Category Archive: மதம்

நமது பக்திப்பாடல் மரபு– ஒரு வரலாற்று நோக்கு




பக்தி என்பது என்ன என்பதை முதலில் விளக்கியபிறகு மேலே செல்லலாம். ஐந்து இலக்க சம்பளத்தில் வேலை, பெண்ணுக்கு அமெரிக்க மாப்பிள்ளை, லட்ச ரூபாய் செலவிட்டும் தீரா வியாதி ஒரேநாளில் சரியாகப்போய்விடுதல் முதலிய பெரியவரவுகளுக்காக ஐந்து ரூபாய் ஊதுபத்தி பழம், நான்குரூபாய் தேங்காய், ஒரு ரூபாய் சூடம் முதலிய சிறிய செலவுகளைச் செய்வதும் நடுவே உள்ள இடைவெளியை உணர்ச்சிப்பெருக்கால் நிரப்பிக் கொள்வதுமாகும். இவ்வாறு உணர்ச்சிப்பெருக்கால் நிரப்புவது மனிதர்களால் இயல்பாக சாத்தியமற்றது என்பதனால் அதற்கு உதவும்பொருட்டு நாமாவளிகள், மந்திரங்கள், தோத்திரங்கள் …

மேலும் »




Permanent link to this article: http://www.jeyamohan.in/316

சாமியார்




”ஏமிரா, வச்சுட்டியே காமிரா’ என்ற பிரபல பஞ்ச் டயலாக்கை நினைவுகூர்க.







Permanent link to this article: http://www.jeyamohan.in/6935

இஸ்லாமியர்களுக்கு வீடு




வாடகைக்கு வீடு கிடைக்காதது குறித்து மனுஷ்யபுத்திரன் தமிழ் இந்துவில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். மிகவும் அந்தரங்கமான கட்டுரை. அவர் என் நண்பர் என்பதனால் அது வருத்தம் அளித்தது. அவருக்கு வீடு கிடைக்கவேண்டும் என விரும்புகிறேன் சில ஆண்டுகளுக்கு முன்பு இந்துக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் உருவாகிவரும் இடைவெளியைப்பற்றி அச்சத்துடனும் ஆதங்கத்துடனும் நான் ஒரு குறிப்பு எழுதியிருந்தேன். [வளரும் வெறி] சமூகவலைத்தளங்களில் கொதித்துக் கிளம்பினார்கள். இந்துக்களும் இஸ்லாமியரும் ஓருடல் ஈருயிராக மாமன்மச்சானாகப் பழகுவதாகச் சொல்லி பலநூறு கட்டுரைகள் வந்தன. அப்படி என்றால் …

மேலும் »




Permanent link to this article: http://www.jeyamohan.in/96889

கருத்துக்கெடுபிடி




  சில ஆண்டுகளுக்கு முன் நடிகர் முரளி திரிச்சூர் லலிதகலா அக்காதமி தலைவராக இருந்தபோது அவருடைய அலுவலக அறையில் பேசிக்கொண்டிருந்தோம். நடக்கவிருந்த சர்வதேச நாடகவிழாவுக்காக வந்திருந்த சிலர் உள்ளே வந்தனர். என்னை எழுத்தாளர் என அறிமுகம் செய்துகொண்டதும் இயல்பாகப் பேச்சு ஆரம்பமாகியது. ஒருவர் பாகிஸ்தான் நாடகாசிரியர். இன்னொருவர் துர்க்மேனிஸ்தான்காரர். ஒருவர் ஈரான். இன்னொருவர் பங்களாதேஷ். அவர்கள் ஒன்றாகவே உள்ளே வந்தனர். அனைவருமே இஸ்லாமியர். ஆனால் வெவ்வேறு உள்மதப்பிரிவுகளைச் சார்ந்தவர்கள். நாடகத்தை சென்ஸார் செய்வதைப்பற்றிப் பேச ஆரம்பித்தபோது ஒவ்வொருவரும் …

மேலும் »




Permanent link to this article: http://www.jeyamohan.in/96661

காமசூத்திரத்தின் பின்புலம்




அன்புள்ள ஜெயமோகன், வணக்கம். என்னுடைய வட இந்திய நண்பன் ஒருவனிடம் பேசிக் கொண்டிருக்கும்போது அவன் கூறிய விஷயம். “பொது மக்களிடம் சமண, பவுத்த மதங்கள் செல்வாக்கு கொண்டிருந்த தருணம், துறவு போன்ற கருத்துகள் மக்களால் பின்பற்ற ஆரம்பிக்கப்பட்டது. அதே சமயம் நிறைய போர்கள் அதனால் ஏராளமான உயிர்சேதம் என்று கணிசமான அளவு மக்கள் தொகை குறைந்தது. இந்த தருணத்தில்தான் இந்து மத அரசர்கள் வாத்சாயனரை ” காமசூத்திரா ” எழுதச் சொல்லி வற்புறுத்தினார்களாம். துறவு என்ற கருத்தியலுக்கு …

மேலும் »




Permanent link to this article: http://www.jeyamohan.in/96196

தீபாவளி யாருடையது?




  அன்புள்ள ஜெ நலமா? இந்திய மரபு, ஆன்மிக சிந்தனைகள், தத்துவங்கள் என உங்களின் பல தரவுகளை படித்து இருக்கிறேன், படித்தும் வருகிறேன். வெகு நாட்களாக மன ஆழத்தில் இருக்கும் கேள்வி இது, ‘தீபாவளி’ தமிழர் பண்டிகை இல்லையா? இது வட நாடு சென்று தென் நாடு மீண்ட ஒரு பண்டிகையா உண்மையில்? நமது தீப ஒளி பண்டிகையான ‘கார்த்திகை’ தீபத் திருவிழாவின் வட நாட்டு வடிவமா? நரகன் என்பவனே , தேவ அசுர மோதல்கள் என …

மேலும் »




Permanent link to this article: http://www.jeyamohan.in/9118

சண்டிகேஸ்வரர்




  அன்புள்ள திரு.ஜெயமோகன் அவர்களுக்கு, நலமா? போன வாரம் கும்பகோணம் சென்றிருந்தோம். அங்கு சுற்றியுள்ள கோயில்களுக்குச் சென்று வந்தோம். சண்டிகேஸ்வரரை வணங்கும்போது வழக்கம்போலக் கைதட்டினோம். அப்பொழுது என் சித்தி கைதட்டக்கூடாது என்றார். ஏன் என்றால் அவர் கோயிலை நிர்வாகம் செய்பவர் என்றார். திடீரென்று இன்று இணையத்தில் தேடிப்பார்த்தபோது நிறையக் கதைகள் கிடைத்தன. எல்லாக் கதைகளும் அவரவர் கற்பனைக்குத் தகுந்தவாறு சொல்லப்பட்டிருக்கின்றன. ஆனால் மையம் ஒன்றுதான். சிவபூஜை செய்து கொண்டிருந்த விசாரசருமருக்கு தந்தை எச்சதத்தன் இடையூறு செய்ய மழுவால் …

மேலும் »




Permanent link to this article: http://www.jeyamohan.in/20754

கிறித்துவமும் அறிவியலும்




நண்பர் சிறில் அலெக்ஸ் சொல்வனம் இதழில் எழுதியிருக்கும் கட்டுரை இது. வழக்கமான புரிதல் என்பது நவீன அறிவியல் மற்றும் தத்துவசிந்தனைக்கு கிறித்தவ திருச்சபை முற்றிலும் எதிரானதாக இருந்தது என்பதுதான். கலிலியோவை சிறையிட்டது போன்ற சில செயல்பாடுகள் அதற்கான குறியீடாக உலகமெங்கும் பேசப்படுகின்றன. சிறில் அந்த தரப்பை கிறித்துவத்தின் கோணத்தில் நின்று மறுக்கிறார். கிறித்துவச் சபை அறிவியலுடன் ஒரு மோதலையும் உரையாடலையும் மேற்கொண்டது என்கிறார். கிரேக்க தத்துவம், பண்டைய அறிவியல் ஆகியவற்றின் அடிப்படைகளை தன் கோணத்தில் அது ஏற்றுக்கொண்டது …

மேலும் »




Permanent link to this article: http://www.jeyamohan.in/88638

கடவுள், மதம் -கடிதங்கள்




அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, ஆன்மீகம்,கடவுள், மதம் பற்றிய இந்த பதிவு பற்றி என் மனதில் தோன்றியவை: “அன்றாட வாழ்க்கையில் அறம் நீடிப்பதற்கு கடவுள் தேவையாகிறார்” ஆனால் இன்று அந்த அறத்தை அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்ல ஆட்கள் தான் குறைவாக இருக்கின்றனர் இதற்கு இந்த தலைமுறை மக்களாகிய நாம் என்ன செய்ய போகிறோம் தெரியவில்லை. “கடவுள் என்ற மையத்தைச் சுற்றி எழுப்பப்பட்டுள்ள மதம் என்பது கடவுளில் இருந்து பெரிதும் வேறுபட்டது. மதம் என்பது பெரும்பாலும் ஒரு சமூக …

மேலும் »




Permanent link to this article: http://www.jeyamohan.in/88415

ஆன்மீகம்,கடவுள், மதம்




  திரு ஜே அவர்களுக்கு, வணக்கம். நான் இதுவரையிலும் தங்களுக்கு மெயில் அனுப்பவில்லை. இதுதான் முதல் முறை. நான் இலக்கியத் துறையில் புது வாசகன். இப்பொழுதுதான் சில புத்தகங்களை வாங்கி வாசித்து வருகிறேன். தங்களுடய புத்தகம் ’இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்’, ’வாழ்விலே ஒரு முறை’, ’நிகழ்தல்’, ’உலோகம்’, ’புல்வேளிதேசம்’, ’சிலுவையின் பெயரால்’ மேலும் சில சிறுகதைகள் வாசித்து இருக்கிறேன். தற்பொழுது ‘கொற்றவை’ என்ற புதுக்காப்பியம் வாங்கி வைத்திருக்கிறேன். படிக்கத் தொடங்கவில்லை. ஏனென்றால் ஒரான் பாமுக் …

மேலும் »




Permanent link to this article: http://www.jeyamohan.in/21294

Older posts «