Category Archive: வெண்முரசு

வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 10
மூன்று : முகில்திரை – 3 அபிமன்யூ சாத்யகியின் அறைக்குள் நுழைந்து முகமன்கள் ஏதுமில்லாமலேயே “நாம் நம்மை கோழைகள் என அறிவித்துக்கொள்ளவேண்டியதில்லை, மூத்தவரே. எனக்கு இங்கிருக்கும் படை எதுவாக இருந்தாலும் அது போதும். இவர்கள் வேட்டுவர்கள். விற்திறன்கொண்டவர்கள். இவர்களைக்கொண்டே நான் பாணரை வென்று மீள்கிறேன்” என்றான். சாத்யகியின் அருகே சென்று “என் வில்திறனை நீங்கள் அறியமாட்டீர்கள். எந்தை எக்களத்திலும் தோற்றதில்லை. நான் அவர் மைந்தன். என்னை கிருஷ்ணார்ஜுனன் என்றே அழைப்பார்கள் என் ஆசிரியர்கள். ஒரு வாய்ப்பு கொடுங்கள்…” …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/102235

வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 9
மூன்று : முகில்திரை – 2 பிரலம்பன் வந்து அபிமன்யூவின் அறைவாயிலில் நின்று வணங்கினான். அபிமன்யூ விழிதூக்கியதும் “படைத்தலைவர் அறையில் இருக்கிறார். தங்களை வரச்சொல்லி ஆணை வந்துள்ளது” என்றான். அபிமன்யூ எழுந்து குழல்கற்றைகளை நீவி தலைக்குமேல் விட்டுவிட்டு நடந்தான். “ஆடையணிகள்…” என பிரலம்பன் சொல்ல “தேவையில்லை” என்றான். பிரலம்பன் உள்ளத்திலோடிய எண்ணத்தை உய்த்துணர்ந்துகொண்டு “ஆம், இங்கே காற்றிலிருந்தும் சுவர்களிலிருந்தும்கூட செயலின்மையும் சோர்வும் வந்து மூடுகிறது” என்றான். அவர்கள் முற்றத்தை அடைந்ததும் அங்கே நின்றிருந்த காவலன் “அருகேதான். நடந்தே …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/102207

வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 8
மூன்று : முகில்திரை – 1 யாதவ நிலம் முழுக்க பகலிலும் இருள் மூடிக்கிடப்பதாக அபிமன்யூவுக்குத் தோன்றியது. பிரலம்பனிடம் “என்ன இது? இன்னும் இருள் விலகவே இல்லை” என்றான். பிரலம்பன் தன் புரவியைத் தட்டி சற்று முன்னால் வந்து “புரியவில்லை, இளவரசே” என்றான். “பொழுது இன்னுமா விடியவில்லை?” என்றான் அபிமன்யூ. “இல்லையே… விடிந்து நெடுநேரமாயிற்றே…” என்று அவன் சுற்றிலும் பார்த்தான். “இருள் விலகாதிருக்கிறது” என்றான் அபிமன்யூ. அவன் என்ன சொல்கிறான் என்றே புரியாமல் சுற்றிலும் நோக்கியபடி பிரலம்பன் …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/102214

வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 7
இரண்டு : கருக்கிருள் – 3 அபிமன்யூ கௌரவவனத்தின் வாயிலை அடைந்ததுமே உள்ளே ஏரி உடைந்து அலையெழுநீர் அணைவதுபோல ஓசை கேட்டது. செறிவாக மரங்களை நட்டு உருவாக்கப்பட்ட கோட்டையின் வாயில் மூங்கில்களால் ஆனது. அங்கே காவலுக்கு இருந்த இரு வீரர்களும் முதியவர்களாக இருந்தனர். ஒருவரின் மீசையைத் தாங்கும் எடையே அவர் உடலுக்கிருக்காதென்று தோன்றியது. இன்னொருவர் ஒரு கண் மட்டும் கொண்டவர். சிப்பி போன்ற நோக்கிலாக் கண் அவர் நோக்குகையில் துள்ளியது. அபிமன்யூ அவர்களை அணுகி “உள்ளே செல்ல …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/102178

வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 6
இரண்டு : கருக்கிருள் – 2 இடைநாழியில் நடக்கையில் அபிமன்யூ “இளைய கௌரவர்கள் எங்கே தங்கியிருக்கிறார்கள்?” என்றான். பிரலம்பன் “அவர்கள் ஆயிரம்பேர். அனைவரையும் கங்கைக்கரையில் நூறு மாளிகைகள் அமைத்து தங்கவைத்திருக்கிறார்கள். துரோணரின் குருநிலை அதற்கு அருகில்தான். இங்கிருந்து செல்ல சற்று பிந்தும்… ஆனால் இரண்டு நாழிகையில் சென்றுவிடலாம்…” என்றான். “ஆனால் இப்போது இங்குதான் இருக்கிறார்கள். அவர்களுக்கு மேற்குக்காட்டில் நூறு மாளிகைகள் உள்ளன. அங்கே வேட்டையாடியும் விளையாடியும் வாழ்கிறார்கள். நகருக்குள் புகுந்தால் யானைக்கூட்டம் புகுந்தது போலத்தான்.” “அங்கே செல்ல உமக்கு …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/102016

வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 5
இரண்டு : கருக்கிருள் – 1 அபிமன்யூ காலைவெயில் எழுந்த பின்னர் அஸ்தினபுரியின் கோட்டைவாயிலை வந்தடைந்தான். வணிகவண்டிகளின் நீண்டநிரை வலப்பக்கத்திலும் பயணிகளின் நிரை இடப்பக்கத்திலும் நீண்டிருக்க கோட்டைவாயிலில் காவலர்கள் அவர்களை நிறுத்தி முத்திரைகளை நோக்கி, வணிகர்களிடம் சுங்கம் கொள்வதற்குரிய முத்திரைகளைப் பதித்து உள்ளே அனுப்பிக்கொண்டிருந்தார்கள். இரு நிரைகளுக்கும் நடுவேயிருந்த அரசுப்பணியாளர்களுக்கும் காவலர்களுக்குமான சாலையில் அவன் நுழைந்தான். மறுபக்கம் நின்ற புரவிகளை நோக்கியபடி புரவிமேல் சற்று திரும்பி தொற்றியதுபோல் அமர்ந்திருந்தான். கரகத்தை ஆடுமகள் தலையில் கொண்டுசெல்வதுபோல அவனை கொண்டுசென்றது புரவி. …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/101915

வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 4
ஒன்று : துயிலும் கனல் – 4 ஏவலன் அறைக்குள் வந்து “கணிகர்” என்றான். சகுனி காலை மெல்ல அசைத்து அமர்ந்துகொண்டு வரச்சொல்லும்படி தலையசைத்தார். ஏவலர் கணிகரை தூளியில் தூக்கிக்கொண்டுவந்து அவரருகே இடப்பட்ட தாழ்வான மெத்தைப்பீடத்தில் அமர்த்தினர். கணிகரின் வலிமுனகல்களையும் முகமாற்றத்தையும் கூர்ந்து நோக்கியபடி சகுனி முகவாயை தடவிக்கொண்டிருந்தார். கணிகர் பெருமூச்சுகளுடன் அமைதியாகி “மஞ்சம் மீண்டு சிவமூலியை இழுத்த பின்னர்தான் என்னால் மீளமுடியும். அவைநிகழ்வுகளைப்போல கொடியவை பிறிதில்லை” என்றார். பீடத்தில் சாய்ந்து அமர்ந்திருந்த துரியோதனன் கணிகர் வரும்வரை ஒரு …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/101889

வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 3
ஒன்று : துயிலும் கனல் – 3 விதுரர் தன் அமைச்சை அடைந்தபோது கனகர் அவருக்காகக் காத்து நின்றிருந்தார். அவர் பல்லக்கிலிருந்து இறங்குவதற்குள்ளாகவே அருகே வந்து பணிந்தார். அவர் விழிதூக்க “பேரரசர் உடனே அழைத்துவரச் சொன்னார்” என்றார். விதுரர் “அங்கே எவரெல்லாம் இருக்கிறார்கள்?” என்றார். “காந்தாரர் இருக்கிறார். அரசரும் இருக்கிறார்.” விதுரர் “கணிகர்?” என்றார். “அவரை அழைத்துவரச் சென்றிருக்கிறார்கள். அங்கரையும் அழைத்துவரும்படி ஆணை.” விதுரர் தன் அறைக்குச் சென்று அமர்ந்து இன்னீர் கொண்டுவரச்சொல்லி அருந்தினார். ஆலய வழிபாட்டுக்குரிய வெண்பட்டுச் …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/101872

வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 2
ன்று : துயிலும் கனல் – 2 முதற்காலைக்கும் முந்தைய கருக்கிருளில் அஸ்தினபுரியின் கோட்டைமுகப்பு அதன்மேல் எரிந்த பந்தங்களின் ஒளியாக மட்டும் தெரிந்தது. மலைவளைவுகளில் காட்டெரியின் சரடுபோல. சகுனி புரவியின் கடிவாளத்தைப் பற்றி அதை பெருநடையில் ஓடவிட்டுக்கொண்டு சென்றார். அவர் சென்ற குளம்படியோசையை குறுங்காடு வெவ்வேறு இடங்களில் எதிரொலித்துக் காட்டியது. காடெங்கும் இலைநுனிகளிலிருந்து பனித்துளிகள் சொட்டும் ஓசை மழைவிட்ட பொழுதென கேட்டது. கோட்டைமுகப்பின் பெருமுற்றத்தில் வணிகர்களின் தட்டிக்குடில்களும் பாடிவீடுகளும் செறிந்திருந்தன. அப்பால் கோட்டைவாயிலுக்கு இரு பக்கமும் நீண்டிருந்த …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/101812

வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 1
ஒன்று : துயிலும் கனல் – 1 குந்தியின் இளஞ்சேடி பார்க்கவி படகிலிருந்து முதலில் இறங்கினாள். அவள் காலடியில் பாலப் பலகை அசைந்தது. நிலத்தின் உறுதியை கால்கள் உணர்ந்ததும் அவள் திரும்பிநோக்கி தலைவணங்கினாள். குந்தி நடைபாலத்தின் மீது ஏறி மேலாடையை சீரமைத்துக்கொண்டாள். பார்க்கவி “தேர் வந்துள்ளது, பேரரசி” என்றாள். குந்தி தலையசைத்தாள். அவளுடைய அணுக்கக் காவலர் வேல்களுடன் இறங்கி அவளுக்கு இரு பக்கமும் குரல் கேட்காத தொலைவில் நின்றனர். அவள் நடந்ததும் உடன் வந்தனர். காற்றே இல்லாமல் …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/101860

Older posts «