Category Archive: நிகழ்ச்சி

அராத்து கேள்விகள்…
அன்புள்ள ஜெயமோகன் என் புத்தக வெளியீட்டு விழாவில் நீங்கள் கலந்து கொள்வதற்கு நான் என்னென்னமோ பிரயத்தனம் செய்ததாக பலர் நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். முன்பின் அறிமுகம் இல்லாத நான் ஒரே ஒரு இரண்டு வரி மெயில் மூலம் அழைத்து உங்கள் வருகையை உறுதிப்படுத்திக்கொண்டேன் என்றால் யாருக்கும் நம்புவது கடினமாகத்தான் இருக்கும்.என்ன செய்வது? எல்லாவற்றையும் கடினமாக்கியே பழக்கப் படுத்திக்கொண்டனர். நீங்கள் உறுதிப்படுத்திய பின்புதான் சாருவிடமே சொன்னேன். 6 பிரபலங்களை அழைத்து என்னுடைய 6 புத்தகங்களைப் பற்றி பேச விட்டு அகமகிழ்வதை …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/94388

சென்னையில் நண்பர்களுடன்…
சென்னையில் வரும் 30-4-2016 முதல் மூன்றுநாட்கள் இருப்பேன். சென்னையில் என் நண்பரும் யோகக்கலை ஆசிரியருமான சௌந்தர் அவர்கள் கட்டியிருக்கும் சத்யானந்தா யோகப்பயிற்சி நிலையத்தின் திறப்புவிழா. சௌந்தர் முன்னரே யோகநிலையம் நடத்திவருகிறார். அங்குதான் வெண்முரசு விமர்சனக்கூட்டம் மாதம்தோறும் நிகழ்ந்து வருகிறது. அதை இப்போது விரிவாக்கிக் கட்டியிருக்கிறார். மே மாதம் ஒன்றாம் தேதி யோகநிலையம் திறப்பு. அன்றே அங்கு நண்பர் டாக்டர் சுநீல் கிருஷ்ணன் அவர்களின் ஆயுர்வேத மருத்துவ ஆலோசனை நிலையமும் தொடங்கப்படுகிறது.  அன்று மாலை 4.00 மணிக்கு நடைபெறும் வெண்முரசு …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/87389

சென்னையில் ஒரு புதிய துவக்கம் – சுநீல்
அன்புள்ள ஜெ,  நலமா?  சென்ற ஆண்டு முதல் தொலைக்காட்சி நிகழ்ச்சி படப்பிடிப்புகளுக்கு செல்லும்போது நண்பர் சவுந்தர் வீட்டுக்கு செல்வது வாடிக்கையாகிவிட்டது. வடபழனியில் அவரது மையம் உள்ளது, இரவெல்லாம் பேசிக்கொண்டிருக்கவும் நண்பர்களை சந்திக்கவும் உகந்த இடமது. ஒரு நன்னாளில் பேச்சு வாக்கில் சென்னையில் இங்கு நான் ஏன் ஒரு மாதாந்திர ஓ.பி துவங்க கூடாது என்று யோசனை வந்தது. அதை சவுந்தரிடம் கூறியபோது உண்மையில் மகிழ்ந்தார். :’நானும் உங்ககிட்ட கேக்கணும்னு இருந்தேன்’ என்றார். வாழ்க்கை முறை சார்ந்த நோய்களை …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/87386

கொடிக்கால் – தியாகங்களுக்குமேல் திரை
  நேற்று [17-4-2016] கொடிக்கால் அப்துல்லா அவர்களைப்பற்றி படைப்பாளிகள் எழுதிய நினைவுகள் மற்றும் அவரது பேட்டிகளின் தொகுதியாகிய ‘படைப்பாளிகளின் பார்வையில் கொடிக்கால் ஷேக் அப்துல்லா’ என்னும் நூலின் வெளியீட்டுவிழா நாகர்கோயில் கஸ்தூர்பா மாதர்சங்கத்தில் நடைபெற்றது. ஆறுமணிக்கு நான் செல்லும்போதே நல்ல கூட்டம். கணிசமானவர்கள் கொடிக்காலின் நண்பர்கள், அவரிடம் பலவகையில் கடன்பட்டவர்கள். ஆனால் நாகர்கோயிலில் அடித்தளமக்களுக்கான பல தொழிற்சங்கங்களை நிறுவியவர் என்றவகையில் அந்தக்கூட்டம் மிகமிகக் குறைவானது. அவர்கள் அவரை அறியவே மாட்டார்கள். ஏனென்றால் அவர் இன்று கம்யூனிஸ்டுக் கட்சியில் …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/87096

கொடிக்கால் அப்துல்லா – என் உரை
  குமரிமாவட்ட உருவாக்கத்தில் பங்குகொண்ட தலைவர்களில் ஒருவரும், தொழிற்சங்க முன்னோடியுமான  கொடிக்கால் ஷேக் அப்துல்லா அவர்களைப்பற்றி எழுதப்பட்ட ‘கொடிக்கால் ஷேக் அப்துல்லா படைப்பாளிகளின் பார்வையில்’ என்னும் நூல் நாளை நாகர்கோயிலில் வெளியாகிறது நாள் 17 -4-2016 நேரம் மாலை 6 மணி இடம் கஸ்தூரிபாய் மாதர் சங்கம் கலெக்டர் ஆபீஸ் அருகே நாகர்கோயில்   தலைமை பொன்னீலன் நூல் வெளியீடு ஜெயமோகன் நூல் ஆய்வுரை ஆ. ஷண்முகையா எம் எஸ் அலிகான் நூல் பெற்றுக்கொள்பவர் புதுக்கோட்டை கே …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/87038

ஒருநாளின் கவிதை
  லட்சுமி மணிவண்ணனின் முழுக் கவிதைத்தொகுதியான “கேட்பவரே” நெல்லையில் இன்று [3-4-2016]வெளியிடப்பட்டது. நான் அதை வெளியிட  ‘நீயா நானா’ ஆண்டனி பெற்றுக்கொண்டார். விக்ரமாதித்யன் வாழ்த்திப்பேசினார் காலையில் நாகர்கோயிலில் இருந்து பேருந்தில் கிளம்பி நெல்லை சென்றேன். எட்டாம் வகுப்பு படிக்கும்போதுதான் பாரதிவிழா பேச்சுப்போட்டிக்காக முதன்முதலாக ஆரல்வாய்மொழியை கடந்தேன். இருபக்கமும் மலைகளின் எல்லை இல்லாமல் விரிந்து கிடந்த சமநிலம், முகில்களே அற்ற கண்ணாடிப்பரப்பான வானம், முள்செடிகளும் தொலைதூரப்பனைகளும் மட்டுமே கொண்ட வறண்ட விரிவு என்னை அழச்செய்தது. பேருந்தில் இருபக்கங்களிலிருந்தும் அனல் …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/86586

ஒரு மன்னிப்பு
உயிர்மை வெளியீடாக வந்த குமரகுருபரனின் மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்கமுடியாது’ கவிதைத்தொகுதியை நான் வெளியிட்டு உரையாற்றிய நிகழ்ச்சியை என் தளத்தில் வெளியிட்டிருந்தேன். அதில் உயிர்மைக்காக திரு. பிரபு காளிதாஸ் அவர்கள் எடுத்த என் படங்களைப் பயன்படுத்தியிருந்தேன். அது உயிர்மையின் பதிப்புரிமையை மீறும் செயல் என்றும், சுரண்டல் என்றும், ஆகவே அடிப்படை அறமே அறியாதவன் நான் என்றும் சொல்லி திரு பிரபு காளிதாஸ் அவர்கள் எழுதிய கடுமையான கண்டனத்தை வாசிக்க நேர்ந்தது.- அதை ஒரு கடிதமாக எனக்கே அனுப்பியிருக்கலாம். அந்நூல் உயிர்மை …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/84903

வாசகசாலை நிகழ்ச்சி
அன்புள்ள ஜெமோ, நலமா? வாசகசாலை பற்றிய உங்களது கருத்துக்களை எங்களுக்காக வீடியோ வழியாக பகிர்ந்து கொண்டதில் உண்மையிலேயே மிக்க மகிழ்ச்சி. அதற்காக வாசகசாலை சார்பாகவும், தனிப்பட்ட முறையில் என் சார்பாகவும் மனமார்ந்த நன்றி..! உங்களது பேச்சின் you tube link இதோ:- https://www.youtube.com/watch?v=trgczXWhLDY&feature=youtu.be வாசகசாலை ஆண்டுவிழா மற்றும் தமிழ் இலக்கிய விருதுகள் நிகழ்விற்கான முழுமையான அழைப்பிதழை இந்த மெயிலுடன் இணைத்துள்ளேன். உங்கள் பேச்சின் you tube link , நிகழ்விற்கான அழைப்பிதழ் ஆகிய இரண்டையும், வாசகசாலை மற்றும் அதன் செயல்பாடுகள் பற்றிய கீழ்க்காணும் …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/82943

ஆ.மாதவனுக்குப் பாராட்டுக்கூட்டம்
ஜெ நாஞ்சில்நாடனும் பூமணியும் சாகித்ய அக்காதமி விருது பெற்றபோது பாராட்டுக்கூட்டம் நடத்தினோம். ஆ.மாதவனுக்காக பாராட்டுக்கூட்டம் நடத்தும் எண்ணம் உண்டா? செல்வராஜ்   அன்புள்ள செல்வராஜ் பொதுவாக பிறரால் பாராட்டப்படாத சிற்றிதழ்சார் எழுத்தாளர்களுக்கு மட்டும் பாராட்டுக்கூட்டம் நடத்துவது என்பது எங்கள் வழக்கம் ஜோ டி குரூஸுக்கு பாராட்டுவிழா நடத்த விரும்பி கேட்டோம். அது தனக்குக் கூச்சமாக இருக்கிறது என்றும், பாராட்டுக்கூட்டம் என்பது மூத்த எழுத்தாளர்களை மிஞ்சி நிற்பதான தோரணையை அளிக்கும் என்றும் ஜோ சொன்னார். நண்பர் சிறில் அலெக்ஸ் …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/82868

குகைச்செதுக்கு ஓவியங்களும் டீக்கடையில் இலக்கியமும்
  எனக்கு ஒரு செல்பேசி அழைப்பு. அப்துல் ஷுக்கூர் எனத் தன்னை அறிமுகம் செய்து கொண்டார். என்னுடைய நூறு நாற்காலிகள் மலையாளத்தில் ஒரு சிறு நாவலாக வெளிவந்துள்ளது. அதற்கு பதிப்புரிமை இல்லை என அறிவித்திருந்தமையால் ஏழு வெவ்வேறு பதிப்பகங்கள் வெளியிட்டிருக்கின்றன. இரண்டு லட்சம் பிரதிகள் வரை விற்றிருக்கிறது அது. அந்நாவலைப்பற்றி ஒரு விவாதம் நிகழ்த்தவேண்டும் என ஷுக்கூர் அழைத்தார். நான் அமைப்புசார்ந்த இலக்கியக் கூட்டங்களை விரும்பாதவன். கல்லூரிகளின் கூட்டங்களைப்போல வீண்வேலையே வேறில்லை. ஆனால் ஷுக்கூரின் கூட்டம் என்னைக் …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/81860

Older posts «