Category Archive: கவிதை

உதிர்தல்
கிட்டத்தட்ட முப்பது வருடங்களுக்கு முன்னர் முழுக்கோடு ஒய்.எம்ஸி.ஏயின் மலரில் ஒரு கவிதையை வாசித்தேன். அதை யாரோ மொழியாக்கம் செய்திருந்தார்கள். சரியாகத் தமிழ் தெரியாத ஏதோ ஒரு அமெரிக்கக் கன்யாஸ்திரீ. அந்த மொழியாக்கம் மிகச் சுமாரானது. இருந்தாலும் அந்தக் கவிதை என்னை உணர்ச்சிவசப்படச்செய்தது. நெடுநாள் அந்தக் கவிதையை நான் நினைவில் வைத்திருந்தேன். அந்தக் கவிஞரின் பெயரையும் மீண்டும் தற்செயலாக ஒரு தொகுப்பில் அந்தக் கவிதையைக் கண்டடைந்தேன். சர்வ சாதாரணமான கவிதை இது. ஆழ்ந்த பொருளோ மறைபிரதியோ ஒன்றும் இதில் …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/2010

எச்.எஸ்.சிவப்பிரகாஷ் கவிதைகள்-3
    1.இரவு முழுதும் இரவு முழுதும் ஓவென்ற காற்றின் ஊளை உடல்மீது பாய்வதுபோல இருந்தது இந்நேரம் சுக்குநூறாகச் சிதைந்திருக்கலாம் என் வாடகை வீடு பகல் முழுதும் பொழிந்தபடியே இருந்தது மழைமழைமழை இந்நேரம் கரைந்துபோயிருக்கலாம் என் வாடகை வீடு இந்தக் கோடை முழுவதும் எரிந்தபடியே இருந்தது வானுயர்ந்த நீல அடுப்பு இந்நேரம் எரிந்து பொசுங்கியிருக்கலாம் என் வாடகை வீடு குளிர்காலம் முழுவதும் கவிந்து மூடிக்கொண்டிருந்தது கடுமையான குளிர் உறைந்துபோயிருக்கலாம் என் வாடகை வீடு இன்னும் உயிரைத் தக்கவைத்துக்கொண்டிருக்கிறது …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/93320

பூனையும் புலியும்
  நேருக்கு நேர்  கே.வி.திருமலேஷ்   1 கொழுத்த பூனை ஒன்று என் வீட்டினுள் நுழைந்தது என்னைப் பார்த்ததும் நின்றது. அங்கு என்னை எதிர்பார்க்கவில்லை போலும் அதுவும் ஒரு திங்கட்கிழமை காலையில் எல்லோரும் வேலைக்கு போயிருக்கும் நேரத்தில். பூனை என்னை பொறுமையின்றி பார்த்தது. நாங்கள் ஒருவரை ஒருவர் பார்த்துகொண்டோம், இருவருக்கும் பின்வாங்க மனமில்லை. சொல்லப்படாத யுத்தம் போல ஒன்று. எனக்குத் தெரிந்திருக்கவில்லை பூனையின் கண்கள் அவ்வளவு சலனமற்றவை.   2 அதன் வால் காற்றில் விடைத்திருக்க முடிகள் …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/93420

கண்ணீருப்பின் கவிஞன்
சில படைப்பாளிகள் ஒருகாலகட்டத்தின் அனலாக எழுந்துவருகிறார்கள். கற்பாறைகள் உரசும் பொறிபோன்றவர்கள் அவர்கள்.எழுபதுகளின் கொந்தளிப்பில் இருந்து எழுந்து வந்து எண்பதுகளில் வெளிப்பாடுகொண்ட சில படைப்பாளிகள் பலவகையிலும் பொதுக்கூறுகள் கொண்டவர்கள். தமிழில் சுகுமாரன், சேரன் மலையாளத்தில் பாலசந்திரன் சுள்ளிக்காடு, கன்னடத்தில் கே.வி.திருமலேஷ். எழுபதுகள் உலகவரலாற்றின் சோர்வுக் காலகட்டம். உலகமெங்கும் புரட்சி இயக்கங்கள் தோன்றி தோல்வியடைந்தன. பனிப்போர் உச்சநிலையில் இருந்தது. புதுயுகம் பிறப்பது குறித்த நம்பிக்கைகள் பொய்த்தன. அந்த விரக்தியின் சினத்தின் ஊடாடும் நம்பிக்கையின் குரல்கள் இவர்கள். இன்று வரை இவர்களை …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/93394

எச் எஸ் சிவப்பிரகாஷ் கவிதைகள்-2
  இத்தருணங்கள் அழியாமல் இருக்க வேண்டும்….   அழியாமல் இருக்க வேண்டும் இத்தருணங்கள் குன்றின் உச்சியில் மைல் நீளஇறக்கைபோல் மேகமிருந்தாலும் சிலைபோல இருக்கும் பாறைகள் நீலம் பச்சை நடுவில் ஜோடி வானவில்கள் ஜோடிக் குருவிகளே வானைத் துளைத்து பாடிப்பறங்கள் பறவை மொழியைக் கற்ற சாலமன் இப்போது சக்ரவர்த்தி அழியாமல் இருக்கட்டும் இத்தருணங்கள் தாளமற்ற ஆட்டம் மேளமற்ற பாட்டு துடிக்கும் இதயம் சொல்கிறது குன்றுக்கு காத்துள்ளது பிளக்கும் வெடிகள் மேகத்துக்கு மின்னல் கத்தி ஜோடி வானவில்களுக்கு மழையின் தாக்குதல் …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/93215

மொத்தக் குருதியாலும்..
  அன்பு ஜெயமோகன், ‘தெரியும் நண்பரே.. புரிந்துகொள்ளமுடிகிறது.’ என்றுதான் இந்தக் கடிதத்தைத் தொடங்கவேண்டும், கிட்டத்தட்ட முப்பது வருடங்களுக்குப் பிறகு தாமதமாக வரும் கடிதமாயினும். உங்களுடைய ‘இந்த இரவு இத்தனை நீளமானதென்று…’ கவிதையை எப்போது வாசித்தாலும் அது என் மனதை ரணப்படுத்திவிட்டே செல்கிறது. ஆனால் அத்தோடு விடுவதில்லை, நான் ஒரு தந்தையாக, கணவனாக எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்று என்னையே சுயபரிசோதனை செய்துகொள்ளத் தூண்டுகிறது. 2003-ஆம் ஆண்டு என்று நினைக்கிறேன். அப்போது நான் சென்னை கதீட்ரல் சாலையில் உள்ள சிட்டி …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/92153

நீச்சலும் பறத்தலும்
  நீ சரியாய் நீச்சல் கற்றுக் கொடுக்காமல் இருந்திருந்தால் உன் சுழிப்பில் அமிழ்ந்தோ இழுப்புக்கு ஒப்புக் கொடுத்தோ உன்னுடனேயே கழித்திருப்பேன் என் முக்காலங்களையும் * ஜெ, நான் சமீபத்தில் வாசித்த முக்கியமான கவிதை இது. பலவகையிலும் அர்த்தம் அளித்து தேனிபோல ரீங்கரித்துக்கொண்டு மனதைச் சுற்றிவந்துகொண்டே இருக்கிறது சரி எழுதிய கவிஞர் யார் என்று சொல்லுங்கள் பார்ப்போம்   பரிதி செல்வராஜ்   அன்புள்ள செல்வராஜ்   நல்ல கவிதை. சுருக்கமானது. வர்ணனை என ஏதும் இல்லாமலேயே ஒரு …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/88742

தலைமையாசிரியரின் காதல்கள்
  தலைமையாசிரியரின் காதல்கள் சர்வோத்தமன் சடகோபன்   தலைமையாசிரியர் சுப்பையா பிள்ளை கல்லூரிப்பருவத்தில் நூறு ஏக்கர் நிலமும் இரண்டு வீடுகளும் வீட்டின் ஒரே பெண்ணுமான சுதந்திராவை தீவிரமாக காதலித்தார். ஒரு டஜன் வாழைப்பழங்களை ஒரே மூச்சில் விழுங்கும் சுப்பையா பிள்ளையை சுதந்திராவும் தீவிரமாக நேசித்தார். ஒரு நாள் நள்ளரிவில் தன் கனவில் சுப்பையா பிள்ளை வந்ததை தன் தோழிகளிடம் சொல்லி உடல் சிலிர்த்தார் சுதந்திரா. ஆனால் அந்தப் பெண் ஒரு காலைப் பொழுதில் தலைமையாசிரியரை சந்திக்க விரைந்தோடி …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/88717

பி.ராமன் கவிதைகள்
  வாசகர்கள் இல்லாத ஒரு கவிஞன் கண்ட கனவு ================================== தங்கள் மொழியை உதறிவிட்டுப்போன என் மக்களை என் கவிதையின் அடித்தளத்தில் சத்தித்தேன். உங்களுக்கு இங்கே என்ன வேலை என்று சீறினேன் பொருட்படுத்தாமல் சென்ற கூட்டத்தில்ருந்து ஒருவர் அலட்சியமாகச் சொன்னார். ”நாங்கள் இப்போது சுதந்திரமானவர்கள் எல்லைகள் இல்லாதவர்கள் எங்கள் காலடிபட்டு சுயநிறைவடைந்தது உன் கவிதை” அவர்கள் நடந்து கவிதையைத் தாண்டிச் சென்ற இரைச்சல் கேட்டு விழித்துக் கொண்டேன். மொழியும் குழந்தையும் =============== வீட்டுத்திண்ணையில் புதிய ஒரு சொல்லுடன் …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/409

பி. ராமன் எழுதிய மலையாளக் கவிதைகள்
  மொழி பெயர்ப்பு: ஜெயமோகன், நிர்மால்யா (பதிவுகள் கவிதைகள் அரங்கில் வாசிக்கப்பட்டவை) 1. கனம் இல்லாதவற்றின் எடையெல்லாம் உள்ளவை சுமக்க வேண்டும் என்று ஓர் அறிவிப்பு இவ்வழி சென்றது அத்துடன் பகல் முதல் அந்திவரை நீண்ட இந்த இருப்பில் இல்லாத வேலையின் கனத்தை நான் அறியத் தொடங்கினேன் இல்லாத துயரத்தின் கனம் நீண்டு நிமிர்ந்து நிற்கும் போதுள்ள இந்தக் கூனல். அடிக்களத்திற்கு கட்டிச் செல்லப் படும் கதிர் குலைகள் போன்றது இல்லாத காதலின் கனம் இல்லாத சுதந்தரத்தின் …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/42

Older posts «