Category Archive: ஆளுமை

நித்யா -கடிதங்கள்
திரு. ஜெயமோகன் அவர்களுக்கு வணக்கம். என்னுடைய மின் அஞ்சலுக்கு பதிலாக, நீங்கள் உங்களுடைய இணைய தளத்தில் வெளியிட்ட ‘நித்யாவின் இறுதிநாட்கள் ‘ (http://www.jeyamohan.in/97384#.WPRyxoh97IU) என்ற கட்டுரையைப் படித்தேன். உங்கள் கட்டுரை எனக்கு பயனுள்ளதாக உள்ளது. திரு. நித்ய சைதன்ய யதி அவர்களைப் பற்றி அறிந்து கொள்ள எனக்கு தூண்டுதலாக இருந்தது, அவரைப் பற்றி United Writers வெளியிட்டுள்ள ‘அனுபவங்கள் அறிதல்கள்’ என்ற புத்தகத்துக்கு நீங்கள் எழுதியுள்ள முன்னுரை. அந்தப் புத்தகத்தில், அவர் எழுதியுள்ள கட்டுரையின் தமிழ் மொழி …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/97646

நித்யாவின் இறுதிநாட்கள்
  திரு. ஜெயமோகன் அவர்களுக்கு வணக்கம்.   திரு. நித்ய சைதன்ய யதி அவர்களின் இறுதிக் காலம் எப்படி இருந்தது என்பது பற்றி ஏதாவது கட்டுரை வெளியாகி உள்ளதா?   நன்றி.   ஆர். ராதா கிருஷ்ணன், சென்னை.   அன்புள்ள ராதாகிருஷ்ணன், நித்ய சைதன்ய யதியுடன் இருந்த எவரும் எழுதியதாகத் தெரியவில்லை. இதழாளர்கள் எழுதிய குறிப்புகள் இருக்கலாம்.நித்ய சைதன்ய யதியின் வாழ்க்கை வரலாறு Love and Blessings என்ற பேரில் நூல்வடிவாக உள்ளது. அவரே எழுதியிருக்கிறார். …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/97384

நித்யா காணொளிகள்
  நித்ய சைதன்ய யதியின் வகுப்புகளின் காணொளிகள் சில வலையேற்றம் செய்யப்பட்டிருப்பதை இப்போதுதான் கண்டேன். அவருடைய அழகிய முகமும் தளர்ந்த மென்மையான சொற்களும் எத்தனை அழுத்தமாக என்னுள் பதிந்துள்ளன. அதனால்தான் போலும் ,இந்த காணொளிகள் எவ்வகையிலும் எனக்கு புதியனவாக இல்லை   நித்யா காணொளிகள்
Permanent link to this article: http://www.jeyamohan.in/97397

குதிரைவால் மரம்
  நித்யாவிடம் அஜிதனைப் பற்றி நிறையச் சொல்லியிருந்தேன். அப்போது அவனுக்கு நான்கு வயது. குருகுலத்தில் பலரும் தங்கள் குழந்தைகளைக் கொண்டுவந்து விட்டு விடுமுறை முடிந்தபிறகு கூட்டிச் செல்வதுண்டு. விடுமுறையில் நிறைய குழந்தைகள் விளையாடிக் கொண்டிருக்கும். குருகுலத்தில் ஒரு குழந்தை இன்னொரு குழந்தையை அடிக்கக் கூடாது என்பது தவிர எந்தவிதமான சட்ட திட்டங்களும் இல்லை என்பதனால் ஒரே ரகளையாக இருக்கும். நித்யா குழந்தைகளிடம் முடிவின்றி விளையாடுவார். அஜிதனைக் கூட்டிவரச் சொன்னார். ‘உங்களுக்குத்தான் தமிழ் தொியாதே ‘ என்றேன். ‘ …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/97388

வி.எஸ்.ராமச்சந்திரன்
வி எஸ் ராமச்சந்திரன் புத்தகம் பேசுது வி எஸ் ராமச்சந்திரன் – ஸ்வராஜ்யா இனிய ஜெயம், இந்த ஆண்டு நான் வாசித்த நல்ல நூல்களில், மூளை நரம்பியல் ஆய்வாளர் விளையனூர் ராமச்சந்திரன் அவர்களின் இரு நூல்களும் அடக்கம். அவரது the emerging mind நூல் உருவாகிவரும் உள்ளம் எனும் தலைப்பில் ஆயிஷா நடராஜன் மொழிபெயர்ப்பிலும், brain-the tell tale நூல் வழிகூறும் மூளை எனும் தலைப்பில் கு வி கிருஷ்ணமூர்த்தி மொழிபெயர்ப்பிலும் பாரதி புத்தகாலயம் வெளியிட்டு உள்ளது. …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/97190

சதுரங்க ஆட்டத்தில்
  ”டே நீ சி.வியை வாசிச்சிருக்கியா?”என்றார் பாலசந்திரன் சுள்ளிக்காடு. ”ஆமாம்” என்றேன். ”என்ன வாசிச்சே?” நான் யோசித்து ”எல்லாம் ஹிஸ்டாரிகல் ரொமான்ஸ். அதெல்லாம் லிட்டரேச்சர் இல்லை” என்றேன். அப்போது நான் சுந்தர ரமசாமியின் ஞானப்பிடியில் அடங்கி இருந்த காலம். யோசித்து யோசித்து, பூடகமாக எழுதப்படும் நவீனத்துவ யதார்த்த எழுத்து அல்லாமல் எதுவுமே இலக்கியமல்ல என்ற நம்பிக்கை என்னுள் நடப்பட்டு ஓயாமல் நீரூற்றப்பட்டுக்கொண்டிருந்தது. ”போடா மயிரே…நீ கண்டே பெரிசா…” என்றார் பாலசந்திரன். சி.வி.ராமன்பிள்ளையின் தர்மராஜா என்ற நாவலில் இருந்து …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/1081

அ.மி – கடிதங்கள்
ஜெ, அசோகமித்திரன் மறைந்தபோது நீங்கள் சொன்ன ஓர் உணர்வுபூர்வமான பேச்சின் எதிர்வினையாக வந்த செய்திகளைக் கேட்டு நானும் ஓர் உணர்ச்சிக்கொந்தளிப்பில் கடுமையாக வசைபாடி உங்களுக்கு ஓரு கடிதம் எழுதினேன் ஆனால் சமீபத்தில் அசோகமித்திரன் பேட்டி ஒன்றில் இந்த வரிகளை வாசித்தேன். உண்மையில் பல விஷயங்களுக்கு நான் பொறுப்பாளியே அல்ல. வேறு பலவற்றைச் செய்துதான் நான் பிழைக்க வேண்டியிருந்தது. நான் சம்பந்தப்பட்டவரை தரம் இருக்க வேண்டும், கண்ணியம் இருக்க வேண்டும் என்று நினைப்பவன். ஆனால் பலமுறை அதில் தோற்றுப்போயிருக்கிறேன் …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/96999

அசோகமித்திரன் ஒரு குறிப்பு
ஒரு கட்டுரையில் இருக்கும் உணர்வுச்சமநிலையையும் நடுநிலையையும் அரசியல்சரிகளையும் உணர்ச்சிகரமான  குரல்பதிவு எதிர்வினையில் பேணமுடிவதில்லை. அசோகமித்திரனின் எழுபதுகளின் வறுமையைப்பற்றிய சித்திரம் அவரே என்னிடம் பலமுறை சொன்னது. அவர் இருந்தபோதே நான் பதிவுசெய்தது. அவரே பல பேட்டிகளில் அவ்வறுமையை, கைவிடப்பட்ட நிலையை பதிவுசெய்திருக்கிறார். அவருடைய பேட்டிகளை மட்டும் பின்சென்று இன்று வாசிப்பவர்கள் மிக எளிதாக அச்சித்திரத்தை அடையமுடியும் ஆனால் சிலவிஷயங்களை பொதுவில் பதிவுசெய்திருக்கக்கூடாதென இப்போது உணர்கிறேன். உணர்ச்சிகரமான நிலையில் பேசியிருக்கக் கூடாது என்றும்.அதோடு சிலவிஷயங்களில் சிலர் சொன்னதைக்கொண்டு நான் அடைந்த …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/96793

அ.மி
இனிய ஜெயம், இந்நாள் வாசித்தேன். புரிந்துக்கொள்ள முடிந்தது. உங்கள் இல்லத்தில் [ நூல் அலமாரி மேல் ] அலங்கரிக்கும் ஒரே படம் அசோகமித்திரன் அவர்களுடையது.நீங்களே சொல்வது போல, தர்க்கப் பூர்வமாக அதை வகுக்க இயலாது. ஒரு எழுத்தாளுமை மற்றொரு எழுத்தாளுமை உதிர்ந்து மொழியில்,காலத்தில் கரைவதை அந்தரங்க நிலையில் உணரும் கணம். தமிழில் ‘இதுவரை’ சொல்லப்படாத நிலை. சரிஇதை தினசரிகள் எப்படி எதிர்கொள்கின்றன? பஜார் வழியில் தந்தி, தினமலர் தலைப்பு பதாகைகள் கண்டேன். தந்தி சசிகலாவுக்கு சின்னம் ஒதுக்கப்பட்டிருந்ததில் …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/96679

அசோகமித்திரனும் திருமாவளவனும்
  இன்று மாலை ஒரு மலையாள எழுத்தாளரிடம் பேசிக்கொண்டிருந்தேன். அசோகமித்திரனை மலையாளத்தில் வாசித்திருக்கிறார். “இங்கே அத்தகைய ஒரு மாபெரும் எழுத்தாளர் மறைந்தால் முதலமைச்சரே சென்று அஞ்சலி செலுத்தியிருப்பார். அத்தனை அரசியல்கட்சிகளின் பிரதிநிதிகளும் சென்றிருப்பார்கள்” என்றார். “தமிழகத்தில் சினிமாநடிகர்கள் தவிர எவருக்கும் அந்த மரியாதை அளிக்கப்படுவதில்லை இல்லையா?” என்று கேட்டார். அது உண்மை. ஆனால் நிலைமை மிகமிக மாறிவிட்டிருக்கிறது. இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்புவரை எழுத்தாளர்கள் மறைந்தால் அது ஒரு செய்தியே அல்ல. நாலைந்து நாட்கள் கழித்து அந்த எழுத்தாளரின் …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/96691

Older posts «

» Newer posts