Category Archive: வாசகர் கடிதம்

குறளுரை -கடிதங்கள்-2
    வணக்கம் அய்யா, நான், நீங்கள் உரையாடிய “குறளினிது” நிகழ்ச்சியில் பார்வையாளராக பங்கேற்றவன், நீங்கள் ஒவ்வொருநாளும் வழங்கிய இலக்கிய உரை மிகவும் நன்றாகவும் பயனுள்ளதாக இருந்தது பொதுவாக எழுத்தாளர்களுக்கு, பேச்சாளர்கள் போல் பேசுவது என்பது கடினமான ஒன்று. ஆனால் உங்கள் உரையாடல் சராசரியாக 2 மணி நேரம் என்னை கட்டி போட்டது. உங்கள் உரையாடலானது தி ஹிந்து வில் அப்துல் கலாம் அய்யா எழுதிய என் வாழ்வில் திருக்குறள் என்ற கட்டுரையை நினைவூட்டியது. உங்களுக்கும் நிகழ்ச்சி …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/94638

வானதி -அஞ்சலிகள்
  திரு ஜெயமோகன் அவர்களுக்கு, செல்வி வானதி மறைவிற்கு வருத்தம். இந்த கடிதம் தசை இறுக்க நோய்க்கான மருந்துகளைப் பற்றி பகிர்ந்து கொள்வதற்காக. பொதுவாக மரபணுக் குறைபாட்டிற்கு மருந்துகள் கண்டு பிடிப்பது மிகவும் கடினம். அப்படி கண்டு பிடித்தாலும் அவைகளின் செயல்திறன் அல்லது பயன்பாடு குறிப்பிடத்தக்கதாக அமைவதில்லை. 2016ம் ஆண்டில் இரண்டு மருந்துகள் தசை இறுக்க நோய்களுக்கு பலன் செய்யலாம் என கருதி விற்பனை செய்ய அமெரிக்காவில் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. 1.      nusinersen (brand name …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/94635

கன்றுகள் காடாகவேண்டும்!
  அன்புள்ள திரு.ஜெயமோகன் அவர்களுக்கு, வணக்கம். நலம். நலம் விழைக பிரார்த்திக்கின்றேன். இன்று மார்கழி 2, ஒரு வித திருப்தியுடன் எந்த வகையில் என்று தெரியவில்லை ஆனால் எண்ணிக்கொள்ளும்படியான நிறைவு இந்த கடிதம் எழுதிகிறேன். கார்த்திகை மாத மூன்றாம் வாரத்தில் தோட்டப் பணி தொடங்கி கார்த்திகை 24 அன்று செடி நடவு தொடங்கி அன்றே இனிதே நிறைவேறியது. அனைத்தும் மரப்பயிர் 30 வகையான மரங்கள், மரங்கள் என்பதை கடந்து புளி, புன்ணை, கொடுக்காப்புளி, கொய்யா, பலா, தான்றிகாய் …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/93445

யோகி சந்திப்பு -கடிதங்கள்
    அன்புள்ள ஜெ, எனக்கு நன்றாக நினைவில் உள்ளது; யோகி (சந்திப்பு)பற்றி நீங்கள் நித்யாவுடன் விவாதித்ததை “வாழ்விலே ஒரு முறை- முடிவின்மையில் இருந்து ஒரு பறவை” யில் எழுதி இருந்தீர்கள்; அதில் ஒரு வரி வரும்; நீங்கள் நித்யாவிடம் கேட்பதாக “நான் அவரை எரிச்சல் ஊட்டியிருப்பேனோ ” என்று , அதற்கு நித்யாவின் பதில் ” அது உன்னால் முடியுமா” இது என் நினைவில் என்றும் இருக்கிறது, இதில் இருந்து எனக்கு பல திறப்புகள் கிடைத்துள்ளன …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/93206

பின் தொடரும் நிழலின் குரல் -கடிதம்
  விஷ்ணுபுரம் வாசித்து முடித்ததும் அடைந்த உணர்ச்சிக் கொந்தளிப்புகளை கடிதம் மூலம் வெளிப்படுத்தலாம் என்று எண்ணி இருந்தேன், ஆனால் விஷ்ணுபுரம் வாசகர் விவாதங்களைப் படித்ததும் அங்கு நான் பதிவு செய்ய ஏதும் இல்லை என்ற வெறுமையில் கடிதம் எழுதாமல் கடத்திவிட்டேன். பின் தொடரும் நிழலின் குரல் வாசித்ததும் நம் வாசகர் விவாதங்களை அலசாமல் கடிதம் எழுதிவிட்டேன், இல்லை என்றால் இதற்கும் தைரியம் வந்திருக்காது என்று நினைக்கிறன். தங்கள் வாசகப் பரப்பில் உள்ள வாசகர்களை பல படிநிலைகளாக  எடுத்துக்கொண்டால், …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/93582

வாழ்வை நேசித்தவனுக்கு…
  மொத்தமாகப் படித்து சிறு மொத்தமாக தொகுத்து கொள்ளக்கூடியவறாக கல்யாணி அண்ணாச்சியை வைத்து கொள்ள கூடாது என்று சில கதைகளை படித்து அதில் மட்டும் ஊறிக் கிடந்து எழுதுகிறேன் போய்க்கொண்டு இருப்பவள்  போர்த்தி கொள்ளுதல் முழுக்கை சட்டை போட்டவரும் கதிரேசன் என்பவரும் ஓட்டுதல் – குறைவாக வார்த்தைகள் பயன்பட்டு ஒரு கதை மாந்தரின் உருவம், குண மற்றும் ஆளுமை பற்றிய பிம்பம் எளிதில் உருவாகி விடுகிறது. கண் மையை தொட்டு தொட்டு கண்ணில் இடுவது போல மஹேஸ்வரி, …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/93728

ஒண்ணுமே வாசிச்சதில்லே- கடிதங்கள்-2
  பிரிய ஜெ, நலம் தானே? “சாரி சார்! நான் ஒண்ணுமே வாசிச்சதில்லே!’ பதிவைப் படித்தேன். மிகச்சரியாக, ஒரு படைப்பாளியை சந்திக்கும் முறையை சொல்லியிருக்கிறீர்கள். எந்த வகைப் படைப்பாளியாகினும், தன் உணர்ச்சிகளையும் கற்பனையையும் கொதிநிலைக்கு ஏற்றி, படைப்பை இழைபிரிக்கும் ரசவாதத்தை நடத்தித்தான் தன் கலையை வெளிப்படுத்த முடியும். அவருக்குத் தன் படைப்புகள் யாவும் ‘பெற்ற பிள்ளைகளே’. யாரோ தாயொருத்தியின் கையிலுள்ள குழந்தையைப் பார்த்து நாம் சிரிக்கும் போது, பூரித்துப் போகிறாளல்லவா? அந்தப் பூரிப்போன்றே எழுத்தாளனுக்கும் ஏற்படும் ஆனந்தம். …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/93667

மென்மையில் விழும் கீறல்கள்
  அன்புடன் ஆசிரியருக்கு அதற்குரிய அத்தனை ஆரவாரங்களுடன் நடக்கிறது திருவிழா. யாருக்கும் ஒரு குறையும் இல்லை. தேர் இழுக்கிறார்கள். வேட்டுச் சத்தம் கேட்கிறது. ஆனால் இவையெல்லாம் நடப்பது மிட்டாய் விற்க வரும் அப்பா அவ்வப்போது வந்து பார்த்துச் செல்லும் ஒரு பன்னிரண்டு வயது வீட்டு வேலை செய்யும் சிறுமியின் மனதில் என்பது மனதை உலுக்கவே செய்கிறது. குழிகளாய் தரையில் நீண்டு செல்லும் தூண்களின் நிழல் ஒரு கிழவி மட்டும் ஒரு அறையில் கட்டிலில் படுத்திருக்கும் வேறு யாருமற்ற …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/93647

சின்னஞ்சிறு சிட்டே -கடிதங்கள்
  அன்புள்ள ஜெயமோகன், பல நாட்களுக்குப் பிறகு எழுதுகிறேன், நலமாக இருப்பீர்கள் என நம்புகிறேன். சின்னஞ்சிறு சிட்டே பாட்டைப் பற்றிய பதிவைப் பார்த்ததும் எழுதாமல் தீரவில்லை. எனக்கு மிகவும் பிடித்த பாட்டுக்களில் ஒன்று. அந்தக் காலத்து திரைப்பட lowbrow பாட்டுக்களில் ஒரு தனிக் கவர்ச்சி இருக்கிறதல்லவா? மந்திரிகுமாரியில் ‘அந்தி சாயுற நேரம்’, ஆரவல்லியில் ‘சின்னக்குட்டி நாத்தனா’, வண்ணக்கிளியில் ‘சித்தாடை கட்டிக்கிட்டு’, உத்தமபுத்திரனில் ‘புள்ளி வைக்குறான்’ என்று சொல்லிக் கொண்டே போகலாம். எஸ்.சி. கிருஷ்ணனுக்காகவே நேர்ந்துவிடப்பட்ட பாடல்கள், அவ்வப்போது …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/93475

வண்ணதாசன் ஒன்றையே எழுதுகிறாரா?
  ஜெ வண்ணதாசன் படைப்புகளைப்பற்றி நீங்கள் எழுதிய கட்டுரைத்தொடர் பல வினாக்களுக்குப் பதில் சொல்கிறது. அவரைப்பற்றிய இரு குற்றச்சாட்டுக்களைப் போகிறபோக்கிலே இன்று சிலர் எழுதிக்கொண்டிருக்கிறார்கள். ஒன்று, ஒரே வட்டத்தில் சுற்றிவருகிறார். இரண்டு, அன்பு கனிவு என ஒரே விஷயத்தைச் சொல்கிறார். உக்கிரமான விஷயங்களைச் சொல்வதில்லை. இவை ஒருவகை டெம்ப்ளேட் கருத்துக்கள். இவற்றைச் சொல்பவருக்கு ஒரு அறிவுஜீவிக்களை கிடைக்கின்றது. நல்ல வாசகன் நமுட்டுச்சிரிப்பு சிரிப்பான். ஆனால் இவர்களுக்கு ஒரு வகையான பொது அங்கீகாரம்தான் முக்கியம். வாழ்க்கையின் ஒரு கட்டத்தில் …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/93709

Older posts «