Category Archive: கடிதம்

நண்பர்களின் நாட்கள்
  அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, உங்கள் தளத்தில் என் கவிதை பற்றிய பதிவை பார்த்தேன்.முதலில் ஏதோ என்னை பயங்கரமாக கிண்டல் செய்து எழுதியிருக்க வேண்டும் என்று நினைத்தேன்.இரண்டு மூன்று முறை படித்த பின் கூட ஏதோ கிண்டல் இருப்பது போலவே தோன்றுகிறது.சென்ற வருடம் எனது திருமணம் குறித்து உங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பியிருந்தேன்.நீங்கள் வாழ்த்தவில்லை.எனக்கு காரணம் புரியவில்லை.ஆனால் அது வருத்தம் அளித்தது. அபிலாஷ் உங்களுக்கு எழுதிய கடிதத்தை அவரது தளத்தில் வாசித்தேன்.நான் அதிகம் பேசிய எழுத்தாளர் அபிலாஷ் மட்டுமே.அநேகமாக …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/88829

பனை இந்தியா! – ஒரு மகத்தான பயணம்
  என் நண்பரும் கிறித்தவப்போதகருமான காட்சன் மேற்கொண்ட ஒரு பயணம் பற்றி அவர் எனக்கு எழுதியிருந்தார்   அண்ணன்! கடந்த மே 16 முதல் ஜூன் 2 வரை எனது இரு சக்கர வாகனத்தில் மும்பையிலிருந்து நாகர்கோவில் வரை பனை மர வேட்கைப் பயணம் ஒன்றை நிகழ்த்தினேன். உங்களில் பெற்றுக்கொண்ட ஒளியால் அப்பயண அனுபவங்களை தொடராக்க முயற்சிக்கிறேன். சில பிழைகள் இருந்தாலும் எழுதவேண்டும் என்ற உந்துதலால் விடாமல் எழுதுகிறேன். இன்று 25 அத்தியாயத்தை முடித்த பின்பே உங்களிடம் …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/88809

எழுத்தும் உடலும்
  அன்புள்ள ஜெயமோகன் நலமா? நான் சமீபமாய் எழுத்தில் மிகவும் obsess ஆகி விடுகிறேன். காலை எழுந்த பின் தூங்கும் வரை வேறெதையும் மனம் யோசிப்பதில்லை. வேலை, உணவு, வீட்டு காரியங்கள் எல்லாம் ஈடுபாடின்றி நடக்கின்றன. கிட்டத்தட்ட போதை நிலை. நான் என் முகத்தை கூட கண்ணாடியில் பார்த்துக் கொள்வதில்லை. இது என் உடல் நலத்தை பெரிதும் பாதிக்கிறது. பொருளாதாரத்தை கவனிக்காததால் பல சிக்கல்கள். எப்படி நீங்கள் உங்கள் எழுத்து வாழ்வில் சமநிலையை பேணுகிறீர்கள் என அறிய …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/88543

ஃபுகொகாவும் யோஷிடாவும் இணையும் புள்ளி
அன்புள்ள ஜெ, வணக்கம் கொற்றவையில் கோவலனும் கண்ணகியும் மருத நிலத்தில் மள்ளர்கள் சேறு கலந்த நெல் விவசாயம் செய்தது பற்றி அவர்களின் பார்வையில் குறிப்பிடப்பட்டிருக்கும். அவர்கள் பாலையிலும் குறிஞ்சி நிலங்களில் தங்கும்போது அப்பகுதி மக்கள் தானாகவே விதைத்து (self sown-shattering) முதிர்ச்சி அடைந்த பயிர்களில் இருந்து தானியங்களை சேகரித்துக் கொண்டு கஞ்சி காய்ச்சி பகிர்ந்து உண்பதாக ஒரு குறிப்பு இருக்கும். நெல் வறண்ட நிலத்தில் தோன்றி பிறகு காலப்போக்கில் நீர் தேங்கிய சதுப்பு நிலங்களில் பயிரிடப்பட்டதன் ஒரு …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/86026

அரசியல்வெளி

1
  அன்புள்ள ஜெ, குமரகுருபரனின் நிகழ்வில் நீங்கள் பேசியதைக் கேட்டுக் கொண்டே உங்கள் தளத்திற்கு வந்தால் அமெரிக்கத் தேர்தல் பற்றிய உங்கள் குறிப்பைக் கண்டு சிரித்தேன். என்னுடைய குழப்ப நிலை அரங்காவுக்கு வியப்பாக இருக்கலாம். இங்கே அரசியலை கரைத்துக் குடித்து அனுதினமும் அது பற்றியே பேசவும் எழுதவும் செய்கிறவர்களுக்கே இத்தேர்தலில் மக்களின் மனப் போக்கை கணிக்கவோ புரிந்துக் கொள்ளவோ முடியாமல் மூச்சடைத்துப் போயிருக்கிறார்கள். உண்மையிலேயே கடந்த 25 வருடங்களுக்கு மேலாக நடந்த எந்த தேர்தலிலும் இல்லாத குழப்பம் …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/84923

உள்ளும் புறமும் -மௌனகுரு
  அன்புசால் ஜெயமோகன் தங்கள் கடிதம் கண்டேன் மகிழ்ச்சி. உடன் பதிலிட முடியவில்லை.மன்னிக்க வேண்டும் சென்ற மாதம் 29.1.2016 அன்று கொழும்பு ஆசிறி சேர்ஜிகல் பிரத்தியேக வைத்திய சாலையில் எனக்கு சிறு நீரகப் பிரச்சனை சம்பந்தமாக ஒரு சத்திர சிகிச்சை நடை பெற்றது. இப்போது வீடு திரும்பியுள்ளேன். இரண்டு கிழமைகள் ஓய்வு அவசியம் எனவும் பிரயாணங்கள் கூடாது எனவும் டாக்டர் உத்தரவிட்டதனால் கொழும்பில் நின்று ஓய்வு எடுக்கிறேன் வைத்தியசாலை அனுபவங்களும் சத்திர சிகிச்சை அனுபவங்களும் அலாதியானவை. 17 …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/84825

கீதை உரை கோவை -கடிதம்
பெருமதிப்பிற்குரிய ஜெமோ அவர்களுக்கு, வணக்கம். நீங்கள் தற்சமயம் கோவையில் கீதைப்பேருரை ஆற்றி வருவதை வலைத்தளத்தின் மூலம் அறிந்தேன்.நேரில் வந்து கேட்பதற்கு பொருளாதார வசதியும்,சூழ்நிலையும் இடம் கொடுக்கவில்லை.உங்களின் எழுத்துக்களை சமீபகாலங்களாக வலைத்தளத்தில் படிப்பதே மற்றவர்களின் தயவினால்தான்.உங்களிடம் ஒரு வேண்டுகோள் சமீப காலங்களாக உங்களின் சொற்பொழிவுகள் எல்லாம் -கனடா,அமெரிக்காவில் ஆற்றியது உட்பட- “ஒலி” வடிவத்தில் தான் தங்கள் தளத்தில் வருகிறது,இதன் உரைநடை வடிவத்தை (கீதைப்பேருரை உட்பட) கொடுத்தால் மிகுந்த வசதியாக இருக்கும் எனக் கருதுகிறேன்.சற்று பரிசீலிக்கவும். நன்றி. அன்புடன், அ …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/81646

ஆசிய உற்பத்திமுறை-கடிதம்
வணக்கம். கரஷிமாவின் அஞ்சலிக்குறிப்பில் சில கருத்து முரண்கள் உள்ளன. வரலாற்றுப்பொருள்வாதமே வரலாறெழுதும் மார்க்ஸியர்களின் கருத்தோட்டமாக இருக்கிறது.வரலாற்றுப்பொருள்முதல் குறிப்பிடும் நிலமானிய உற்பத்திமுறையிலிருந்து விலகியதாக ஆசிய உற்பத்திமுறை இருக்கிறது என்பதே மார்க்ஸ் இந்தியாவைப்பற்றி எழுதிய கட்டுரைகளில் இருக்கும் கருத்து. அவை தன்னளவில் சுயதேவையைப் பூர்த்திசெய்துகொள்ளும் அமைப்பாக இருந்தன என்று விலகலோடு குறிப்பிட்டவர் கார்ல் மார்க்ஸ். நிலமானிய உற்பத்திமுறையை முதலாளியமுறைக்கு நகர்த்துவது எளிது. ஆனால் ஆசியவியல் உற்பத்திமுறையைத் தகர்ப்பதும் மாற்றுவதும் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு எளிதாக இருக்காது என்று எழுதினார். இடைக்கால இந்திய …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/81279

தமிழ் ஹிந்து நாளிதழுக்கு ஒரு கடிதம்
[தமிழ் ஹிந்து ஆசிரியருக்கு நான் எழுதிய கடிதம். அதிலிருந்த அனைத்து மின்னஞ்சல்களுக்கும் அனுப்பினேன். திரும்பி வந்துவிட்டது. ஆகவே இங்கே வெளியிடுகிறேன். ] ஆசிரியருக்கு இன்றைய இந்து நாளிதழில் கொரிய மொழி தமிழ் போலிருக்கிறது, கொரிய இளவரசி தமிழ்ப்பெண் என்பது போல ஓர் ஆய்வாளர் வெளியிட்ட கருத்தை செய்தி என கொடுத்திருக்கிறீர்கள். [பொங்கல் பண்டிகையை கொண்டாடும் கொரியர்கள்: தமிழர்களின் வழிவந்தவர்களா என ஆராயும் உலகத் தமிழறிஞர்கள்] அதை ஒரு நிருபர் அறிக்கையாக்கியிருக்கிறார் இது இதழியலின் அடிப்படை விதிகளை மீறியதாகும். …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/80725

அவதூறான தகவல் -கடிதம்
மதிப்பிற்குரிய திரு.ஜெயமோகன், வணக்கம். ‘எம்.எஃப்.ஹுசைன் இந்து தாலிபானியம்’ என்கிற தலைப்பில் நவம்பர் 13 2009 அன்று வெளியிடப்பட்ட ஒரு கட்டுரையை நீங்கள் நவம்பர் -7-2015 அன்று மீள் பிரசுரம் செய்திருக்கிறீர்கள். //இன்று ஹ¤சேய்னுக்கு எதிராக திரும்பும் நேற்று நீங்கள் ஆனந்தமார்க்கத்தை வேட்டையாடினீர்கள். தலைச்சேரி சித்தாசிரமத்தை வேட்டையாடினீர்கள். ஏன், பாண்டிசேரியில் நிர்வாணமாக நடந்து வந்த திகம்பரச் சமணமுனிகள் மீது பச்சைமலத்தை பொட்டலம் கட்டி வீசியவர்கள் உங்கள் இந்துமுன்னணி இயக்கத்தினர்.// இந்த கட்டுரை முதலில் பிரசுரிக்கப்பட்ட போதே இது தவறான …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/80467

Older posts «