Category Archive: நகைச்சுவை

Comedy

சூரியனுக்கே சென்ற தமிழன்!!!!!!!!!
மாலைநேரத்தில் நகைச்சுவைப் பதிவுகளைப்பார்த்துவிட்டுத் தூங்குவது என் வழக்கம். சமீபத்தில் பார்த்த உச்சகட்ட நகைச்சுவை இது. இதற்கு எத்தனை பார்வையாளர்கள். இதற்கு ஒரு எதிர்வினை, அதுதான் கிளாஸிக்! இப்பாடலில், பெரும்பாலான நூல்கள் சொல்லும் தமிழன் தான் அறிவியலின் முன்னோடி என்றகருத்தை தாங்கள் எவ்வித முரண்பாடுமின்றி ஏற்றுக்கொள்ளக்கின்றீர்கள்.ஆனால் அவர்கள் சொல்லும் அந்த சக்கரம்,வானூர்தி போன்றவையெல்லாம் இல்லையே,?என்பது தான் உங்களுடைய கருத்தாகும் . உங்களின் சந்ததேக்கத்திற்கு என்னுடைய பதில் அவையெல்லாம் பல்லாாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததால் தான் புலவர்கள் அதை பற்றி …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/93408

நித்ய சைதன்ய யதி
  ‘ஒரு துறவி அதுவும் குரு என்றால் ஒருவகையான அதிகாரம் இருக்கத்தான் செய்கிறது. அதற்கு பலரும் உள்ளூர ஆசைப்படுகிறார்கள். அதில் தப்பில்லை. ஆனால் குருக்களின் கஷ்டம் குருக்களுக்குத்தான் தெரியும்” என்றார் நித்ய சைதன்ய யதி ”என்ன கஷ்டம்? என் காலில் இத்தனைபேர் விழுந்தால் நான் உயிரைப்பணயம் வைத்து தினமும் அதிகாலையில் எழுந்து குளிர்ந்த நீரில் குளித்துவிட்டு பகவத் கீதை படிப்பதற்கும் தயார்” என்றேன் ”அது சாதாரணக் கொடுமை. வேறு எவ்வளவு இருக்கிறது!” நித்யா சொன்னார். ”பிரச்சினை ஒன்று, …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/258

யதா யதாய
  ”மச்சினா, அம்பதாயிரம் ரூவா அட்வான்ஸ் வெங்கிப்போட்டு திண்ணவேலி சங்சனிலே வெத்திலப்பேட்ட சுப்பையாவை போட்டுத்தள்ளப்போன நம்ம ‘கோழி’ அர்ச்சுனனும் ஒப்பரம் போன ‘உருண்டை’ கிருஷ்ணனும் அங்கிண என்னதான் செய்யுகானுகோ? எளவு, நேரமாச்சுல்லா? ” என்று செல்போனில் பிலாக்காணம் வைத்த ‘கறுத்தான்’ நாராயணனுக்கு அவனுடைய மைத்துனனும் இளைஞனுமாகிய செருப்பாலூர் கணேசன் திருநெல்வேலி ஜங்ஷனில் ஒரு வெற்றிலைக்கடை அருகே மறைந்து நின்றுகொண்டு செல்போனை காதில் செருகி ரகசியமாக கீழ்க்கண்டவாறு சொல்லலுற்றான். ‘அந்நா கன்யாகுமரி எக்ஸ்பிரஸிலேருந்து எறங்கி வெத்திலப்பேட்ட சுப்பையாவும் அவனுக்க …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/779

‘நூஸ்’
  நாணி ஆசாரிச்சியைத்தான் ஊரிலே ‘நூஸ்’ என்றழைப்பார்கள். அதிகாலையிலேயே எழுந்துவிடுவாள். எப்போதும் ஏதாவது சில்லறை வியாபாரம் கையிலிருக்கும். வீட்டைவிட்டுக் கிளம்பும்போது காலிக்கடவம்தான். போகும் இடங்களில் சக்கைக்குரு, முருங்கைக்காய் என கொள்முதல் செய்வாள். அவற்றை விற்கப்போகும் இடங்களில் கிடைக்கும் வாழைக்காய்,கோழிமுட்டை எதையும் வாங்குவாள். வியாபாரம் முடியும்போது சமயங்களில் கடவம் நிறைந்திருக்கும். நேராக அந்திச்சந்தைக்குப் போய் அவற்றை விற்று பணமாக்கி முந்தியில் முடிந்து கடவத்திலேயே மரச்சீனியும் மீனும் அரிசியும் வெஞ்சனமும் வாங்கிக் கொண்டு அப்படியே மண்ணாத்தி வீட்டுக்குப் பின்னால் ஒதுங்கி …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/576

கூட்டமோ கூட்டம்
‘’என்னா சார் போங்க…எலக்சன் வருதுல்ல…வேல பெண்டு நிமிருது… காலமடக்கி உக்கார நேரமில்லேன்னா பாத்துக்கிடுங்க… ஆனால் கட்சிவேலைன்னா அது எலக்சனிலதானே, ஏங்க? அதைப்பாத்தா போருமா? நம்ம சோறுல்ல?’’Permanent link to this article: http://www.jeyamohan.in/7755

யாப்பு
[நகைச்சுவை]   அந்நாட்களில் குழந்தைகள்மேல் பெரியவர்களின் வன்முறையைத் தடுப்பதற்கான சட்டங்கள் இல்லையாதலால் எட்டாம் வகுப்பிலேயே யாப்பிலக்கணம் சொல்லிக் கொடுக்க ஆரம்பித்திருந்தார்கள். துடிப்பான பையன்களாக இருந்தோம். தமிழய்யா ஏசுஞானமரியதாசன் அவர்கள் இடைவேளையில் மோதகம் தின்று டீ குடித்துவிட்டு புன்னகையுடன் வகுப்புக்கு வந்து சாக்குக்கட்டியால் கரும்பலகையில் “யாப்பு” என்று எழுதி அடிக்கோடிட்டதுமே சிரிப்பு ஆரம்பம். எங்கள் பள்ளியில் இயல்பாகப் புழங்கி வந்த ஒரு சொல்லுக்கும் அதற்கும் அரைக்கணமே வேறுபாடு. “லேய் என்னலே சிரிப்பு, மயிராண்டி. செருப்பால அடிச்சி தோல உரிச்சிருவேன்.சிரிப்பு… …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/310

நகைச்சுவை பற்றி-கடிதங்கள்
  அன்புள்ள ஜெயமோகன், அண்மையில் என் அம்மாவுக்கு நாஞ்சில் அவர்களின் கும்பமுனி கதைத் தொகுப்பைப் படிக்கக் கொடுத்தேன். உடல்நிலை மற்றும் சில கருத்து வேறுபாடுகளாலும் வேறு முகமாக மாறியிருந்த அவள் –  என் இளவயதில் நான் கண்ட –  எத்தனையோ குடும்பக்குழப்பங்களுக்கு இடையிலும் மனம் விட்டு சிரிக்கும் என் தாயை நான் மீண்டும் பெற்றுக்கொண்டேன். “இந்த மாதிரி வேற ஏதாவது புத்தகம் இருந்தா குடுடா” என்றவளிடம், உங்களின் ஜெ சைதன்யாவின் சிந்தனை மரபு கொடுத்தேன். அவளுக்குப் பிடித்திருந்தது. அடுத்ததாகக் …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/85268

ஒரு பொருளியல் விபத்து
காலையில் எழுந்ததுமே தற்கொலை பற்றி ஏதோ எழுதவேண்டியிருந்தது. அதன்பின் தற்கொலை செய்துகொண்டவர்களைப் பற்றிய நினைவுகள். தற்கொலை செய்துகொண்டவர்களை முன்பெல்லாம் உடனே நடுகல் நட்டு சாமியாக்கி வருடத்திற்கு ஒரு கோழி பலி கொடுத்து பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவந்துவிட்டிருக்கிறார்கள். இப்போது போல சிந்தனை செய்து செய்து அவர்களை வானளாவ வளர விடுவதில்லை. ‘தற்கொலை போல உண்மையான தத்துவச் சிக்கல் வேறில்லை’ என்றான் காம்யூ. உண்மைதான். கொலை போல நடைமுறைச் சிக்கலும் வேறு இல்லை. நடுவே இணையத்தின் கட்டணம் முடிந்துவிட்டது என்றது …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/778

ஈரட்டி பொதுக்குழு
ஃபேஸ்புக்கில் கழகத்தின் போர்வெல் ஆன நெல்லைசெல்வன் என்னும் செல்வேந்திரன் இவ்வாறு எழுதியிருப்பதை நண்பர்கள் பொதுக்குழுவில் கவனத்திற்குக் கொண்டுவந்தார்கள் பழசுக கிளம்பட்டும்; புதுசுக நுழையட்டும் என ஜெயமோகன் நடத்தி வரும் விடியல் மீட்புப் பயணம் தமிழக கட்சிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. குறிப்பாக கொங்கு மண்டலத்தில் கொங்கு முன்னேற்ற கழகத்தை விட விம்முரசர்களுக்கு வாக்குகள் அதிகம் இருப்பதை உணர்ந்த திமுக விக்டரி விஜயராகவன் மூலம் தூதனுப்பி கூட்டணியை உறுதி செய்திருப்பதாக தகவல்கள் கசிகின்றன. விஜயசூரியனுக்கு ராஜ்யசபா உறுப்பினர் பதவியும், விக்டரி …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/85318

யுவன்
  எம்.யுவன் என்றும் யுவன் சந்திரசேகர் என்றும் நண்பர்களால் யுவன் என்றும் நண்பரைப்போன்றே தோற்றமளிக்கும் சுரேஷ் கண்ணன் போன்றோரால் சந்துரு என்றும் அழைக்கப்படும் சந்திரசேகரன் ஸ்டேட் வங்கி ஊழியர்.காலைமுதல் மாலைவரை ஒன்றுமுதல் பூஜ்யம் வரை சலிக்காமல் எண்ணும் கேஷியர். கவிதைகள் எழுதிக் கொண்டிருந்தான். அதில் ஒன்றைப்படித்துவிட்டு கவுண்டரில் சின்னத் துளை வழியாக எட்டிப்பார்த்த ஒரு பெண் ”உங்க கதை படிச்சேன் சார். சூப்பரா இருந்திச்சு…”என்று சொல்லிப் பணம் வாங்கிப்போக உடனே கதைக்கு மாறியவன். நன்றாக உடையணிவதில் மோகம் …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/167

Older posts «