Category Archive: கட்டுரை

அந்த நாடகம்
  தொண்ணூற்றிநான்கில் நான் குரு நித்ய சைதன்ய யதியின் உரையைக்கேட்டபடி ஊட்டி ஃபெர்ன் ஹில்லில் இருந்த நாராயணகுருகுலத்திற்குள் அமர்ந்திருந்தேன். அது இலக்கிய உரை என்பதனால் அதிகம் பேர் இல்லை. நித்யா நான் கேட்ட ஒரு கேள்விக்காக டி.எஸ்.எலியட்டை நெடுநாட்களுக்குப்பின் மீண்டும் வாசிக்க ஆரம்பித்திருந்தார். கண்ணருகே நூலைக்கொண்டுவந்து ஆழமாக வாசித்தபின் என்னை நிமிர்ந்து நோக்கிப் புன்னகைசெய்தார்   ‘எலியட் கலைகளின் சந்திப்புமுனை ஒன்றைப்பற்றி எழுதியதை வாசித்தது நினைவிருக்கிறது. அதைத்தான் தேடினேன். இசைக்கூடங்களைப்பற்றிய கட்டுரை’ என்றார் நித்யா. ‘மனித உணர்ச்சிகளையும் …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/28816

புரட்சி வரவேண்டும்!
  ஓர் எழுத்தாளனாக இளைஞர்களையும் மாணவர்களையும் தொடர்ந்து சந்தித்து வருகிறேன். அரசியல் குறித்த எந்தப் பேச்சையும் அவர்கள் “ஒரு புரட்சி வரணும் சார்!” என்று தொடங்குவதைப்பார்க்கிறேன். புரட்சி எவ்விதம் எங்கு நிகழவேண்டும் என்பதில் அவர்களுக்கு மாற்றுக் கருத்து இருக்கலாம், ஆனால் புரட்சி வந்தே தீரவேண்டும் என்பதில் மாற்றமில்லை. நானும் அவ்வாறே இருந்தவன் என்பதால் எனக்கு அதில் வியப்போ எதிர்ப்போ இல்லை. ஆனால் என் இளமையில் புரட்சி போன்ற  உருவகங்களை வரலாற்று ரீதியாக புரிந்து கொள்ள நான் முயன்றேன். …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/87228

விலகும் திரையும் வற்றும் நதிகளும்- ஏ.வி.மணிகண்டன்
    முதன் முதலில் வண்ணதாசனை வாசித்தது என்னுடைய பதின்பருவங்களில். முதிரா இளம்பருவத்தில் கிட்டத்தட்ட கற்பனாவாத சாயலை நெருங்கும் நடையும், புறக்காட்சி நுட்பங்களும் தந்த கிளர்ச்சி வெகுநாள் நீடித்தது. இருபது வருடங்கள் சென்று இன்று மீண்டும் அவரை அணுகும்பொழுது துலங்கும் வண்ணதாசன் முற்றிலும் வேறு வண்ணதாசன். நடையையும் சித்திரங்களையும் தாண்டி அவர் காணும் உலகைக் காண ஒரு சுற்று வர வேண்டி இருக்கிறது. நான் என்னுடைய பதினாறாவது வயதில் கல்லூரிக்கு சென்றேன். அதன் பிறகு மூன்று வருடங்களுக்கு …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/93516

சுவையாகி வருவது- 2
 [  3   ]   வண்ணதாசனின் கதைகள் வெளிப்படுத்தும் சுவை மூன்று தளங்களில் அமைந்திருப்பதைக் காணலாம். முதன்மையாக மனிதர்கள். அடுத்ததாக இடங்கள். மூன்றாவதாக பருவம். இவற்றில் மனிதர்களைத் தவிர்த்த பிற இரண்டும் பெரும்பாலும் மனிதர்களைக் குறித்த சித்தரிப்பின் பின்புலமாகவே அமைகின்றன. நிலம் மனிதர்களை ஏந்தி கண்ணருகே காட்டும் ஒரு உள்ளங்கை மட்டுமே அவருக்கு. பருவம் என்பது அத்தருணத்தின் உணர்வு நிலைக்கு அழகு கூட்டும் ஒரு சூழல். ஆகவே நிலச்சித்தரிப்பு அவருடைய புனைவுகளில் வெவ்வேறான வகைபேதங்களுடன் பெரும்பாலும் …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/93557

சிறுகதைகள், வண்ணதாசன், நான் -சரவணன்
  ஒரு முகத்தில் இன்னொரு முகத்தை பொருத்தி பார்ப்பது என்பதே வண்ணதாசனின் படைப்பு ரகசியம். அதை ஒரு அந்தரங்கமான உள்ளுணர்வாய் தன் எல்லா சிறுகதைகளிலும் உருவாக்கி விடுகிறார். அவரது கதை மாந்தர்கள் காலத்தின் குரலாய் ஓரிடத்தில் நின்று கொண்டு முன்னும் பின்னும் ஒலித்து கொண்டு இருக்கிறார்கள். இந்த இரண்டு அடிப்படைகளை அவரின் இரண்டு கதைகளில் நான் பொருத்தி பார்க்கிறேன் கலைக்க முடியாத ஒப்பனைகள் தொகுப்பின் முதல் கதையில் ஒரு வேசியின் அலுவல் முடிந்த பின்னிரவையும், அதிகாலையையும் விரித்து …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/93662

சுவையாகி வருவது -1
[  1  ]   சுவை என்றால் என்ன? மனித குலம் ஒட்டுமொத்தமாகவே சுவையைத் தேடி அலைந்து கொண்டிருக்கிறது என்று தோன்றுகிறது. எத்தனை தேடியிருந்தால் இத்தனை கனிகளை, இத்தனை வேர்களை அவன் கண்டடைந்திருப்பான். இத்தனை சமையல்முறைகளை உருவாக்கியிருப்பான். நாச்சுவை, விழிச்சுவை, செவிச்சுவை, மொழிச்சுவை என சுவை விரிந்து கிடக்கிறது எங்கும். நாளில் பெரும்பகுதியை நாம் சுவைகுறித்து பேசும்பொருட்டே செலவழிக்கிறோம் ஆனால் சுவையென்று ஒன்று உண்மையில் உண்டா என்றே சுவைகளின் அலகிலாத வேறுபாட்டைக் காண்கையில் எண்ணத் தோன்றுகிறது. இப்புவியில் …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/93505

ஈராயிரம் தருணங்கள்… சிவா கிருஷ்ணமூர்த்தி
    பிள்ளை பிறந்த வீட்டிற்குப் போவெதென்பதே கொஞ்சம் விசேஷம்தான்.கைக்குழந்தையை, வளர்ந்தவர் எடுத்து கொஞ்சுவதைப் பார்ப்பது அருமையாக இருக்கும். குழந்தையின் பின் தலையை தன் இடது கையால் பொத்தி மார்போடு எடுத்து பல்லி சப்தமிடுவது போல் ஒலி எழுப்பிக்கொண்டு வளர்ந்தவர் “யாரு வந்திருக்கா உன்ன பார்க்க?ஆரு… மாமாடா கண்ணு…ஆஆமா…மாமாதான்” என்று தன் உலகிலிருந்து பேச்சைத் தொடங்குவார். குழந்தையும் தன்னை தூக்கியவரை உற்று நோக்கும். அதன் உலகிலிருந்து அதன் பாஷையில் தொடர்பு கொள்ள ஆரம்பிக்கும்.  இருவரும் தத்தம் உலகின் …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/93467

மனிதமுகங்கள் -வளவ. துரையன்
  [1999—இல் வெளிவந்த வண்ணதாசனின் “மனுஷா..மனுஷா…” சிறுகதைத் தொகுப்பை முன்வைத்து] வண்ணதாசனின் கதைகளில் எப்பொழுதுமே ஒரு மௌனம் ஒளிந்திருக்கும்.. அது பல்வேறு ஊகங்களுக்கு வழி வகுக்கும். வாசகர்களுக்கு அந்த மௌனம் பேசாதவற்றை எல்லாம் பேசும். அந்த மௌனத்தின் ஊடே புகுந்து பயணம் செய்து புதிய வழிகளைக் கண்டறிவதுதான் வாசகருக்குப் பெரிய சவால். அதில் வாசகன் வெற்றி அடையும் போது படைப்பாளருடன் அவனும் ஒன்றிப்போய் விடுகிறான். வண்ண நிலவனின் கதைகளில் முக்கியமானதாகக் கருதப்படும் எஸ்தரில் இருக்கும் மௌனம் இவரின் …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/93431

கேந்திப் பூவின் மணம் – ராஜகோபாலன்
    ஊர்பெருமை பேசுவதில் தமிழ்நாட்டில் யாரும் குறைந்தவர்கள் இல்லை. ஆனால் ஊர்கிறுக்கு பிடித்தவர்கள் குறைவு. அதுவும் இலக்கியத்தில் ஊர்க்கிறுக்கு பிடித்து அலைபவர்கள் எப்போதும் திருநெல்வேலி ஆட்கள்தான். பாவம், தஞ்சையும், கும்பகோணமும் கொஞ்சம் முட்டித்தான் பார்க்கும். ஆனால் இந்த நெல்லைக் கிறுக்குக்கு முன்னர் எந்த ஊர்க்கிறுக்கும்  இலக்கியத்தில் நிற்க முடியாது. பக்கத்து ஊர் என்பதால் வேண்டுமானால் நாரோயில் மக்களை மோருக்கு ஊறுகாய் அளவே சேர்த்துக் கொள்ளலாம். இலக்கியத்தில் இளந்தாரியாய் சுற்றிய காலத்தில் என் ஊரை சொல்லும் முன் …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/93193

சாளரத்தில் குவியும் வெளி- சுனீல் கிருஷ்ணன்
“கடந்து வந்த வாழ்க்கைமுறையின் கணக்கற்ற சிறு சிறு தகவல்கள்… பேரழிவுகளை சாமானிய வாழ்விற்குள் பொருத்தி கதை சொல்வதற்கு அது ஒன்றே வழி. சிறு சிறு புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்த வேண்டும். அன்றாட வாழ்க்கை தான் எத்தனை சுவாரசியமானது. முடிவற்ற மனித உண்மைகள் அதில் புதைந்துள்ளன. ..நான் எப்போதும் இந்த சிறிய பிரபஞ்ச வெளியை நோக்கி ஈர்க்கப்பட்டிருக்கிறேன், ஒரு மனிதன், ஒரு நபர். அங்கு தான் பிற எல்லாமும் நிகழ்கின்றன.” – 2015 இலக்கிய நோபல் பெற்ற ஸ்வெட்லான் …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/93176

Older posts «