Category Archive: குறுநாவல்

குடைநிழல் -மென்மையின் வல்லமை
அன்புள்ள ஜெயமோகன், தி ஹிந்து நாளிதழில் மண்குதிரை எழுதிய “குடைநிழல்” குறுநாவலின் மதீப்பிட்டை வாசித்துவிட்டு, அக்குறுநாவலை மிகச்சமீபத்தில்தான் வாசித்தேன். தெளிவத்தை ஜோசப் மிகமுக்கிய கதை சொல்லி என்பதில் சந்தேகமேயில்லை. மிக நேரடியான மொழியில் சொல்லிவிட்டுச் செல்லும் சம்பவ சித்தரிப்புகள். இத்தனை நேரடியான யதார்த்தவாத சித்தரிப்பு தேவையா என்றால் அதுவே இக்குறுநாவலின் அழகியலாகவும் பலமாகவும் இருந்துவிடுகின்றது. கைது விசாரணைகள் என்று வரும்போது நாயகனுக்கு நேரும் அனுபவத்தைவிட அவன் கேள்விப்பட்ட அனுபவம்தான் இம்சிக்க வைக்கின்றது. எத்தனை எளிமையாக ஒருவனை வீழ்த்த …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/88888

பத்மவியூகம்: கடிதம்
அன்புள்ள ஜெ சார் அவர்களுக்கு, “பத்மவியூகம்” என்னைப் பதறவைத்தபடியே என் மனதைப் புரட்டிப்போட்டுவிட்டது. கடக்க முடியா புத்திரசோகத்தையும் கடந்து ஏதோ ஒரு இறுக்கமான அமைதி குடிகொண்டதை பத்மவியூகம் சிறுகதையைப் படித்துமுடிக்கையில் உணர்ந்தேன்.       “என் குழந்தைக்கு அவன் விதியிலிருந்து மீளும் வழி தெரியவில்லையே….” என்று சுபத்ரை குமுற, அதற்கு அவள் அண்ணன் கிருஷ்ணன், “யாருக்குத் தெரியும் அது? உனக்குத் தெரியுமா? வழி தெரிந்தா நீ உள்ளே நுழைந்தாய்?” என்று பதிலுரைக்கையில் நானும் உறைந்து நின்றேன். ஏனெனில் எனக்குள் குடைந்துகொண்டிருந்த …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/88301

ஈராறுகால்கொண்டெழும் புரவி- விமர்சனம்
ஈராறுகால் கொண்டெழும் புரவி – கடந்த வார இறுதியில் நூலகத்திற்குச் சென்றபோது சிக்கியது. 130 பக்கங்களுக்கு மிகாத ஆனால் சுவையான ஒரு குறுநாவல், ஐந்து சிறப்பான சிறுகதைகள் கலந்து கட்டிய நூல் இது ஈராறுகால்கொண்டெழும் புரவி
Permanent link to this article: http://www.jeyamohan.in/57434

மனம்வெளுக்க காத்திருத்தல் – சுனீல் கிருஷ்ணன்
மலையகத் தமிழ் எழுத்தின் முன்னோடி தெளிவத்தை ஜோசப் அவர்களின் படைப்புலக வாசல் எனக்கு திறந்து கொண்டது என்னவோ அண்மைய விஷ்ணுபுர விருது அறிவிப்பிற்கு பின்னர் தான். எனக்கு வாசிக்கக் கிடைத்த ஏழு சிறுகதைகள், மூன்று குறுநாவல்கள், சுப்பையா கமலதாசன் அவருடைய இலக்கிய வாழ்வைப் பற்றி எழுதிய ஒரு கட்டுரை, மற்றும் ஒரு நாவல் ஆகியவை அளித்த சித்திரத்தை தொகுக்கும் முயற்சியே இக்கட்டுரை. சுனில் கிருஷ்ணன் என்வரையில் அவருடைய படைப்புகள் இரு களங்களில் இயங்குகின்றன. ஒன்று மலையக தோட்ட …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/42879

நோயும் சீர்மையும்-கடிதம்
அன்புள்ள ஜெ, Grace and Grit நான் மிகமிக விரும்பிப்படித்த ஒரு புத்தகம். என்னுடைய வாழ்க்கையில் நான் திருப்புமுனையாக நினைக்கக்கூடிய ஒரு புத்தகம் என்று சொல்லுவேன். என்னுடைய அம்மா கான்சரில் இறந்துபோனாள். அந்த அனுபவங்கள் மிகவும் கொடியவை. என்னை spiritually demoralize செய்த அனுபவங்கள் அவையெல்லாம். என்னால் மாதக்கணக்கிலே சரியாகத் தூங்கமுடிந்ததே கிடையாது. ரொம்பநாட்களுக்குப்பிறகு கூட அடிக்கடி கனவுகள் கண்டு முழித்துக்கொள்ளுவேன். நான் ஒரு சரியான cynic ஆக மாறிவிட்டேன். எதிலுமே ஒரு skeptic பார்வை வந்துவிட்டது. …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/41305

இலக்கியத்திருட்டு, தழுவல், மறு ஆக்கம்…
(தனிப்பட்ட குறிப்புகள் நீக்கப்படுள்ளன – தளநிர்வாகி) சமீபத்தில் மிஷ்கினின் ஓநாயும் ஆட்டுக்குட்டியும் என்ற சினிமா வெளிவந்தபோது அது ஜியோங் ரோங் எழுதி சி.மோகன் மொழியாக்கத்தில் வெளிவந்த ஓநாய்குலச்சின்னம்’ என்ற நாவலின் தழுவல்தான். என்று ஒருவர் படத்துடன் சேதிவெளியிட்டிருந்தார். அதை ஒருவர் எனக்குச் சுட்டி அளித்து சரிதானா என்று கேட்டிருந்தார். இரண்டுக்கும் பொதுவாக உள்ள ஒரே விஷயம் ஓநாய் என்ற வார்த்தைதான். இந்தமனநிலையைத்தான் நாம் முதலில் கவனிக்கவேண்டும்.நம்மில் மிகப்பெரும்பாலானவர்கள் சுயமான படைப்பூக்கம் அற்றவர்கள். அவர்களின் தொழிலில் ஒரு இரண்டுபக்க …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/41422

சிந்தனையும் உணர்ச்சியும்- சீர்மை- கடிதம்
அன்புள்ள ஜெ, சீர்மை குறுநாவலை இரண்டுமுறை வாசித்தேன். மீண்டும் Grace and Grit ஐ வாசித்தேன். எதற்கும் இருக்கட்டும் என்று A theory of everything வாசித்தேன். கடந்த நான்குநாட்களாக இந்தக்குறுநாவலிலேயேதான் உட்கார்ந்திருக்கிறேன். எல்லாவகையிலும் ஒரு மாஸ்டர்பீஸ். அரவிந்த் இரண்டு உலகங்களை பக்கம்பக்கமாக வைத்துப்பார்க்கிறார். ஒன்று உணர்ச்சிகளின் உலகம். அது அப்படியே நேரடியாக வாழ்க்கையின் அனுபவங்களுடன் இணைந்திருக்கிறது. அதிலே துக்கமும் அலைக்கழிப்புகளும் மட்டும்தான் காணப்படுகின்றன. இன்னும் சரியாகச் சொல்வோமென்றால் அதில் உள்ளது ஒரு குறையுணர்ச்சி மட்டும்தான்.நோய், மரணம் …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/41314

சீர்மை- யின் யாங்-கடிதம்
ஜெ, சீர்மை குறுநாவலை வாசித்து முடித்ததும் இதை எழுதுகிறேன். ஆசிரியரே சொல்வதுபோல இது யின் – யாங் கின் கதை . சிந்தனைகள் X உணர்ச்சிகள் நோய் X ஆரோக்கியம் என்று அவர் அந்த கறுப்புவெள்ளைக் கட்டங்களை போட்டுக்கொண்டே செல்கிறார். அதில் முக்கியமானது ஆண் X பெண் என்ற யின் – யாங் தான். கென்னும் த்ரேயாவும் ஒரேசமயம் முழுமையை நோக்கிச் செல்லுவதாக கதை சொல்கிறது நான் இரண்டுமூன்று புள்ளிகளை வைத்து இந்தக் குறுநாவலைத் தொகுத்துக்குக்கொண்டேன். த்ரேயா நோயின் …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/41319

சீர்மை-கடிதங்கள்
அன்புள்ள ஜெ ‘சீர்மை’ இது எழுத வேண்டுமே என்று யோசித்து, வாசிப்பு அனுபவத்தை திரட்டி, உருவாக்கிய எழுத்தாக தெரியவில்லை.. உங்களை குறித்து சொல்வதை போல் , இது பீறிட்டு வந்த எழுத்து. எழுத்தாளனை மீறி நிகழ்ந்த ஒன்று… சீர்மையை குறித்து பேசும் இந்த நாவலை நாம் கச்சிதம் என்று பேசலாம்.. வடிவ நேர்த்தி, அளவு, கதை கூறல், சம்பவங்கள் அல்லது தகவல்கள் என அனைத்தும் கச்சிதம். நாவல் எவ்வளவோ சொல்கிறது, ஆனால் எல்லாமே கச்சிதமாய் சொல்லப்பட்டிருக்கிறது. ஒரு …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/41241

சீர்மை -மதிப்பீடுகள்
grace and grit படிக்கும்போதெல்லாம் எனக்குத் தோன்றிக் கொண்டே இருந்த கேள்வி இப்படியொரு வாழ்வு பூமியில் மீது மனிதரால் வாழ முடியுமா என்பதுதான் இப்படியொரு காதல் இப்படியொரு தீவிரம் இவ்வளவு சந்தோசம் இவ்வளவு துக்கம் இவ்வளவு அமைதி இது வெறும் புனைவாய் இருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும் என்று நினைத்துக் கொள்வேன் குறிப்பாக நீங்கள் நன்றாகவே விவரித்திருக்கும் அவர்கள் இருவருக்கும் இடையேயான சலிப்பும் ஆங்காரமும் வெறுப்பும் உடைந்து மீண்டும் அன்பு பூக்கும் இடம். நான் என் வாழ்வின் …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/41208

Older posts «