காரணமாக …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/87969

இன்றைய அரசியல்
. அன்புள்ள ஜெயமோகன், நலம்தானே? பொதுவாகவே உங்களைத் தொடர்பு கொள்வதென்றால் சற்று தயங்குவேன். உங்களை தொந்தரவு செய்கிறோமோ என்ற தயக்கம். ஆனால் இந்த முறை ஆர்வம் தாங்காமல் இதை எழுதுகிறேன். சமீபத்திய தமிழக தேர்தல் முடிவுகளை கவனித்திருப்பீர்கள். பெருநகர் சார்ந்த பலரும் இந்த எதிர்திசை மாற்றத்தை எதிர்பார்க்கவில்லை என்றே தோன்றுகிறது. என்னைப் பொறுத்தவரை இந்த முடிவு, எதிர்பாராததாகவும் ஏமாற்றம் அளிப்பதாகவும் உள்ளது. நிர்வாக மெத்தனத்திற்கும் அராஜகத்திற்கும் பரவலான ஊழலிற்கும் மக்கள் மீண்டும் எப்படி ஆதரவளித்தார்கள் என்று தெரியவில்லை. …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/87956

திருமா
சமீபத்தில்  தமிழக அரசியல்ச் சூழலைப்பற்றி மலையாளத்தில் நான் எழுதிய ஒரு கட்டுரையில் இன்றைய தமிழக அரசியலில் முதன்மையான தலைவர் என்று தொல்.திருமாவளவன் அவர்களைக் குறிப்பிட்டிருந்தேன் [ஆனால் தமிழகச் சாதியமனம் அவரை பொதுத்தலைவராக எளிதில் ஏற்றுக்கொள்ளாது என்றும்]. எல்லா தலைவர்களைப்பற்றியும் அவதானிப்புகளும் விமர்சனங்களும் கொண்ட கட்டுரை அது. மலையாளத்தில் திருமாவளவன் பரவலாக அறியப்படாதவர் என்பதனாலும், நான் கடுமையான விமர்சகன் என அறியப்பட்டவன் என்பதனாலும் அவரைப்பற்றி முழுமையான ஒரு கட்டுரை தரமுடியுமா என பல ஊடகங்கள் கோரியிருக்கின்றன. ஒரு நீள்கட்டுரை …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/87827

தினமலர் கடிதங்கள்
பெருமதிப்பிற்குரிய ஜெமோ அவர்களுக்கு, வணக்கம். தினமலர் நாளிதழில் வருகின்ற சட்டமன்றத் தேர்தலையொட்டி நீங்கள் எழுதிய அரசியல் கட்டுரைகள் எல்லாம் தொகுக்கப்பட்டு புத்தக வடிவில் வருவது குறித்து மிக்க மகிழ்ச்சி. இந்த கட்டுரைகள் மூலம் வாசகர்கள் மத்தியில் உண்மையான அரசியல் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தி,அவர்களின் அறியாமைகளை அகற்றி நமது நாட்டு ஜனநாயகத்தின் மேல் நம்பிக்கை கொள்ள தூண்டி உள்ளீர்கள். இதுவும் ஒரு எழுத்தாளர் ஆற்றவேண்டிய ஒரு சமூக சேவைதான். இந்தச் சூழ்நிலையில் மிகவும் முக்கியமானதும் கூட அதற்காக உங்களுக்கும், தினமலர் …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/87469

தினமலர் கடிதங்கள்
இன்று உங்கள் தினமலர் கட்டுரை சிறப்பு. எந்த நல்ல விஷயமும் மனதில் பதிய வைக்கும் வரை பல சறுக்கல் தொடரலாம். அது தோல்வி ஆகாது. ஒரு நாள் விழிப்புணர்வு வரும். இருப்பினும் இயற்கை வளங்களை களவாடும் வேகம் அது மீட்கப்படுமா?  அதுவரை தாங்குமா? என்ற கவலை வருகிறது. ஆனாலும் டாக்டர் ஜீவானந்தம் போன்றோர் இருக்கும் வரை தாங்கும். மாற்றம் வரும்….ஏனெனில் நல்லவை வெளிவர நாளாகலாம் கண்டிப்பாக நடக்கும். S.Natarajan *** அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய ஜெயமோகன் , …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/87434

தினமலர் 40,மீளும் வாசல்
  தேர்தல் அரசியல் குறித்த விவாதத்தின் ஒரு பகுதியாக என் கோவை நண்பர் நடராஜன் உணர்ச்சிகரமாக ஒரு கேள்வியைக் கேட்டார். ஒரு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களில் முக்கியமான அனைவருமே தகுதியற்றவர்கள் என்று எனக்குத் தோன்றுமென்றால் நான் யாருக்கு வாக்களிக்க வேண்டும்? தலைவலிக்கு பதிலாக திருகுவலியை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு மட்டுமே தமிழர்களுக்கு இன்று உள்ளது? தேர்தல்நேரத்தில் நாம் பேசுவது என்ன? எந்தக் கட்சி “பரவாயில்லை?” என்றுதானே? ஊழலா, எதேச்சாதிகாரப்போக்கா, பொறுப்பின்மையா, குடும்ப ஆட்சியா, உள்ளூர் ரவுடி அரசியலா எது …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/87392

தினமலர் – 39 , கேளாக்குரல்களைக் கேட்போம்
  ஒவ்வொரு தேர்தலிலும் நாம் அடிக்கடி காதில் கேட்கும் ஒரு ஏளனக்குரல், ‘அவர்களுக்கு வைப்புத்தொகைகூட திரும்பக்கிடைக்காது’ .டெபாசிட் காலி என்பது ஒரு கேலிச் சொல்லாகவே நம் நாவில் விளங்குகிறது. ஓர் அரசியல் தரப்பை மட்டம் தட்டவும், இழிவுபடுத்தவும் அவர்களுக்கு தேர்தலில் படுதோல்வி தான் கிடைக்கும் என்ற சொற்றொடரைத்தான் நாம் பயன்படுத்துகிறோம். ஜனநாயகத்தை புரிந்து கொண்ட ஒருவர் இந்த கூற்றிலுள்ள அபத்தத்தை அறிந்திருப்பார். ஒரு தரப்பு முழுமையாகவே மக்களால் புறக்கணிக்கப்படும் என்றால் அது இழிவானதா என்ன ?மக்கள் அத்தனை …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/87382

தினமலர் 38, அனைவருக்குமான ஆட்சி
  அன்புள்ள ஜெயமோகன் அனைவருக்குமான ஆட்சி கட்டுரை வாசித்தேன் கூட்டணி ஆட்சிக்கும் ஜனநாயகத்துக்கும் இடையே உள்ள உறவைப்பற்றிய இன்றைய கட்டுரைக்கருத்து முக்கியமனாது உலகில் ஜனநாயகம் சிறந்த பல நாடுகளில் கூட்டணிகள்தான் ஆள்கின்றன ஆனால் இங்கே கூட்டணிக்குழப்பங்கள் என்ற வார்த்தை வழியாக குழப்பமில்லா ஆட்சி என்றால் சர்வாதிகாரம்தான் என்று ஆக்கிவிட்டார்கள் ஜெயராமன் தனித்து நடப்பவர்கள் மீது எனக்கு பெரிய ஈர்ப்பு இருந்ததில்லை. காரணம்  அவர்களின் ஒற்றை இலக்கு. உங்களுடைய கட்டுரை சில மாற்றங்களை ஏற்படுத்தும் என தோன்றுகிறது. அந்தக் …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/87356

Older posts «