Category Archive: விமரிசகனின் பரிந்துரை

பியூஷ்: ஓர் உண்மையான சமூகப் போராளிக்காக- கண்ணன்
  நண்பர் கண்ணன் தண்டபாணி அவரது வலைப்பூவில் எழுதியது இது. கண்ணன் எனக்கு அணுக்கமானவர் என்பதைவிட என் பெருமதிப்புக்குரியவர் என்பதே பொருத்தம். இயற்கை வேளாண்மையை வாழ்க்கைமுறையாகக் கொண்டவர். காந்திய அடிப்படையில் வாழ்க்கையை அமைத்துக்கொண்டவர். நம் காலகட்டத்தின் அபூர்வமான இலட்சியவாதிகளில் ஒருவர். கண்ணன் தன் குழந்தையை பள்ளிக்கு அனுப்பாமல் சுயகல்வியால் வளர்க்கிறார் என்பதையே ஒரு பெரும் சாதனையாக நினைக்கிறேன். அவரது மகள் சென்ற விஷ்ணுபுரம் விழாவன்று மாலையில் பாடியது நெகிழ்ச்சியூட்டும் நினைவு. அபாரமான அறிவாற்றலும் நுண்ணுணர்வும் கொண்டவள் அவள். …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/89013

பனை இந்தியா! – ஒரு மகத்தான பயணம்
  என் நண்பரும் கிறித்தவப்போதகருமான காட்சன் மேற்கொண்ட ஒரு பயணம் பற்றி அவர் எனக்கு எழுதியிருந்தார்   அண்ணன்! கடந்த மே 16 முதல் ஜூன் 2 வரை எனது இரு சக்கர வாகனத்தில் மும்பையிலிருந்து நாகர்கோவில் வரை பனை மர வேட்கைப் பயணம் ஒன்றை நிகழ்த்தினேன். உங்களில் பெற்றுக்கொண்ட ஒளியால் அப்பயண அனுபவங்களை தொடராக்க முயற்சிக்கிறேன். சில பிழைகள் இருந்தாலும் எழுதவேண்டும் என்ற உந்துதலால் விடாமல் எழுதுகிறேன். இன்று 25 அத்தியாயத்தை முடித்த பின்பே உங்களிடம் …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/88809

தெளிவத்தை ஜோசப்பின் குடைநிழல் – மதிப்புரை
  2013 ஆம் வருடத்திற்கான விஷ்ணுபுரம் விருதை பெற்ற தெளிவத்தை ஜோசப் எழுதிய குடைநிழல் என்னும் நாவலைப்பற்றி மண்குதிரை எழுதிய மதிப்புரை. தி ஹிந்து நாளிதழில்   தெளிவத்தை பற்றி ஒரு குறிப்பு
Permanent link to this article: http://www.jeyamohan.in/88840

நெல்லை நினைவலைகள் -செல்வேந்திரன்
செல்வேந்திரன் எழுதிய பதிவு.நெல்லையை விட்டுச்செல்லும் நினைவுகள்.விமர்சனம் இருக்கிறது, ஆனால் அதை நாலைந்து உறைபிரித்துத்தான் வாசிக்கவேண்டும். வேண்டிய அத்தனைபேருக்கும் சீராகப் புகழ்மொழிகள், மரியாதைகள். எத்தனை சாமர்த்தியமான எழுத்து. விற்பனைநிபுணரியம் அல்லது விநியியம் என்னும் அழகியல் மரபை தமிழில் தோற்றுவிக்கும் பெருமை செல்வேந்திரனுக்கு உண்டு   நெல்லை நினைவலைகள்! 17 மாத வனவாசம் முடித்து மீண்டும் கோவைக்கே கிளம்புகிறேன். தலைப்பையும் முதல் வரியையும் பார்த்ததும் ‘அம்பி நோஸ்டால்ஜியாவை ஆரம்பிச்சுட்டன்’ என தலை தெறிக்க ஓடாதீர் உலகத்தீரே.. நிகழ்ச்சியின் இறுதியில் கேட்கப்படும் …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/88771

கங்காஸ்நானம்- ஜானகிராமன்
அன்புள்ள ஜெயமோகன், தி.ஜாவின் கதைகளை திரும்ப வாசிக்கையில், முந்தைய வாசிப்பின் வியப்பும், கதையின் மீதான விமர்சனமும், அடுத்தடுத்த வாசிப்புகளில் மேலும் மேலும் மேம்படுகின்றனவே அல்லாமல் ஒருபோதும் குறைவு படுவதில்லை. ஆக, அவருடைய கதைகள் என்றென்றும் எப்போதைக்கும் பூரணத்துவத்துடன் மிளிர்பவை. சிற்பியின் இலாவகத்துடன் கதையைச் செதுக்கும் அவரின் எழுத்தாற்றால் எப்போதும் வியந்து போற்றுதற்குரியது; நாளும் நினைந்து ரசிப்பதற்குரியது. சமீபத்தில் நான்  தி.ஜாவின் கங்கா ஸ்நானம் கதையைத் திரும்ப வாசித்த போது, தங்களின் நதி கதை நினைவில் வர, இரண்டையும் …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/88683

கிறித்துவமும் அறிவியலும்
நண்பர் சிறில் அலெக்ஸ் சொல்வனம் இதழில் எழுதியிருக்கும் கட்டுரை இது. வழக்கமான புரிதல் என்பது நவீன அறிவியல் மற்றும் தத்துவசிந்தனைக்கு கிறித்தவ திருச்சபை முற்றிலும் எதிரானதாக இருந்தது என்பதுதான். கலிலியோவை சிறையிட்டது போன்ற சில செயல்பாடுகள் அதற்கான குறியீடாக உலகமெங்கும் பேசப்படுகின்றன. சிறில் அந்த தரப்பை கிறித்துவத்தின் கோணத்தில் நின்று மறுக்கிறார். கிறித்துவச் சபை அறிவியலுடன் ஒரு மோதலையும் உரையாடலையும் மேற்கொண்டது என்கிறார். கிரேக்க தத்துவம், பண்டைய அறிவியல் ஆகியவற்றின் அடிப்படைகளை தன் கோணத்தில் அது ஏற்றுக்கொண்டது …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/88638

கல்வியில் ஒரு புதிய நகர்வு
  ஒத்திசைவு ராமசாமி எழுதியிருக்கும் இந்தக்குறிப்பு ஆர்வமூட்டுகிறது. மத்திய அரசின் பாடத்திட்டங்களும் சரி, பயிற்சிக்கான வழிமுறைகளும் சரி பெருமளவுக்கு ஆக்கபூர்வமாக மாறியிருக்கின்றன. சூழல் மாறாததற்கு இரண்டு காரணங்கள். ஒன்று, ஆசிரியர்களின் பயிற்சியின்மை. வேலைகிடைத்தபின் எதையாவது வாசிக்கும், பயிலும் ஆசிரியர்கள் பத்தாயிரத்தில் ஒருவர்மட்டுமே. இன்னொன்று கல்விநிறுவனங்கள் கல்வியை வெறும் வணிகமாகக் கருதி குரங்குகளுக்குக் கொடுக்கும் பயிற்சியை மானுடக்குழந்தைகளுக்கு அளிப்பது    
Permanent link to this article: http://www.jeyamohan.in/88571

காந்தியின் மொழிக்கொள்கை
  காந்தியின் மொழிக்கொள்கை என்ன? எப்போதும் விவாதிக்கப்படும் தலைப்பு குறித்த முக்கியமான கட்டுரை இது. காந்தி இன்று தளம் மெல்லமெல்ல தமிழில் காந்திபற்றிய அனைத்து செய்திகளையும் கொண்ட ஒரு முக்கியமான மையமாக ஆகிவிட்டிருக்கிறது. அனைத்து ஆய்வுகளுக்கும் அதிலேயே தரவுகள் சேர்ந்துவிட்டிருக்கின்றன. அதை பிடிவாதமாக நடத்திவரும் நண்பர் சுநீல் கிருஷ்ணன், பங்களிப்பாற்றும் நட்பாஸ், ராட்டை போன்றவர்கள் பாராட்டுக்குரியவர்கள் காந்தியும் தேசியமொழிக்கொள்கையும்.  
Permanent link to this article: http://www.jeyamohan.in/88568

’என்றேதான் தோன்றுகிறது’
  யுவகிருஷ்ணா தெலுங்கு சினிமா, உள்ளூர் கில்மா, தொண்டர் அரசியல் என பலவகையான நிறங்களின் கலைடாஸ்கோப் கலவை. ஆனாலும் அவரை வாசிக்கச்செய்வது அவரது நகைச்சுவை. பழைய குமுதம் இதழ்களில் இந்த வகையான சுட்டித்தனம் கொண்ட பொறுப்பற்ற நகைச்சுவை ரசிக்கும்படியாக இருந்தது. யுவகிருஷ்ணா அதன் தொடர்ச்சி. இக்கட்டுரை அவரது சமீபத்திய நல்ல எழுத்து என நினைக்கிறேன்.சிட்டி ,சா..கந்தசாமி முதல் அழகியசிங்கர், பௌத்த அய்யனார், சிபிச்செல்வன் என இவ்வகை எழுத்துக்கு ஒரு பெரிய மரபே உண்டு. பச்சைத்தண்ணீரை பக்கோடாவாக சாப்பிடுதல் …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/88617

கரைந்த நிழல்கள் வாசிப்பனுபவம்
அன்புடன்  ஆசிரியருக்கு அசோகமித்திரனின்  தண்ணீர்  இப்போது  தான்  படித்து  முடித்தேன். தண்ணீருக்கு  பின்பாகவே கரைந்த  நிழல்கள்  எழுதப்பட்டிருக்க வேண்டும். இன்று அதன்பிறகு  எழுதப்பட்டது. தன்னை  வாசிப்பவர்களை தொடர்ந்து  முன்னுக்கு  இழுக்கும்  படைப்பாளியாக அசோகமித்திரன் எனக்கு  இப்போது  தெரிகிறார். இன்று  சில மாதங்களுக்கு  முன்பாகவே வாசித்திருந்தேன். கரைந்த  நிழல்கள் நான்  வாசித்தவற்றில் முக்கியமான  படைப்பெனக் கொள்கிறேன். அந்நாவலுடனான  என்  வாசிப்பனுபவம். http://sureshezhuthu.blogspot.in/2016/06/blog-post_59.html?m=1 அன்புடன் சுரேஷ் பிரதீப்
Permanent link to this article: http://www.jeyamohan.in/88351

Older posts «