Category Archive: சமூகம்

நமது கட்டிடங்கள்
நம்முடைய கட்டிடக்கலை தமிழகத்தில் இன்று எவ்வாறு அடையாளமிழந்து போய்விட்டிருக்கிறது என்று பயணக்கட்டுரையில் குறிப்பிட்டிருந்தேன். அதை ஒட்டி இணையக்குழுமத்தில் நிகழ்ந்த விவாதங்களுக்கு என் எதிர்வினை இது உலகில் எங்கும் எப்போதும் கட்டிடக்கலை ‘தூய்மை’யாக இருக்காது. ஒரு தலைமுறைக்குள் அமைப்பில் மாற்றம் வராமலும் இருக்காது. கட்டிடம் பண்பாட்டுச்சின்னமாக இருப்பதனால் ஒரு நாட்டில் நுழையும் எல்லாப் பண்பாடுகளும் கட்டிட அமைப்பைப் பாதிக்கின்றன. நடைமுறைத் தேவைகள் கட்டிட அமைப்பில் மாற்றங்களைக் கொண்டு வருகின்றன. ஆகவேதான் உலகக் கட்டிடக்கலைகள் தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கின்றன. நம்முடைய …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/16800

புரட்சி வரவேண்டும்!
  ஓர் எழுத்தாளனாக இளைஞர்களையும் மாணவர்களையும் தொடர்ந்து சந்தித்து வருகிறேன். அரசியல் குறித்த எந்தப் பேச்சையும் அவர்கள் “ஒரு புரட்சி வரணும் சார்!” என்று தொடங்குவதைப்பார்க்கிறேன். புரட்சி எவ்விதம் எங்கு நிகழவேண்டும் என்பதில் அவர்களுக்கு மாற்றுக் கருத்து இருக்கலாம், ஆனால் புரட்சி வந்தே தீரவேண்டும் என்பதில் மாற்றமில்லை. நானும் அவ்வாறே இருந்தவன் என்பதால் எனக்கு அதில் வியப்போ எதிர்ப்போ இல்லை. ஆனால் என் இளமையில் புரட்சி போன்ற  உருவகங்களை வரலாற்று ரீதியாக புரிந்து கொள்ள நான் முயன்றேன். …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/87228

கலைஞர்களை வழிபடலாமா?
  அன்புள்ள ஜெ, கடுமையான கட்டுரைகள் சமநிலையுடன் வந்தாலும், அதை ஜீரணிக்கும் சக்தி ராஜாவின் பெரும்பாலான ரசிகர்களுக்கு இல்லை என்றே தோன்றுகிறது. சமநிலையோடு எடுத்துக் கொள்வார்களா என்பது பெரிய கேள்விக்குறிதான். இதில் உங்களுக்கு கருத்து வேறுபாடு இருக்குமானால், நீங்களே அந்தக் கட்டுரையை ஆரம்பித்து வையுங்கள். அப்புறம் பாருங்கள் உங்கள் நிலைமை என்னவென்று? இது இணைய விவாதங்களில் நான் கண்ட உண்மை வெங்கிராம்   அன்புள்ள வெங்கிராம் நீங்கள் சொல்வது உண்மை, இளையராஜாவுக்கு ரசிகர்களும் உண்டு, பக்தர்களும் உண்டு. …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/6480

“நானும் ஒரு ஆளுதான்!”
    சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பொதுநிகழ்ச்சியில் தமிழின் முக்கியமான திரையாளுமை ஒருவர் கலந்துகொண்டார். அவரைச்சந்திக்க ஐம்பதுபேர் தயாராக இருந்தனர். விடுதியிலிருந்து அவரை அழைத்துவர ஏழுபேர் சென்றோம். அவர் ஆடையணிந்து புன்னகையுடன் வந்து எங்களுடன் அமர்ந்தார். ஓரிரு சொற்கள் பேசுவதற்குள் எங்கள் நண்பர்களில் ஒருவர் “ஏன் சார் நீங்க அந்தப்படத்தை எடுத்தீங்க?” என்று ஒரு படத்தைக் குறிப்பிட்டுக் கேட்டார் அந்த இயக்குநர் எடுக்கநேர்ந்த ஒரு தரமற்ற படம் அது. அவருக்கே அதில் வெட்கம் உண்டு. அவர் …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/93373

இந்தியா குறித்த ஏளனம் – பதில் 2
    அன்புள்ள ஜெ எம் இந்தியா குறித்த ஏளனம் கடிதமும் [இந்தியா குறித்த ஏளனம்] அதன் எதிர்வினைகளும் வாசித்தேன் [ மாதவன் இளங்கோ பதில்] இந்த தலைப்பில் திரு மாதவன் இளங்கோ கூறியுள்ள கருத்துக்களை நான் உறுதியாக பின் மொழிகிறேன். ஓரளவு படித்த வெள்ளையர்கள் இந்த ஏளனம் செய்வதில்லை. நம் உணவை வெறுப்பதில்லை. நம் உணவில் உள்ள காரம் கொஞ்சம் அவர்களை அஞ்ச வைக்கும். அனால் நம் உணவைப் பழகி விட்டால், அவர்கள் சுவைக்கு அடிமை. …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/92426

இந்தியா குறித்த ஏளனம்…
அன்புள்ள ஜெமோ,இங்கு எனது வெள்ளைகார நண்பர்கள் அடிகடி கூறும் இந்தியா பற்றிய கருத்து இது தான். இந்தியா ஏழை நாடு.இங்கு வேலை செய்யும் பல இந்தியர்கள் இந்தியர் அல்லாதவர்களிடம் அதிகம் பழகுவது இல்லை. பெரும்பாலனவர்க்கு நான் சொல்வது புரியுமா தெரியவில்லை.Permanent link to this article: http://www.jeyamohan.in/6730

தீபாவளி யாருடையது?
  அன்புள்ள ஜெ நலமா? இந்திய மரபு, ஆன்மிக சிந்தனைகள், தத்துவங்கள் என உங்களின் பல தரவுகளை படித்து இருக்கிறேன், படித்தும் வருகிறேன். வெகு நாட்களாக மன ஆழத்தில் இருக்கும் கேள்வி இது, ‘தீபாவளி’ தமிழர் பண்டிகை இல்லையா? இது வட நாடு சென்று தென் நாடு மீண்ட ஒரு பண்டிகையா உண்மையில்? நமது தீப ஒளி பண்டிகையான ‘கார்த்திகை’ தீபத் திருவிழாவின் வட நாட்டு வடிவமா? நரகன் என்பவனே , தேவ அசுர மோதல்கள் என …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/9118

பியூஷ்: ஓர் உண்மையான சமூகப் போராளிக்காக- கண்ணன்
  நண்பர் கண்ணன் தண்டபாணி அவரது வலைப்பூவில் எழுதியது இது. கண்ணன் எனக்கு அணுக்கமானவர் என்பதைவிட என் பெருமதிப்புக்குரியவர் என்பதே பொருத்தம். இயற்கை வேளாண்மையை வாழ்க்கைமுறையாகக் கொண்டவர். காந்திய அடிப்படையில் வாழ்க்கையை அமைத்துக்கொண்டவர். நம் காலகட்டத்தின் அபூர்வமான இலட்சியவாதிகளில் ஒருவர். கண்ணன் தன் குழந்தையை பள்ளிக்கு அனுப்பாமல் சுயகல்வியால் வளர்க்கிறார் என்பதையே ஒரு பெரும் சாதனையாக நினைக்கிறேன். அவரது மகள் சென்ற விஷ்ணுபுரம் விழாவன்று மாலையில் பாடியது நெகிழ்ச்சியூட்டும் நினைவு. அபாரமான அறிவாற்றலும் நுண்ணுணர்வும் கொண்டவள் அவள். …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/89013

பியுஷ் மனுஷ்- நம் அறத்தின் முன்பாக
  சமூக வலைத்தளங்களில் ஈடுபாடு இல்லாததனால் பியூஷ் மனுஷ் மீது நிகழ்த்தப்பட்ட கீழ்த்தரமான அரசு வன்முறை பற்றி நான் நேற்று கோவையில்தான் அறிந்துகொண்டேன். கோவை நண்பர்கூட்டத்தில் அதைப்பற்றிப் பேசினோம். பியூஷ் மனுஷ் சேலம் தருமபுரி மாவட்டங்களில் பெரும்பணியாற்றிய சூழியல்போராளி. களப்பணியாளர். பல்வேறு ஏரிகளை மீட்டு எடுத்தும் தனிப்பட்டமுயற்சியில் காடுகளை உருவாக்கியும் சாதனைபுரிந்த முன்னுதாரண மனிதர் அவருடன் அரசு அதிகாரிகள் மோதலில் ஈடுபட்டது மிக இயல்பானதே. நானறிந்த வரையில் அதிகாரி என்பவர் ஊழலில், அதிகாரத்திமிரில், உலகியலின் அனைத்துக்கீழ்மைகளிலும் மூழ்கியவர் …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/89015

சாதியும் எழுத்தாளனும் -கடிதம்
அன்புள்ள ஜெ நீங்கள் சுட்டி கொடுத்த கட்டுரை வாசித்தேன். ஒருவர் எழுத்தில் சற்றளவு சாதிவெறி தொனிப்பது போல தோன்றினாலும் தொடர்பை துண்டித்துக்கொள்பவர் நீங்கள். ஆனால் சிலருக்கு மட்டும் விதிவிலக்கு அளித்து ரொம்ப விலகிப்போகாமல் தொடர்பில் வைத்துக்கொள்கிறீர்கள். ‘சுட்டித்தனம் கொண்ட பொறுப்பற்ற நகைச்சுவை’ என்று நீங்கள் ரசிக்கும் நபர் தினமும் பேஸ்புக்கில் ஒரு குறிப்பிட்ட சாதி மீது வெறியை உமிழ்கிறார். அதெல்லாம் உங்களுக்கு ஒரு பொருட்டே அல்ல. இலக்கியப்பகடி, ஏடிஎம் செக்யூரிடிக்கு நூறு ருபாய் தந்தது என்று அவ்வப்போது …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/88635

Older posts «