Category Archive: அஞ்சலி

ஞானக்கூத்தன் – ஆவணப்படம்
கவிஞர் ஞானக்கூத்தனைப்பற்றி நண்பர் கே.பி.வினோத் எடுத்த ஆவணப்படம் இது. நண்பர் கெவின்கேர் பாலா -விஜி தயாரித்தது. 2014 விஷ்ணுபுரம் விருதை ஒட்டி இது எடுக்கப்பட்டுவிழாவில் திரையிடப்பட்டது. ஞானக்கூத்தனின் ஆளுமை, உடல்மொழி, வாழ்க்கைச்சுருக்கம், இலக்கியப்பங்களிப்பு ஆகியவை இதில் சுருக்கமாக பதிவுசெய்யப்பட்டுள்ளன.  
Permanent link to this article: http://www.jeyamohan.in/89295

ஞானக்கூத்தன் மறைவு
தமிழ் நவீனத்துவத்தின் முதன்மையான துவக்கப்புள்ளி என ஞானக்கூத்தனை சொல்லலாம். நவீனத்துவத்துவத்தின் அடிப்படை இயல்புகளான எதிர்ப்பு, வன்மை, கசப்பு ஆகியவை நுட்பமான பகடியாக வெளிப்பட்ட கவிதைகள் அவருடையவை.  ஏறத்தாழ 30 ஆண்டுகள் சென்னயில் ஒரு இலக்கிய மையமாக அவர் திகழ்ந்தார்.  ஆத்மாநாமிலிருந்து தொடங்கி இரண்டு தலைமுறை கவிஞர்கள் அவரிடமிருந்து உருவாகி வந்தனர்.  தமிழில் ஒரு நவீனத்துவ அலையை உருவாக்கிய கசடதபற அவரது முன்முயற்சியால் வெளிவந்தது. ஞானக்கூத்தனுக்கு 2014 ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது வழங்கப்பட்டது.  தமிழின் முதன்மையான முன்னோடி …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/89290

வே.சபாநாயகம்- அஞ்சலி
  வே.சபாநாயகம் தமிழ்ச்சிற்றிதழ்களைப்பற்றி தொடர்ச்சியாக எழுதிவந்தவர். சிற்றிதழ்சேகரிப்பாளர். வெளிவந்த சின்னாட்களிலேயே மறக்கப்பட்டுவிடும் சிற்றிதழ்களை தொகுத்து அவற்றின் உள்ளடக்கம் குறித்து எழுதி ஒரு தொடர்ச்சியை உருவாக்க அவரால் முடிந்தது. அர்த்தபூர்வமான  தொடர்ச்சியையே நாம் வரலாறு என்கிறோம். அவ்வகையில் அவர் வரலாற்றை தொகுத்தவர். வே.சபாநாயகம் மறைந்த செய்தி சற்றுமுன் வந்தது. நவீன தமிழ் இலக்கியத்தின் ஆர்வலரும் பேராசிரியரும் எழுத்தாளரும் நல்ல பண்பாளருமாகிய திரு வே சபாநாயகம் (81 வயது) அவர்கள் இன்று (4.7.2016) காலை 5.30அளவில் நெஞ்சடைப்பு காரணமாக விருத்தாசலம் …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/88738

நல்லதோர் வீணை
  இப்படி இன்னும் பல ஆயிரம் கவிதைகளை எழுதியிருக்கக் கூடிய கவிஞர் குமரகுருபரன், என்னை விட வயதில் இளையவர். என்னை விட வயதில் மூத்த படைப்பாளிகளிடம் எனது வேண்டுகோள் இதுதான். ‘அண்ணாச்சிகளா! நீங்க குடிச்சு கட்டமண்ணாப் போனது போகட்டும். சின்னப் பயலுகக்கிட்ட உங்க வீரக்குடிப்பிரதாபங்களைச் சொல்லிக் கெடுக்காதிய.’   நல்லதோர்வீணைசெய்தே – சுகா கட்டுரை    
Permanent link to this article: http://www.jeyamohan.in/88477

குமரகுருபரன் அஞ்சலி – செல்வேந்திரன்
  கவிஞர் குமரகுருபரன் மாரடைப்பினால் காலமானார் எனும் செய்தி இந்த நாளின் மீது ஒரு இடியாக வந்து விழுகிறது. இரண்டு வருட நட்பு. ஆனால் சந்தித்ததில்லை. அகாலத்தில் என்னை அழைக்கக் கூடிய இருவரில் ஒருவராக அவர் இருந்தார்.  கடந்த வியாழன் அன்றுதான் குமாரை முதன் முதலில் சந்தித்தேன். இரவு ஒன்பதரை மணி வாக்கில் அழைத்து ஒரு மதுவிடுதிக்கு வரச்சொன்னார்.  இரவு பத்து மணி துவங்கி நள்ளிரவு வரை பியர் அருந்திக்கொண்டே கவிதைகள், புதிய நாவல்கள், ஊடக அனுபவங்கள் …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/88465

அஞ்சலி, குமரகுருபரன்
  இப்போது பாரீஸில் இருக்கிறேன். காலை ஆறுமணிக்கு வந்த தொலைபேசி அழைப்பில் கவிஞர் கதிர்பாரதி பேசினார். குமரகுருபரன் மறைந்தார் என்று அவர் சொன்னபோது நெடுநேரம் யார் என்றே புரியவில்லை. மறையக்கூடியவர்கள் என்று சிலரை நம் மனம் கணக்கிட்டிருப்பதில்லை. புரிந்ததும் இறப்புச்செய்திகள் அளிக்கும் வெறுமை, சலிப்பு, எவரிடமென்றில்லாத ஒரு கோபம். தொலைதூர அயல்நிலத்தில் இறப்புச்செய்தியைக் கேட்பது மேலும் அழுத்தம் அளிக்கிறது. மனுஷ்யபுத்திரன் காலையிலேயே அழைத்திருந்தார். அதைப்பார்த்தபோது உடனே பேசவேண்டும் என்று மனம் எழுந்தது. பின்னர்  மீண்டும் சலிப்பு குமரகுருபரன் …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/88463

மணி-3
    மணியை கதாநாயகனாக வைத்து ஒரு சினிமா எடுக்க லோகி எண்ணியிருந்தார். பெரெச்சன் என்பது அதன் பெயர். காணாமல்போன எருமையைத்தேடி ஒரு கிராமத்திற்கு வரும் பெரெச்சன் என்னும் அயலவனின் கதை. அவன் ஒருவகை ஞானி. ஒருவகை மூடன். மணி அதைநடிக்க மிகவும் விரும்பினார். கஸ்தூரிமானுக்குப்பின் லோகி பொருளியல் சிக்கலில் இருந்தபோது இலவசமாக நடிக்கவும் முன்வந்தார். அன்று அவரது இடம் உச்சத்தில் இருந்தது. ஆனால் லோகி அவர் செய்தவற்றுக்கு மறுஉதவியாக அதைப்பெற தயங்கினார். ”அவன் என் தம்பி.. …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/85471

மணி -2
[ தொடர்ச்சி ] மிகச்சிறந்த நகைச்சுவையுணர்ச்சி கொண்டவர் மணி. படப்பிடிப்பரங்கில் சில நடிகர்களைச் சுற்றித்தான் கூட்டம் இருக்கும். முக்கியமானவர் கமல்ஹாசன். இன்னொருவர் மோகன்லால். பெரும்பாலான கதாநாயகர்கள் தனிமையை விரும்புபவர்கள். அது அவர்களின் உயரமான இடத்தைத் தக்கவைக்க உதவும். கமல் இருக்குமிடம் நகைச்சுவையால் வெடித்துக்கொண்டே இருக்கும். அவரது நண்பர்கள் அனைவருமே அவரது நகைச்சுவைக்கூற்றுக்களைத்தான் அவர் இல்லாதபோதும் பேசிக்கொண்டிருப்பார்கள். அவ்வகைமையில் ஒருவர் மணி. படப்பிடிப்புக்கு மணி வருகிறார் என்பதே ஒரு பெரிய கொண்டாட்டம். பாபநாசம் படத்தின் ’பிரமோ’வில் மணி எனக்காக …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/85462

மணி-1
கலாபவன் மணியை நான் முதலில் கண்டது ஒரு தங்கும்விடுதியின் மின்தூக்கிக்குள். அதன் கதவுகள் மூடப்போகும்கணத்தில் உள்ளே நெடுக்குவாட்டில் கால்பங்கு தெரிந்த லோகிததாஸ் என்னிடம் “வா வா, கேறு” என்றார். நான் காலைவைத்து அது மூடுவதைத் தடுத்து உள்ளே சென்றேன். லோகி என் தோளைத் தொட்டு “மெலிந்துவிட்டாயே” என்றார். அது அவர் எப்போதும் சொல்வது. குண்டாக இருப்பதுதான் அழகு, ஆரோக்கியம் என நம்புபவர் அவர் .குண்டாக ஆவதற்காக வாழ்க்கைமுழுக்க முயன்றவர்.. அருகே நின்றவர் கலாபவன் மணி. நான் ஓரிரு …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/85453

அஞ்சலி: கே.ஏ.குணசேகரன்
  நாட்டரியல் ஆய்வாளரும் , நாடக ஆசிரியரும், நடிகருமான முனைவர் கே.ஏ.குணசேகரன் இன்று பாண்டிச்சேரியில் அவரது இல்லத்தில் காலமானார் என்று அறிந்தேன். அவருடன் எனக்கு நெருக்கமான பழக்கம் இல்லை. அவரது நாடகமான பலியாடுகளை வாசித்திருக்கிறேன். தமிழகத்து தலித் இயக்கத்தின் முக்கியமான பிரச்சாரகர்களில் ஒருவர். தீவிரமாக அத்தரப்பை முன்வைக்கும் நாடகம் அது..அதைப்பற்றி ஒரு குறிப்பையும் எழுதியிருக்கிறேன்.   இருமுறை நிகழ்ச்சிகளில் சந்தித்து ஓரிரு மரியாதைச் சொற்கள் பரிமாறியிருக்கிறோம்.என் நூறுநாற்காலிகள் கதை வெளிவந்தபோது தொலைபேசியில் அழைத்து பேசிக்கொண்டிருந்தார். உரத்த சிரிப்பொலிகளுடன் …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/83469

Older posts «