Category Archive: இணையம்

ஒரு சிறுகுருவி
  குருவி மண்டை என்று நான் அருந்ததி ராய் பற்றிச் சொன்னதற்கு முற்போக்காளர்கள் கோபித்துக்கொண்டர்கள். குருவிகள் கோபித்துக்கொண்டிருக்கலாம் என்பது என் எண்ணம். சாகரிகா கோஷை சிட்டுக்குருவிமண்டை என்று சொல்ல எனக்குத் தயக்கமில்லை. ஆண்டவன் இங்க் ஃபில்லரால் மூளையை தொட்டுச் சொட்டி வைத்திருப்பான்போல. இன்று இந்த படத்தை ஒருவர் அனுப்பியிருந்தார். சிரித்துப் புரைக்கேறிவிட்டது. மிகச்சரியாக அமைந்த சொல்லாட்சி அபூர்வமாகத்தான் வாசிக்கக் கிடைக்கிறது  
Permanent link to this article: http://www.jeyamohan.in/87142

இலக்கியமும் சிலிக்கானும்
ஃபேஸ்புக் வந்தபின்னர் இணையப்பக்கங்கள் அனேகமாகச் செயலிழந்துவிட்டன. ஃபேஸ்புக் நிரந்தரமான ஒரு வட்டத்திற்குள் உள்ளவர்களால் மட்டும் வாசிக்கப்படுகிறது. அல்லது பார்க்கப்படுகிறது. ஆகவே பரபரப்பான வாசிப்புக்காக எதையாவது எழுதியாகவேண்டிய நிலை. நிதானமாக இலக்கியம், தத்துவம் போன்றவற்றுக்கான தளங்களை தேடிவருபவர்கள் குறைந்துவிட்டனர் ஆர்வி பிடிவாதமாக நடத்திவரும் சிலிகான் ஷெல்ஃப் இணையப்பக்கம் இலக்கியத்தை தொடர்ந்து விவாதித்து அறிமுகம் செய்து வருகிறது. தொடர்ச்சியாக இலக்கியவாசகன் என்பவன் யார், இலக்கியவிமர்சனம் எதற்காக என்னும் தலைப்பில் அவர் எழுதியிருக்கும் குறிப்புகள் விவாதத்திற்குரியவை இலக்கியவாசகன் யார்?
Permanent link to this article: http://www.jeyamohan.in/80520

டிவிட்டர்- ஒரு கடிதம்
திரு ஜெமோ நான் டிவிட்டரில் இருக்கிறேன். என் பெயரை வெளிப்படுத்த விரும்பவில்லை. உங்கள் பெயரை நான் இன்றைக்குத்தான் கேள்விப்படுகிறேன். நீங்கள் டிவிட்டரில் இருப்பது எனக்குத்தெரியாது. சினிமாவுக்கு வசனம் எழுதும் வசனகர்த்தர் என்று சொன்னார்கள். நிங்கள் டிவிட்டரில் எழுதும்பெண்களை விமர்சித்து எழுதியதை வாசித்தேன். டிவிட்டரில் எழுதும்பெண்களெல்லாம் இப்போதுதான் வெளியுலகத்துக்கு வந்திருக்கிறார்கள். நிறைய எழுத ஆரம்பித்திருக்கிறார்கள். அது உங்களுக்குப்பொறுக்கவில்லை. டிவிட்டரில் எத்தனையோ ஆண்களெல்லாம் கப்பித்தனமாக எழுதுகிறார்களே அதை நீங்கள் எழுதவில்லை. உங்களுக்கு டிவிட்டரில் எழுதுபவர்களுக்கு இருக்கும் ஃபாலோயர்களைப்பார்த்துப் பொறாமை . …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/78578

பதாகை – சு வேணுகோபால் சிறப்பிதழ்

suvenugopal_thumbnail
பதாகை இவ்விதழ்  சு வேணுகோபால் சிறப்பிதழாக வெளிவந்துள்ளது. நண்பர் சுநீல் கிருஷ்ணன் இதழைத் தயாரித்திருக்கிறார். ஒரு படைப்பாளியை இப்படி பல கோணங்களில் முழுமையாக ஆராயும் கட்டுரைகளின் தொகுதி என்பது முக்கியமான ஒரு முயற்சி. இருவகைகளில் இது பயனுள்ளது. அப்படைப்பாளியை கூர்மையாகப்புரிந்துகொள்ள உதவுகிறது. அப்படைப்பாளியை சமகாலம் எப்படிப்புரிந்துகொண்டது என அறிய முடிகிறது சு.வேணுகோபாலின் நீளமான பேட்டியை மட்டுமே வாசித்தேன். முக்கியமான ஆவணம் அது. எப்போதும்போல நேரடியாக தன் கருத்துக்களை முன்வைக்கிறார். ஒரு கலைஞனாக சமூகத்தின் வலிகளை இருள்களை நோக்கிச்செல்லும் …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/78467

கபாடபுரம் மின்னிதழ்

எஸ்.செந்தில்குமார்
எழுத்தாளர் கே.என்.செந்தில் ஆசிரியத்துவத்தில் வெளிவந்துள்ள கபாடபுரம் இலக்கிய இணைய இதழ் ஏற்கனவே வந்துகொண்டிருக்கும் அச்சுச் சிற்றிதழ்களின் இணைய வடிவமாக உள்ளது. அறியப்பட்ட பல பெயர்கள். பலரையும் அணுகி படைப்புகளைப் பெற்று தயாரித்திருப்பதில் உள்ள உழைப்பும் இணையப்பக்கத்தின் எளிமையான வடிவமைப்பும் பாராட்டத்தக்கவை இவ்விதழின் முக்கியமான அம்சம் எஸ்.செந்தில்குமாரின் நெடுங்கதை அனார்க்கலியின் காதலர்கள். அவரது கதைகளுக்குரிய அடித்தள வாழ்க்கையின் நேரடித்தன்மையும் , சுருக்கமான புறவயச்சித்தரிப்பு வழியாக அளிக்கப்படும் நுண்ணிய அகச்சித்திரங்களும் கொண்ட இப்படைப்பு சமீபத்தில் நான் வாசித்த ஒரு நல்ல …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/78431

மின் தமிழ் இதழ் 3

cover
சி.சரவணக்கார்த்திகேயன் ஆசிரியத்துவத்தில் வெளிவந்துள்ள மின்தமிழ் இதழ் பெருமாள் முருகன் சிறப்பிதழாக அமைந்திருக்கிறது. பலகோணங்களில் பெருமாள்முருகனைப்பற்றிய் ஆய்வுக்கட்டுரைகள் உள்ளன. மாதொரு பாகன் பற்றிய சரவணக்கார்த்திகேயன் கட்டுரையும் நிழல்முற்றம் பற்றிய லேகா ராமசுப்ரமணியம் கட்டுரையும் கூளமாதாரி பற்றி கிருஷ்ணப்பிரபு கட்டுரையும் தெளிவான நோக்குகளை முன்வைக்கக்கூடியவையாக இருந்தன. ஒரு படைப்பாளியைப்பற்றிய இந்த விரிவான ஆய்வுக்கோவை முக்கியமான முயற்சி. ஆனால் புனைவுகளும் கவிதைகளும் பெரும் சோர்வையே அளித்தன. விபச்சாரியைப்பற்றி கவிதை எழுதுவதெல்லாம் எண்பதுகளிலேயே சிறுபத்திரிகைகளில் சலித்துப்போன விஷயங்கள். கதைகளை எழுதியவர்கள் இலக்கிய அறிமுகமில்லாதவர்களாக, …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/78427

ஃபேஸ்புக்கில் வாழ்தல்- கடிதம்

f
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, தொடர்ச்சியாக தொடர்பில் இருப்பதற்கு பல கருவிகள் வந்துவிட்டன. வாட்ஸப், நிலைத்தகவல், செல்பேசி அழைப்பு, ஸ்லாக் என தினுசு தினுசாக வந்துவிட்டாலும், அந்தக் கால கடிதம் போல், சுவாரசியமாக எதுவும் இருப்பதில்லை. நான் பழமைவிரும்பி என இந்தக் கால தலைமுறை நினைப்பார்கள். இந்தப் பதிவைக் கண்டேன்: பாவனை சொல்வதன்றி http://www.jeyamohan.in/77515#.VceRGflViko அதை நான் இவ்வாறும் பார்க்க நினைக்கிறேன். ஃபேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களில் துள்ளலோடு இயங்குபவர்களை இரு வகையாகப் பார்க்கிறேன். முதல் பிரிவினர் செய்தியைக் …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/77694

பாவனை சொல்வதன்றி…
ஜெ தொடர்ந்து ஃபேஸ்புக் புரட்சியாளர்களை நக்கலடித்துக்கொண்டே இருக்கிறீர்கள். அது ஒரு மேலோட்டமான உணர்ச்சிவெளிப்பாடுதான். ஆனால் அது மக்களின் குரலும் அல்லவா? சாமானியனின் குரலுக்கு எந்த மதிப்பும் இல்லையா என்ன? சாமிநாதன் அன்புள்ள சாமிநாதன், அது சாமானியனின் குரல் அல்ல. சாமானியன் போலிவேடங்களைப்போடுவதில்லை. இங்கே இணையத்தில் எழுதுபவர்கள் புரட்சியாளர்களாக, மதப்பற்றாளர்களாக, சாதிச்சார்பானவர்களாக ஓர் உச்சநிலையை வேஷமாக அணிந்துகொள்கிறார்கள். உண்மையில் அவர்கள் மிகமிகச் சாமானியர்கள். எந்தவிதமான தீவிரமும் இல்லாத மொண்ணை வாழ்க்கை வாழ்பவர்கள். அது அவர்களுக்கே தெரியும். ஆகவே இந்த …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/77515

பிரதிலிபி
வணக்கம். நான் சங்கரநாராயணன். நானும் எனது நண்பர்களும் ‘ப்ரதிலிபி’ என்றொரு இணைய சுய பதிப்பகச் சேவையைத் துவங்கியுள்ளோம் – www.pratilipi.com. எங்கள் தளத்தில் எழுத்தாளர்களும், கவிஞர்களும், கதாசிரியர்களும் தங்கள் படைப்புகளை இலவசமாகவோ, தாங்கள் விரும்பும் விலையிலோ மின்னூலாக பதிப்பித்துக் கொள்ளலாம். (அமேசான் கிண்டில், கூகிள் புக்ஸ் போல). ஒரு மாதத்தில் சராசரியாக 150000 வாசகர்கள் எங்கள் தளத்தை உபயோகிக்கிறார்கள். எங்கள் முகநூல் பக்கம் – https://www.facebook.com/pages/ப்ரதிலிபி/448203822022932. -சங்கரநாராயணன், ப்ரதிலிபி. (எழுத்தாளர்கள் தொடர்பு). +91-9789316700. www.pratilipi.com
Permanent link to this article: http://www.jeyamohan.in/75841

இணையச் சமநிலை பற்றி… – மதுசூதன் சம்பத்
அன்புள்ள ஜெ – சரவணகார்த்திகேயன் எழுதியிருப்பது தொடர்பாக ஒரு சிறு ‘வரலாற்றுக்’ குறிப்பு: இணையச் சமநிலை என்ற பெயரில் இன்று நிகழ்ந்துவரும் சர்ச்சை நமக்கு புதிதல்ல.தொண்ணூறுகளின் இறுதியில் இணையம் பரவலானபோதே இதன் முதல் போர் பற்றிக்கொண்டது. இணையம் மூலம் செயல்படும் தொலைபேசி தொழில்நுட்பம் (VOIP) இதன் கருப்பொருளாக இருந்தது. கணினியில் VOIP செயலி மூலம் இந்தியா உலகம் எங்கும் இலவசமாக பேசிவிடலாம், மாதந்திர போன் கட்டணம் வெகுவாக குறையும் என்ற நிலை வந்தது. VOIP பெரிதாக வந்தால் …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/75278

Older posts «