Category Archive: கேள்வி பதில்

வெறுப்புடன் உரையாடுதல்
  அன்புள்ள ஜெயமோகன் சார், நலமா. நானும் தங்களைபோல் அஹிம்சையில், காந்தியத்தில் நம்பிக்கை உள்ளவன். இந்த எனது நம்பிக்கை எனது குடும்ப வழி வந்ததாக கூட இருக்கலாம். என் பாட்டனார் விடுதலை போராட்ட வீரர். கள்ளுக்கடை மறியல், வெள்ளையனே வெளியேறு போன்ற போராட்டங்களில் பங்கெடுத்து சிறை சென்றவர். என் நினைவு தெரிந்த நாள் முதல் நாங்கள் இந்திய தேசியம் ஒன்றையே போற்றி வருகிறோம். தினமணி இணையத்தளத்தில் சமிபத்திய இலங்கை நிகழ்வுகள் குறித்த செய்திகள் பிரசுரிக்கப்பட்டது தாங்கள் அறிந்ததே. …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/2760

ஒருமரம்,மூன்று உயிர்கள்
  என் ஊரில் நம்பர் 1 மளிகைக்கடை என்று பெயரெடுத்தவிட்ட ஒரு மளிகைக்கடை ஓனரிடம் “நீங்கள் பிளாகில் எழுதும் எழுத்தாளர்களின் கட்டுரைகளைப் படியுங்களேன்” என்று சொன்னேன். அவர் என்னிடம் பிளாகைப் பற்றி விசாரித்தார். சொன்னேன். அவர் என்னிடம் “அவனுங்க கிடக்குறானுங்க லூசுப்பசங்க” என்றார். அவர் தினசரி பார்க்கும் லாபமே பல லட்சங்களிருக்கும். அதன் காரணமாக இப்படி ஆணவமாய்ப் பேசுகின்றார். ஏதோ ஒரு தொழி்லில் கொடி கட்டிப் பறப்பதனாலேயே தங்களுக்கு எல்லாம் தெரியும் என்று நினைப்பவர்களைப் பற்றி நீங்கள் …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/20546

மன்னர்களின் சாதி
    அன்புள்ள ஜெ ,   பல சாதி சங்கங்கள் சில காலமாகத் தங்களை ‘ ஆண்ட பரம்பரையே படையெடுக்க வாரீர் ‘ என்று தெருவெங்கும் போஸ்டர் அடித்து அவர்களின் சாதி மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கிறார்கள் . சில வருடம் முன்பு வரை அதைப் பற்றிப்பெரிதாக எடுத்துக்கொண்டதில்லை ஆனால் இன்று ஒவ்வொரு சாதியும் தங்களை ‘ மன்னர் பரம்பரை ‘ என்று கூறிக்கொள்கிறார்கள் குறிப்பாக சோழர்களையே இவர்கள் குறி வைக்கிறார்கள் . விக்கிபீடியாவில் பிராமணர் நீங்கலாக …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/35502

மாலிரும்மொழிச்சோலை
  இனிய ஜெயம், நாடி ஜோதிடக்காரன் சுவடிக்கட்டில் கயிற்றைப் போட்டுப் பிரித்து, வரும் பகுதியில் என்ன வருகிறதோ அதை வாசிப்பதைப் போல, சங்க இலக்கிய நூல்களுக்குள் உழன்றுகொண்டு இருக்கிறேன். கணியன் பூங்குன்றனாரின் குரல் ”மானுடம் வென்றதம்மா” போன்றதொரு எழுச்சிக் குரல். அதன் மறு எல்லையை இன்று பரிபாடல் மூன்றாம் பாடலில் கண்டேன். தீயினுள் தெறல் நீ, பூவினுள் நாற்றம் நீ, கல்லினுள் மணியும் நீ,சொல்லினுள் வாய்மை நீ, அறத்தினுள் அன்பு நீ, மறத்தினுள் மைந்து நீ, வேதத்து …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/94667

அராத்து கேள்விகள்…
அன்புள்ள ஜெயமோகன் என் புத்தக வெளியீட்டு விழாவில் நீங்கள் கலந்து கொள்வதற்கு நான் என்னென்னமோ பிரயத்தனம் செய்ததாக பலர் நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். முன்பின் அறிமுகம் இல்லாத நான் ஒரே ஒரு இரண்டு வரி மெயில் மூலம் அழைத்து உங்கள் வருகையை உறுதிப்படுத்திக்கொண்டேன் என்றால் யாருக்கும் நம்புவது கடினமாகத்தான் இருக்கும்.என்ன செய்வது? எல்லாவற்றையும் கடினமாக்கியே பழக்கப் படுத்திக்கொண்டனர். நீங்கள் உறுதிப்படுத்திய பின்புதான் சாருவிடமே சொன்னேன். 6 பிரபலங்களை அழைத்து என்னுடைய 6 புத்தகங்களைப் பற்றி பேச விட்டு அகமகிழ்வதை …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/94388

இன்குலாபின் புரட்சி
ஜெ பெரும்பாலும் எல்லா எழுத்தாளர்களுக்கும் ஓர் அஞ்சலிக் கட்டுரையை நீங்கள் எழுதுவதுண்டு. பல அறியப்படாத எழுத்தாளர்களை உங்கள் அஞ்சலிக் கட்டுரைகள் வழியாகவே அறிந்திருக்கிறேன். நீங்கள் இடதுசாரிக் கவிஞரான இன்குலாப் பற்றி ஒரு அஞ்சலிக்குறிப்பு கூட எழுதாதது ஆச்சரியமளிக்கிறது. ஏன் என அறிய விரும்புகிறேன் முருகேசன் * அன்புள்ள முருகேசன் இன்குலாப் அவர்களை நான் இருமுறை சந்தித்துச் சில சொற்கள் பேசியிருக்கிறேன். ஒருகாலத்தில் அவரை நேர்மையான இலக்கியச்செயல்பாட்டாளர் என்றும் நம்பி அதை எழுதியுமிருக்கிறேன் – சுபமங்களாவிலென நினைக்கிறேன் ஆனால் …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/93051

எந்திரன், நான், இந்தத்தளம்…
பெருமதிப்பிற்குரிய ஜெமோ. அவர்களுக்கு, வணக்கம். திரு.ஷங்கர் அவர்களின் ‘2.0’ திரைப்படத்திற்கான முதல்தோற்ற வெளியீட்டுவிழாவைப் பற்றிய தங்கள் அறிவிப்பையும், அதில் நீங்கள் கலந்துகொள்ள இருப்பதையும் அறிந்து மகிழ்ந்தேன். நீங்களும் அதில் அடைந்த/அடையப்போகும் ‘பரவசத்தை’ பற்றியும் குறிப்பிட்டு இருந்தீர்கள்.ஏற்கனவே நீங்கள் முன்பு எழுதியபடி-“இந்தத்தளம் சினிமாவுக்கானது அல்ல“- என்றாலும் இதன் மூலம் தங்களின் பொருளாதாரத்தேவைகள் குறைந்த காலத்தில் பூர்த்தி செய்யப்படுவதால் உங்களின் நேரமும், உழைப்பும் ‘வெண்முரசு‘ போன்ற இலக்கியப் படைப்புகளுக்கு வெகுவாக கிடைக்கிறது. எனவே இதில் மிகுந்த ஆதாயம் அடைவது என்னைப் …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/93041

பண்பாட்டுவாதமும் பண்பாட்டு அரசியலும்
இனிய ஜெயம், ஜெயகாந்தன் ஒரு பதிலில், திராவிடப் பண்பாடு வேறு, திராவிட அரசியல் வேறு, நான் எதிர்ப்பது திராவிட அரசியலின் கீழ்மையைத்தான் என்கிறார். தொடர் வாசிப்புகளுக்குப் பிறகு அவர் சொல்வது புரிந்தது. ஆனால் அதையே இந்துப் பண்பாடு இந்து அரசியல் எனப் போட்டுப் பார்த்தால் குழப்பமே எஞ்சுகிறது. வினா இதுதான். பண்பாட்டு ரீதியாக இத்தனை வேற்றுமைகளை ”தொகுத்து” முன்னகரும் இந்துமதத்திலிருந்து, இந்த வேற்றுமைகளை நேர் மறை அம்சத்துடன் ஆளும், நிர்வகிக்கும், சாரமான செயல்பாட்டு வழிமுறை ஒன்றினை, இப் …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/93173

யோகியும் மூடனும்
  அன்புள்ள ஜெயமோகன் சார்..     வணக்கம்.     நலம் தானே!     ”வழிப்போக்கர்கள்” கட்டுரையை வாசித்தேன். யோகி ராம்சுரத்குமாரைப் பற்றி, நீங்கள் அவருடன் சக சாமியாராக அங்கே இருந்தது பற்றிக் குறிப்பிட்டிருகிறீர்கள்.  பின்னர் அவரைச் சந்தித்ததாகவும் சொல்லியுள்ளீர்கள். ’மா தேவகி டயரி’  என்னும் நூலில் இருந்து ஒரு சிறு பகுதியை இணைத்துள்ளேன். இதில் யோகியார் சன்னதித் தெரு இல்லத்தில் இருக்கும் போது இரு எழுத்தாளர்கள் வந்து சந்திப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் குறிப்பிடப்படும் …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/93088

திதலையும் பசலையும்
    இனிய ஜெயம்,   இங்கே கடலூரில்,  முதிய தன்னார்வ சித்த வைத்தியர் ஒருவர் வசம் பேசிக் கொண்டிருந்தேன்.  அவர் நோய் அறிகுறிகளை கழலை, திதலை  என வரிசைப் படுத்தினார்.  திதலை எனும் சங்க இலக்கிய சொல்லால் நான் துணுக்குற்று, அச் சொல்லின் சரியான பொருளை கேட்டேன். [திதலை  எனும் சொல்லுக்கு நான் வாசித்தவை தேமல் எனும் ஒரே பொருளை மட்டுமே இயம்பின].   அவர் சொன்னார்  ஒரே தசைப் பகுதியின் ஒரு இடம் மட்டும், …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/93006

Older posts «