Category Archive: இயற்கை

கடவுளின் காடு
சென்ற ஜனவரி 21, 2015 ஒரு செய்தியை வாசித்தேன், கேரளத்தில் கவி சூழுலாமையம் மூடப்பட்டது. காரணம் அங்கே வந்த பயணிகள் இருவரை காட்டுயானை தாக்கிக் கொன்றது. அவர்கள் குஜராத்தைச் சேர்ந்த அரசு உயரதிகாரிகள். அவர்களின் இறப்பு குறித்து ஆய்வுசெய்துவருகிறார்கள் என்றது செய்தி. நான் பஷீர் அங்கே இல்லை என நினைத்துக்கொண்டேன் நான் நண்பர்களுடன் பலமுறை சென்ற இடம் கவி. எங்கள் நீண்டபயணங்களின் நடுவே ஓரிருநாட்கள் நீடிக்கும் குறுகிய பயணங்களையும் மேற்கொள்வோம். அவற்றில் முக்கியமானது மழைப்பயணம் என நாங்கள் …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/86276

ஃபுகொகாவும் யோஷிடாவும் இணையும் புள்ளி
அன்புள்ள ஜெ, வணக்கம் கொற்றவையில் கோவலனும் கண்ணகியும் மருத நிலத்தில் மள்ளர்கள் சேறு கலந்த நெல் விவசாயம் செய்தது பற்றி அவர்களின் பார்வையில் குறிப்பிடப்பட்டிருக்கும். அவர்கள் பாலையிலும் குறிஞ்சி நிலங்களில் தங்கும்போது அப்பகுதி மக்கள் தானாகவே விதைத்து (self sown-shattering) முதிர்ச்சி அடைந்த பயிர்களில் இருந்து தானியங்களை சேகரித்துக் கொண்டு கஞ்சி காய்ச்சி பகிர்ந்து உண்பதாக ஒரு குறிப்பு இருக்கும். நெல் வறண்ட நிலத்தில் தோன்றி பிறகு காலப்போக்கில் நீர் தேங்கிய சதுப்பு நிலங்களில் பயிரிடப்பட்டதன் ஒரு …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/86026

இயற்கைவேளாண்மை மேலும் ஒரு கடிதமும் பதிலும்
  ஜெ.. எனது கடிதத்தின் சாராம்சத்தை மீண்டும் சொல்லி விடுகிறேன். 1. நம்மாழ்வார் போன்ற இயற்கை வேளாண்மை முன்னோடிகளின் போராட்டத்தால், இன்று, அரசின் சார்பில் நடத்தப்படும் நிறுவனங்களிலேயே, பூச்சி மருந்தைத் தவிர்க்கும்  வேளாண் முறைகள் பரிந்துரைக்கப் படுகின்றன. பஞ்ச காவ்யா என்னும் இயற்கை வேளாண் முறை இடுபொருள் அவர்களின் செயல்பாடுகளில் புகுந்துள்ளது. இது அவர்களின் பங்களிப்பு. 2. இந்தக் காலகட்டத்தில், இயற்கை முறையில் விளைவிக்கப் பட்ட பொருள்களுக்கு சந்தையும், விலை மதிப்பும் உருவாகியிருக்கிறது. இதுவும் இயற்கை வேளாண்மை …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/86013

நெல்லும் தண்டபாணியும்
  அன்பின் ஜெ..   நெல்லின் ரகசியம் படித்தேன் நாங்கள் வேளாண்மை படித்த (க.தோ.மு.தோ காலத்தில்), சாகுபடிக்குறிப்புகள்  வேறு மாதிரி இருந்தன. 1. விதை நேர்த்தியிலேயே மோனொ க்ரோட்டொ ஃபாஸ் கலந்து விடும். 2. மூன்றாம் நாள் களைக் கொல்லி. 3. பின் பூச்சிகளுக்குத் தக்க மருந்துகள் என. தண்டபாணியின் சாகுபடிக் குறிப்பில் இவை எதுவுமில்லாமல் இருப்பது கண்டேன்.  விதை நேர்த்தியில் உயிர் உரங்களும், பஞ்ச கவ்யா வும் மட்டும் இருப்பது கண்டு மகிழ்ந்தேன். 40-50 ஆண்டுகளுக்கு முன்பு, வேளாண்மை …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/85901

நெல்லின் ரகசியம்
  அன்புள்ள ஜெ அவர்களுக்கு வணக்கம் நெல் சாகுபடி பொதுவாகவே இலாபம் குறைவானதாகவும், விவசாயி தியாகம் செய்பவராகவும் ஒரு நிலை இருக்கிறது. அதிகரிக்கும் சாகுபடி செலவு ஒருபக்கம், ஆனால் விளைபொருளுக்கான சரியான விலை கிடைக்காதது, உற்பத்தி திறன் குறைவாக இருப்பது போன்ற காரணங்கள் விவசாயியை சோர்வுற செய்கின்றன. தேசிய அளவில் நெல்லின் சராசரி உற்பத்தி திறன், 2600 கிலோ ஒரு ஹெக்டருக்கு. தமிழ் நாடு இந்திய சராசரியைவிட குறைவாக நெல் உற்பத்தி திறனை கொண்டுள்ளது. 2400 கிலோ …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/85621

புன்னகைக்கும் பெருவெளி
”இந்திய எழுத்தாளர்களில் உங்களுக்கு மிகப்பிடித்தமானவர் யார்?’ என்றார் ஓர் இலக்கிய நணபர். இம்மாதிரி வினாக்களுக்கு எளிதில் பதில்சொல்ல முடியாது. ஒவ்வொரு இலக்கியமேதையும் நம்மை ஒருவகையில் கவர்ந்தவர். நான் யோசித்தேன். தாரா சங்கர் பானர்ஜியா, மாணிக் பந்த்யோபாத்யாயவா? சிவராம காரந்தா ?எஸ்.எல்.·பைரப்பாவா? தி.ஜானகிராமனா? ஜெயகாந்தனா? சற்று நேரம் கழித்து ”வைக்கம் முகமது பஷீர்தான்”என்றேன். ”ஏன்?” என்றார் நண்பர். ”மற்ற இலக்கியமேதைகளின் உலகில் மனிதர்கள் மட்டுமே உண்டு. பஷீரின் உலகில்தான் மிருகங்களும் பறவைகளும் இருக்கிறார்கள்” என்றேன் ”உலக இலக்கியத்தில் உங்களுக்குப் …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/7820

இயற்கைக் கடலைமிட்டாய்

துவக்க விழா
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு , இயற்கை வழி முறையில் கருப்பட்டி கடலை மிட்டாய் செய்யும் குடிசைத்தொழிலை துவங்க உள்ளேன். வருகின்ற அக்டோபர் 2ம் தேதி மதுரை டி.கல்லுப்பட்டியில் அமைத்துள்ள ஜே .சி.குமரப்பா அவர்களின் நினைவிடத்தில் எளிய துவக்க விழாவுடன் இந்த பயணத்தை துவங்க உள்ளேன் . அழைப்பிதழ் .குக்கூ குழந்தைகள் வெளியில் இணைந்த பிறகு,என்னுடைய பால்ய கால நினைவுகளின் வழியே தான் எனது வாழ்க்கைப்பயணம் அமைகின்றது.இது எனக்கு குழந்தைகள் அளித்த வரமாகத்தான் பார்கின்றேன்.குக்கூ காட்டுப்பள்ளியின் பயணத்தில் என்னை …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/79083

காஞ்சிரம்
காடு நாவலில் வரும் ஒரு மரத்தைப்பற்றி பலர் எனக்கு கடிதம் எழுதிகேட்டிருந்தார்கள். காஞ்சிரம். அப்போது நான் அறிந்த ஒரு விஷயம் தமிழ்நாட்டில்மக்கள் பெரும்பாலும் நெருக்கமான தெருக்கள் அமைந்த ஊர்களிலேயே வசிக்கிறார்கள்.ஊரிலும் சுற்றி இருக்கும் பொட்டலில் சிலவகை மரங்களே உள்ளன. ஆகவேபெரும்பாலானவர்களுக்கு நிறைய வகையான மரங்களையும் செடிகளையும் தெரிவதேயில்லை.என்னுடையது போல மலையடிவாரக் கிராமத்தில் தோட்டம் சூழ்ந்த ஊரில் வாழ்வது இயற்கையைஅறிவதற்கான ஒரு முக்கியமான வாய்ப்பு. காடு நாவலில் காஞ்சிர மரம் ஒரு யட்சிக்கதையின் பகுதியாக வருகிறது. காட்டில் ஒருமாபெரும் …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/1885

பறக்கும் புல்லாங்குழல்
ஞாயிற்றுக்கிழமை காலையில் எழும்போது மிகவும் தாமதமாகும். முந்தின இரவில் நாளை விடுமுறைதானே என்று எண்ணி கிடத்தட்ட விடியும்வரை விழித்திருப்பேன். இரவு விழித்திருக்க நேர்வதென்பது எப்படியோ வாழ்க்கையைப் பயன்படுத்திக்கொள்வது என்றே பொருள்படுகிறது. முட்டாள்கள்தான் இரவு தூங்குவார்கள் என்பது மறைந்த எழுத்தாளர் கரிச்சான்குஞ்சுவின் பொன்மொழி. இதற்குக்காரணம் நம் ஊரில் மதியம் என்பது கடும் வெப்பம் காரணமாக சுறுசுறுப்பாக வேலைபார்க்க முடியாத ஒன்றாக இருப்பதே. குளிர்ச்சாதன வீடுள்ளவர்களுக்கு இதில் விதிவிலக்கு. ஆகவே ஞாயிறு மதியம் விரிவான ஒரு தூக்கம். மாலை நாலரை …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/2204

வெண்முரசு -மழை

”நூற்றியிருபதாண்டுகளுக்கொருமுறை ஆரியவர்த்தத்தில் பஞ்சம் வரும் என்பது நிமித்திகர் கணக்கு. ஆறாண்டுகளுக்கொருமுறை கோடை எல்லை மீறும். ஆறின் மடங்குகளில் அது பெருகிச்செல்லும் என்பார்கள். ஆறாண்டுகளுக்கு முன்பு கோடை வளர்ந்து நீண்டு சென்று பெருமழையில் முடிந்ததையும் புராண கங்கை பெருகிவந்து நகரை மூழ்கடித்ததையும் விதுரன் எண்ணிக்கொண்டான். “மீண்டும் அந்தப் பெருமழையும் வெள்ளமும் வரக்கூடுமா?” என்று கேட்டான். வைதிகர் சிரித்து “பிந்திய மழை சேர்ந்து பெய்யும் என்பது கணக்கு. ஆனால் அந்த மழை இங்குதான் பெய்ய வேண்டுமென்பதில்லை. எப்போதும் இப்பக்கமாக வரும் …

மேலும் »

Permanent link to this article: http://www.jeyamohan.in/56604

Older posts «