Category Archive: பொது

ஜல்லிக்கட்டு தடை -எதிர்வினைகள்
  நண்பர்களே ,    2 ஆண்டுகளுக்கு முன் வந்த தீர்ப்பு மற்றும் அதையொட்டிய பதிவு .   தற்போது தமிழகத்தில் நிகழ்வது ஒரு பேரெழுச்சி, இந்த அளவில் முன்னெப்போதும் இருத்திராதது. இது ஒரு குறிப்பிட்ட அமைப்பினாலோ தலைமையாலோ ஒருங்கிணைக்கப் படுவதில்லை, வழிநடத்தவும் படுவதில்லை. அதேபோல ஒரு பயன்பாட்டு நோக்கை முன்னிறுத்தியதும் அல்ல, ஒரு கலாச்சார அடையாளத்தை முன்னிறுத்தி ஒரு ஒருங்கிணைவு. இந்த வகையில் இது இந்தியாவுக்கே முன் மாதிரி. இறுதியில் தான் இந்தி எதிர்ப்பு போராட்டத்தை இத்துடன் …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/94739

குறளுரை கடிதங்கள் 3
  ஆசிரியருக்கு, அருமையான உரை. குறளின் வரலாற்று பார்வை அறிமுகம், குறள் தமிழில் பொருந்துமிடம், இந்திய தத்துவ புலத்தில் பொருந்திய இடம், சமணர்களின் பங்கு பற்றியெல்லாம் தெரிந்து கொண்டேன். அரசு, குடும்பம் பற்றியெல்லாம் மிக நன்றாக இருந்தது. மணிமேகலை முன் எழுந்த தெய்வம் மணிமேகலை, கல்வி பற்றி பேசியதெல்லாம் சிறப்பாக இருந்தன. மிக்க நன்றி. அன்புடன் நிர்மல் *** அன்புள்ள ஜெ குறள் உரை மிக நீளமானது கிட்டத்தட்ட ஐந்தரை மணிநேரம். ஆகவே தொகுத்துக்கொள்வது மிகக் கடினமானது. …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/94697

மோட்டார் சைக்கிள் பயணம்
  அன்பின் ஜெ   எனக்கு வாசிப்பு அனுபவம் என்பது பெரிய அளவில் இல்லை என்றபோதும் ஒருசில சமயங்களில் இன்னும் தெளிவாக சொல்லவேண்டுமெனில் நேரம் போகாது இருக்கும் சமயங்களில் உங்களது வலைதளத்திற்கு வந்து நீங்கள் எழுதியிருக்கும் பத்தியோ அலது சிறுகதைகளையோ படிப்பேன். எனக்கு பயணிப்பது என்பது மிகவும் விருப்பமானது. எந்தளவிற்கு என்றால் என்னை ஒரு ஆண் என்றோ இன்ன ஜாதி அலது இன்ன மதத்தைச் சேர்ந்தவன் என்றோ என்னை அறிமுகப்படுத்திக் கொள்வதை விடவும் என்னை ஒரு travellorராக …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/94644

ஊடகக் கறையான்கள்
  தமிழில் ஆனந்தவிகடன் வழியாகவே கேளிக்கை இதழ் x இலக்கிய இதழ் என்னும் வேறுபாடு உருவானது. அதைப் பழித்தும் இழித்தும் உரைப்பது சென்றகாலத்தில் சிற்றிதழ்களில் ஒரு மரபாக இருந்தது. ஆனால் நான் ஒரு சமூகப்பரிணாம நோக்கில் அவை இன்றியமையாத நிகழ்வுகள் என்றே அணுகிவந்தேன், அதையே எழுதியிருக்கிறேன். சென்றநூற்றாண்டின் தொடக்கத்தில் கல்வி மிகச்சிறுபான்மைக்குரியதாக இருந்தது. ஆகவே இலக்கியமும், கருத்துச்செயல்பாடும் அவ்வண்ணமே நீடித்தன. அக்காலகட்டத்தில் உருவான செய்தி இதழ்களும் இலக்கிய இதழ்களும் அறிவுப்பரிமாற்றத்தை மட்டுமே இலக்காகக் கொண்டவை, ஆகவே சிறிய …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/94596

சுடர்தனை ஏற்றுக.. -கடலூர் சீனு
  கொள்ளுவன கொள்ளுக கொண்டபின் கொடுப்பவர் ஆகுக ; தள்ளுவன தள்ளுக தள்ளியபின் தவமொன்று இயற்றுக; சொல்லொன்று சொல்லுக சொல்லில் சுடரொன்று ஏற்றுக. . .  [ஜெயகாந்தன்] என் தங்கை சிகிழ்ச்சையின் போது, மருத்துவர்களும் மருத்துவம் பயியலும் மாணவர்களும் அவள் மேல் காட்டிய அக்கறை அளப்பரியது. எட்டு மணிநேரம் பிடிக்கக்கூடிய சிக்கலான அறுவை என முடிவானதும். தங்கை ”ஒருக்கால் திரும்ப வர முடியாம போச்சுன்னா இந்த உடம்ப இந்த ஹாஸ்ப்பிட்டலுக்கே குடுத்திட்டு. வெச்சிக்கிட்டு இவங்க ஏதாவது படிக்கட்டும்” …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/94624

வானதி- நினைவுகளினூடாக…
கோவையில் வானவன் மாதேவியையும் இயலிசை வல்லபியையும் முதன்முறையாகச் சந்தித்த தருணம்என்னால் [கோவை 2011 ] என்னும் கட்டுரையாகப் பதிவுச்செய்யப்பட்டுள்ளது.  கோவைக்கு புத்தகக் கண்காட்சிக்காகச் சென்றிருந்தேன்.  நண்பர்களுடன் நாஞ்சில்நாடன் வீட்டுக்குச் செல்லும்படி வாய்த்தது. அங்குதான் அவர்கள் வந்திருந்தனர். முன்னர் அவர்களை வாசகிகளாக அறிந்து மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி வழியாகப் பேசியிருக்கிறேன்.   அதன்பின் ஈரோட்டில் நிகழ்ந்த அறம் நூல்வெளியீட்டு விழாவுக்கு அவர்கள் வந்திருந்தனர்.  [அறம் வெளியீட்டுவிழா நிகழ்ச்சிப்பதிவு ] அந்நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட படங்களில் அவர்கள் இருப்பதை இன்று எடுத்துப்பார்த்தேன். …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/94628

சம்ஸ்காரா- கடிதங்கள்
மதிப்புமிகுந்த எழுத்தாளர் செயமோகன் அவர்களுக்கு, தாங்கள் எழுதியிருந்த சமசுக்காரா கட்டுரைகளை வாசித்தேன். முதலில் நவின் கட்டுரை ஏமாற்றம் கொடுக்கவே உங்களதை வாசித்தேன் இரண்டுமே எனக்கு பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்தது. நான் அந்த நாவலை இருமுறை வாசித்துள்ளேன். நண்பர்களுக்கும் அன்பளிப்பாகக் கொடுத்துள்ளேன். அந்த நாவல் குறித்து விரிவாகவும் எங்கள் மத்தியில் பேசப்பட்டுள்ளது. எங்கள் அளவுக்கு அந்த நாவலை ஆழ புரிந்துகொண்டவர்கள் குறைவு என்றே நம்புகிறேன். பிராமணியத்தை எதிர்க்கும் ஒரு போராளியை இவ்வளவு மட்டமாக நீங்கள் இருவருமே தவறான புரிதலுடன் …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/94578

குறளுரை கடிதங்கள்-1
வணக்கம் ஜெ, நல்லா இருக்கீங்களா? குறள் சார்ந்து அழுத்தமாய் ஒலித்த, இன்னும் பல நாட்களுக்கு மனதில் எதிரொலிக்கும் ஆழமான குரல் தங்களின் மூன்று நாள் உரை. ‘கொடுப்பதழுக்கறுப்பான் சுற்றம்’ என்ற வரி என் வாழ்வில் ஏனோ அவ்வப்போது மனதில் வந்து செல்லும். ஏனென்று தெரியாத, ஆனால் எதுவோ குறித்து உணர்த்தும் விதமாக அமைந்த கணங்கள் அவை. தங்கள் வாழ்வின் ஊடாக குறள் தன்னை வெளிப்படுத்தி நின்ற கணங்களைக் கேட்ட போது சிலிர்த்துப் போனேன். அரங்கின் கைத்தட்டல் அங்கிருந்த …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/94621

திருக்குறள் உரைகள் காணொளியாக
அவர்களுக்கு, ஐயா ஜேயமோகன் ஆற்றிய இந்த உரையினை பதிவு செய்து வெளியிட வாய்ப்பளித்த அனைவருக்கும் நன்றி. கோவையில் இருந்த நாட்களில் தங்களது தம்பிகள் போன்று கவனித்து கொண்ட விஷ்ணுபுர வாசக வட்டத்தை சார்ந்த ஆரங்கா, செந்தில், மீனா க்கும் நன்றி. முதல் நாள் படம்பிடித்த காட்சிகளை எடிட் செய்யவே சற்று சவாலாக இருந்தது. அதனால் ஒரு நாள் தமதாமாக இன்று அனைத்து காணொளிகளும் வெளியிடப்பட்டுள்ளது. ஒரே சுட்டியில் அனைத்து காணொளிகளை காண குறளினிது – ஜெயமோகன் உரை …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/94608

தேசத்தின் முகங்கள்
  எங்கள் பயணங்களில் எப்போதுமே நண்பர் வசந்தகுமார் மனித முகங்களை எடுப்பதில்தான் ஆர்வம் காட்டுவார். பலசமயம் பயணம் முடிந்து திரும்பிவரும்போது சென்ற இடங்கள் மிகக்குறைவாகத்தான் படமாக்கப்பட்டிருக்கும். அதைவிடக்குறைவாகவே சென்றவர்கள் படத்தில் இருப்பார்கள். பயணத்தில் இருக்கும்போது எதற்கு இவர் வழியில் பார்த்த அனைவரையுமே படமெடுக்கிறார் என்ற எண்ணம் வந்து கொண்டிருக்கும். பயணம் முடிந்து வந்ததுமே புகைப்படத்தொகுப்புகளைப் பார்க்கும்போது அவற்றில் நிறைந்திருக்கும் முகங்களைப்பார்த்து ஒரு ஏமாற்றம் ஏற்படும். ஏனெனில் நாம் அவற்றில் நமது முகத்தைத் தேடுவோம். அப்போது விதவிதமான நிலங்களில் …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/93920

Older posts «