Category Archive: பயணம்

மாமங்கலையின் மலை – 1
வெண்முரசு நாவல் வரிசையில் கிராதம் என்னுள் எப்போதும் இருந்து கொண்டிருந்த குறிப்பிட்ட ஒருமனநிலையை உச்சப்படுத்தியது. உண்மையில் அந்த மனநிலை லோகித் தாஸ் இறந்த போது தொடங்கியது. லோகி திரும்பத் திரும்ப சொல்லிவந்த ஒன்றுண்டு. இதயநோயை எழுத்தாளர்கள் சிகிழ்ச்சை செய்து குணப்படுத்திக் கொள்ளக் கூடாது. அவருக்கு இதயத்தில் மூன்று அடைப்புகள் இருப்பதை முன்னரே மருத்துவர்கள் சொல்லியிருந்தார்கள். அது ஒரு கௌரவமான இறப்பை அளிக்கும். எழுத்தாளன் முதுமை அடைந்தால் அதன் பின் அவன் எழுத்தாளன் அல்ல, வெறும் முதியவன் மட்டும் …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/94925

பயணக்கட்டுரை
[நகைச்சுவை]   பயணம்சென்ற அல்லது செல்லாத ஒருவர் அப்பயணத்தில் நிகழ்ந்த அல்லது நிகழ்ந்ததாக அவர் எண்ணுகிற அல்லது அப்படி சொல்ல விரும்புகிற அனுபவங்களை எழுதுவது பயணக்கட்டுரை என்று சொல்லப்படுகிறது.பயணக்கதை என்றும் சொல்லப்படுவதுண்டு. இரண்டுக்கும் அதிக வேறுபாடு இல்லை. பயணக்கதைகள் தமிழகத்தில் ராணுவ வீரர்களினால் உருவாக்கப்பட்டவை என்பதற்கான கல்வெட்டு ஆதாரம் உள்ளது என்று ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். தமிழர்கள் அதிகமாக ஊர்விட்டு ஊர் சென்றது பட்டாளத்துக்குத்தான். போன இடத்தில் என்ன செய்தாலும் வந்த இடத்தில் அனுபவங்கள் பெருகுவதென்பாது  மானுட இயல்பே. …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/3709

மலைக்கிராமம் -கடிதங்கள்
  சார் வணக்கம்   உங்களின் மலைக்கிராம பயணத்தை வழக்கம் போல பொறமையுடனேதான்  வாசித்தேன்.  மழை பெய்த  ஈரத்தில் இருக்கும் மாடும் கன்றுமான  கயிற்றுக்கட்டிலுடன் இருந்த அந்த கிராமத்து வீட்டில் தங்கும் தொடக்கமே அருமையாக இருந்தது. .மக்காச்சோள இலைகள் எண்ணை பூசப்பட்ட வாள்கள்// எத்தனை சரியென்று மீண்டும் இன்று மக்காச்சோள இலைகளை எங்களூரில் பார்த்ததும் ரசித்தேன். மலை ஏறுவது குறித்த விளக்கம் மிக உதவி சார்.  எனக்கு மலை ஏறுவது என்பது இந்த காதடைத்து, நெஞ்சடித்து வேர்த்துக்கொட்டும் …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/94778

ஒரு மலைக்கிராமம்
டிசம்பர்  [2008] ஐந்தாம் தேதி காலை ஈரோட்டிலிருந்து கிளம்பி ராசிபுரம் நோக்கி பயணம். ஒரு மாருதிவேனில் நான் விஜயராகவன், கிருஷ்ணன், சிவா, தங்கமணி, பிரபு ஆகியோர் நண்பர் அசோக்குடன் அவரது சித்தப்பா வாழ்ந்த கிராமத்துக்குக் கிளம்பினோம். ராசிபுரத்திலேயே லட்சுமி கபேயில் சாப்பிட்டுவிட்டு ராசிபுரத்தை தாண்டி பட்டணம் என்ற ஊருக்கு வந்து அங்கிருந்தும் சென்று மதியம்தாண்டி அந்தக்கிராமத்துக்குச் சென்றோம். போதமலை என்று கிராமத்துக்குப் பெயர். போதமலை கிராமத்தை ஒட்டி செங்குத்தாக உயர்ந்து நிற்கும் மலை. மலையின் உடலெங்கும் பச்சை …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/923

ஆந்திரப் பயணம்
    இன்று, 10-12-2016 அன்று நானும் நண்பர்களும் ஆந்திரமாநிலத்திற்கு ஒரு ஐந்துநாட்கள் சுற்றுப்பயணம் கிளம்புகிறோம். அங்குள்ள என் வாசகியான நாகர்கோயிலைச்சேர்ந்த விசாலாட்சியின் அழைப்பு. விசாலாட்சி அங்கே அரசு உயரதிகாரி. சுந்தர ராமசாமிக்கு அணுக்கமான இளம் மாணவியாக நாகர்கோயிலில் பலமுறை சந்தித்திருக்கிறேன் நான் நேற்றே நாகர்கோயிலில் இருந்து நெல்லை நண்பர் சக்தி கிருஷ்ணனின் [சக்தி கலைக்களம் உரிமையாளர்] காரில் கிளம்பி மாலையில் கோவை வந்துவிட்டேன். செல்வேந்திரனின் இல்லத்தில் தங்கியிருந்துவிட்டு காலையில் நான் சக்திகிருஷ்ணன் மீனாம்பிகை செல்வா ஆகியோர் …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/93276

தனிமையும் பயணமும்
அன்புள்ள ஜெயமோகன், வீடு துறந்தவர்களைக் காணும் போதெல்லாம் எனக்கு மிகுந்த பிரமிப்பும் பொறாமையும் ஏற்படும். எத்தனையோ முறை அவர்களை ஏக்கத்தோடு கடந்து சென்றிருக்கிறேன். இதில் வாழ்க்கைச் சூழ்நிலைகளால் நிராகரிக்கப்பட்டவர்கள் ஒரு சாரர் இருந்தாலும் என்னைக் கவர்ந்தவர்கள் தன்னை அறியும் தேடலுக்காக நிச்சயமற்ற தன்மையை எதிர்கொள்ளத் துணிந்தவர்களே. உங்களின் “புறப்பாடு” அனுபவங்களைப் படித்தேன். இலக்கற்ற பயணத்தில் கிடைக்கும் சுதந்திரம் ஒரு Planned Tour-ல் கிடைப்பதில்லை. இலக்கை நிர்ணயித்து ஒரு இடத்திற்கு சென்று திரும்பி வர வேண்டும் என எண்ணும் …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/92026

சிங்கப்பூரில் இரண்டுமாதங்கள்…
உலகமெங்கும் கல்விமுறையில் மொழியின் இடம் மேலும்மேலும் முக்கியத்துவம் அடைந்துகொண்டே செல்லும் காலகட்டம் இது. குறிப்பாக அமெரிக்காவிலிருந்து இந்த அவதானிப்பு நிகழ்த்தப்பட்டு கல்விமுறையின் மையப்போக்காக ஆகியது. மொழியாக வழியாக அறிவதும், மொழியாக மாற்றப்படுவதும்தான் உண்மையில் அறிவென ஆகிறது. ஆகவே நூல்வாசிப்பை மிகப்பெரிய அளவில் இன்றைய கல்விமுறை வலியுறுத்துகிறது. சொல்லப்போனால், வாசிப்புப்பழக்கத்தை உருவாக்கி வழிகாட்டினால் மட்டுமேபோதும், குழந்தைகளே கற்றுக்கொள்ளும் என்பதே இன்றைய சிந்தனை இதில் புனைவுவாசிப்பு மேலும் முக்கியமான பங்கை வகிக்கிறது. அது பொழுதுபோக்கு அல்ல. கற்பனை மூலம் கற்கவும், …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/89036

மீண்டும் நாகர்கோயில்…

IMG_6945[1]
  இன்று, ஜூலை ஆறாம் தேதி மாலை எட்டு மணிக்கு திருவனந்தபுரம் வந்தோம். முந்தையநாள், ஐந்தாம் தேதி இரவு தொடங்கிய பயணம். அபுதாபி விமானநிலையத்தில் ஏழுமணிநேரம் காத்திருப்பு. திருவனந்தபுரம் விமானநிலையத்திற்கு அரங்கசாமி வந்திருந்தார். நள்ளிரவு 1130 மணிக்கு நாகர்கோயிலை வந்தடைந்தோம் சென்ற மே 19 ஆம் தேதி நான் வீட்டைவிட்டுக் கிளம்பியது. சினிமா வேலைகள். அப்படியே ஸ்பிடி சமவெளி. திரும்ப வந்தது ஒன்பதாம் தேதி. பத்தாம்தேதி லண்டனுக்குக் கிளம்பிவிட்டேன். இருபத்தைந்து நாட்களுக்குப்பின் மீண்டும் நாகர்கோயில். கிட்டத்தட்ட இரண்டுமாதம் …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/88778

ஸ்பிடி சமவெளிப்பயணம்
பெங்களூரிலிருந்து நேற்று காலை 930க்கு விமானத்தில் சண்டிகர் வந்தோம்.  ராக்கெட் ராஜா என்று அழைக்கப்படும் நண்பர் இளையராஜா வரவேற்றார். அவர் ஏற்பாடுசெய்த காரில் சிம்லாவைக்கடந்தோம். ஒரு சிற்றூரில் தங்கியிருக்கிறோம். இம்முறை அன்றன்று பயணக்குறிப்பு எழுதமுடியாது. இனிமேல் இணைய வசதி கிடையாது. ஆகவே வந்தபின் பாக்கலாம் ஜெ    
Permanent link to this article: http://www.jeyamohan.in/88047

ஸ்பிடி சமவெளி
நாளைக்காலை ஒன்பது மணி விமானத்தில் பெங்களூரிலிருந்து சண்டிகர் சென்று அங்கிருந்து காரில் இமாச்சலப்பிரதேசம் சென்று ஸ்பிடி சமவெளிக்கு ஒரு மலைப்பயணம் மேற்கொள்கிறோம். வழக்கமான கூட்டம்தான். ஸ்பிடி சமவெளிக்குச் செல்லலாம் என்று கண்டுபிடித்துச் சொன்னது கிருஷ்ணன். இமாச்சலப்பிரதேசத்தில் உள்ள இந்தப்பகுதி திபெத்திய பௌத்த மடாலயங்களுக்குப் புகழ்பெற்றது. இச்சமவெளி கோடைகாலத்தில் மட்டுமே அணுகக்கூடியது. மேமாதம் திறந்திருக்கும் என்பதை உறுதிசெய்துகொண்டு கிளம்பினோம். ஆனால் மழைக்காலம் தொடங்கிவிட்டது. பிரச்சினை ஏதுமிருக்காதென நினைக்கிறேன் ஸ்பிடி சமவெளி மலையுச்சியிலிருக்கும் ஒரு பெருந்தரிசு நிலம். ஸ்பிடி என்றால் …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/87912

Older posts «