Category Archive: அனுபவம்

நான்கள்

2 (2)
  எண்பதுகளில் நான் எஸ்.ராமகிருஷ்ணனை சந்தித்து நிறைய பேசியிருக்கிறேன். 2007-ல் நீண்ட இடைவேளைக்குப் பின்னால் என்னைச் சந்தித்த பின்னர் அவர் சுகாவிடம் சொன்னதாகச் சுகா சொன்னார் ‘ஜெயமோகன் தானான்னே சந்தேகமா இருக்கு. நீங்க அவரை இருபது வருசம் முன்னாடி பாத்ததில்லை. ரொம்ப அடங்கிட்டார். ரொம்ப சிரிக்கிறார். ரொம்ப கனிஞ்சிட்டார்னு தோணுது’ அதை சுகா சொன்னபோது நான் எனக்குள் புன்னகை செய்தேன். நல்ல சொல்தான். ஆனால் கனிவு என்பது என்ன? தெரியவில்லை. ஒருவகை விடுபடுதல்தான் நான் அடைந்தது என்று …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/11693

புண்படுதல்
ஆசிரியருக்கு, நாம் ஆகும்பே அருவி வழியில் உரையாடியது தான், ஆனால் அது முற்றுப் பெறவில்லை. அங்கே கொண்ட அட்டையாக அது இன்னும் ஓட்டிக்கொண்டே இருக்கிறது , நீங்கள் வீடு திரும்பும் முன் இக்கேள்வி காத்திருக்கும் , ஆம் பாதையோர ஈரத்தில் அட்டைபோல. நாம் உண்மையையோ அல்லது உண்மை என நம்புவதையோ அப்படியே போது வெளியில் சொல்ல முடிவதில்லை, சில சமயம் நன்றாகத் தெரிந்த நண்பர்களிடம் கூட . இதனால் புண்பட்டுவிடுவார்களோ என்ற நிரந்தர அச்சத்துடனேயே ஒரு உரையாடலை …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/30073

தன்னறம்
‘திருடனை துரத்த நாய் உள்ளே வந்தது. திருடன் ஓடியும் நாய் உள்ளேயே சுற்றி வருகிறது!’Permanent link to this article: http://www.jeyamohan.in/7005

நெல்லை நினைவலைகள் -செல்வேந்திரன்
செல்வேந்திரன் எழுதிய பதிவு.நெல்லையை விட்டுச்செல்லும் நினைவுகள்.விமர்சனம் இருக்கிறது, ஆனால் அதை நாலைந்து உறைபிரித்துத்தான் வாசிக்கவேண்டும். வேண்டிய அத்தனைபேருக்கும் சீராகப் புகழ்மொழிகள், மரியாதைகள். எத்தனை சாமர்த்தியமான எழுத்து. விற்பனைநிபுணரியம் அல்லது விநியியம் என்னும் அழகியல் மரபை தமிழில் தோற்றுவிக்கும் பெருமை செல்வேந்திரனுக்கு உண்டு   நெல்லை நினைவலைகள்! 17 மாத வனவாசம் முடித்து மீண்டும் கோவைக்கே கிளம்புகிறேன். தலைப்பையும் முதல் வரியையும் பார்த்ததும் ‘அம்பி நோஸ்டால்ஜியாவை ஆரம்பிச்சுட்டன்’ என தலை தெறிக்க ஓடாதீர் உலகத்தீரே.. நிகழ்ச்சியின் இறுதியில் கேட்கப்படும் …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/88771

எனது கல்லூரி
என்னை என்னவாக ஆக்குவது என்று என் அப்பா முடிவுசெய்யவில்லை. அதற்காக அந்த சுதந்திரத்தை அவர் எனக்குத் தரவும் இல்லை. குலுக்கலில் போட்டார், அவரது நண்பர்கள் நடுவே. கோயில் திண்ணையில் அவர்கள் விவாதித்தார்கள். தங்கப்பன்நாயர் நான் ஒரு மிகச்சிறந்த ஆடிட்டர் ஆகமுடியும் என்று கணித்தார். இன்று தெரிகிறது, தங்கப்பன்நாயர் தன் வாழ்நாள்முழுக்க எடுத்த எந்த லாட்டரியிலும் பணம் விழவில்லை என்று நான் மார்த்தாண்டம் கிறித்தவக் கல்லூரியில் [ இன்று அது நேசமணி நினைவு கிறித்தவக் கல்லூரி] புகுமுக வகுப்பில் நல்ல …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/30269

குலதெய்வங்கள் பேசும் மொழி
சமீபத்தில் ஒரு திருமணத்துக்குச் சென்றிருந்தபோது அம்முக்குட்டி அத்தையைப்பார்த்தேன். நொந்துபோனவர்களாக தனியாக வெளியே அமர்ந்திருந்தார்கள். ‘என்ன அத்தை உள்ளே யாருமில்லையா?’ என்றேன். அத்தைக்கு வயது எண்பதுக்கும் மேல். வாழ்நாள் முழுக்க உறவுகளைத்தான் முக்கியமான விஷயமாக எண்ணிவந்திருக்கிறார்கள். திருமணம், பிரசவம், சண்டைகள், சமரசங்கள்,மரணம் ஆகியவையே வாழ்க்கை என ரத்தினச்சுருக்கமாக- ஆனால் சரியாக- புரிந்துவைத்திருக்கிறார்கள். ஆகவே அவற்றைப்பற்றி பேசவும் உறவினர்களைச் சந்திக்கவும் பெரிதும் விரும்புவார்கள். ‘என்ன சொல்ல? உள்ளே எல்லாரும் பேசும் மொழி எனக்குப்புரியவில்லை. நான் பேசினால் அவர்கள் சிரிக்கிறார்கள்’ என்றாள் …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/36606

இறங்கிச்செல்லுதல் – நித்ய சைதன்ய யதி
திருவண்ணாமலையிலிருந்து மழித்த தலையுடனும் காவி ஆடைகளுடனும் துறவிக் கோலத்தில் திரும்பிய பின் எனது புதிய பெயர் எல்லா இடங்களிலும் பரவிவிட்டது. என்னைச் சுற்றியும் அதே பழைய உலகம்தான். ஆனால் என் மனதுக்குள் ஏதோ மாற்றம் ஏற்பட்டுவிட்டது. சீருடை அணிந்த போலீஸ்காரன் அந்த உடுப்புக்குத் தகுதியானவனாகத் தன்னைத் தானாகவே வளர்த்துக் கொள்வது போன்றது அந்த அனுபவம் என்று நடராஜகுரு ஒருமுறை குறிப்பிட்டார். உண்மையிலேயே அது அத்தகைய அனுபவம்தான். எந்தத் துறவியையும் நான் முன்மாதிரியாக வைத்துக்கொள்ளவில்லை. உலக வாழ்வை எல்லாரும் …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/28705

எங்கே இருக்கிறீர்கள்?
எங்கே இருக்கிறீர்கள்? எத்தனை தூரம் தெரிகிறது எங்களை? காலமின்மையின் உயர்மேடையில் அல்லது அடியிலா புதைமணலில்
நின்றபடி பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள்தானே?Permanent link to this article: http://www.jeyamohan.in/7289

தட்சிணாமூர்த்தியும் கருப்பசாமியும்
  1982 ல் பாரதி நூற்றாண்டு விழாவை ஒட்டி அன்று தமிழின் மிக முக்கியமான பதிப்பாளராக இருந்த  ‘அன்னம் –அகரம்’ மீரா நூறு கவிதை தொகுதிகளை வெளியிட்டார். மிகச்சிறிய தொகுதிகள் அவை. ஆனால் தமிழ்க்கவிதை இயக்கத்தில் அந்தத் தொகுதிகள் மிகப்பெரிய பாய்ச்சலை உருவாக்கின. ஒரே வருடத்தில் வெவ்வேறு தளத்தைச் சேர்ந்த நூறு கவிஞர்களின் கவிதைகளை ஒரே பதிப்பகம் வெளியிட்டு சந்தைக்குக் கொண்டு வருவதென்பது தமிழ் இலக்கியத்திற்கு மிகப் புதிய செயல். அச்சும் பதிப்பும் வளர்ந்துள்ள இன்றுகூட அது …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/87694

கலைக்கணம்
”தமிழ் சினிமாவிலேருந்து நான் தப்பவே முடியாது. இதுக்குள்ளதான் என் கனவுகள் இருக்கு. ஏன்னா நான் சின்ன கைக்குழந்தையா இருக்கிற காலம் முதலே எங்கம்மா என்னைய தூக்கிட்டு சினிமாவுக்குப்போவாங்க. அதுக்கு முன்னாடி என்னை எங்கம்மா வயித்துக்குள்ள வைச்சிருந்த நாளிலேயே நான் சினிமாவை கேக்க ஆரம்பிச்சிருப்பேனோ என்னமோ. எனக்கு சினிமான்னு அறிமுகமாகிறது சத்தம் வெளிச்சம் சங்கீதம் எல்லாம் கலந்து மனசுக்குள்ள ஓடிட்டிருக்கிற கனவுகள்தான். மூணுவயசு வரைக்கும் நான் சினிமாவை ஒழுங்கா பாத்ததில்லை. கொஞ்சம் பாத்துட்டு தூங்கிடுவேன். அப்றம் கனவுகளும் வெளியே …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/1058

Older posts «