Category Archive: அனுபவம்

மேடையில் நான்
  ஒருவழியாக திருக்குறள் உரைத்தொடர் முடிந்தது. கடைசிவரியைச் சொல்லிவிட்டு மேடைவிட்டு இறங்கியதும் எழுந்தது மிகப்பெரிய ஆறுதல், விடுதலை உணர்ச்சி. எனக்கு எப்போதுமே மேடைக்கலைஞர்கள் மேல் பெரிய வியப்பும் கொஞ்சம் பொறாமையும் உண்டு. மேடைமேல் எழுந்து நின்று அங்கேயே தன்னை மறந்து வெளிப்படுவதென்பது ஓர் அருள். எழுதும்போது மட்டுமே நான் அதை உணர்கிறேன். நல்ல மேடைப்பேச்சாளர்கள், நடிகர்கள், பாடகர்கள் மேடையாலேயே தூண்டப்படுகிறார்கள். மேடையிலேயே ஆளுமை முழுமை கொள்கிறார்கள் என் மூன்று உரைகளையுமே அற்புதமானவை, ஆழமானவை, செறிவானவை, கவித்துவமனாவை என …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/94527

கலைஞர்களை வழிபடலாமா?
  அன்புள்ள ஜெ, கடுமையான கட்டுரைகள் சமநிலையுடன் வந்தாலும், அதை ஜீரணிக்கும் சக்தி ராஜாவின் பெரும்பாலான ரசிகர்களுக்கு இல்லை என்றே தோன்றுகிறது. சமநிலையோடு எடுத்துக் கொள்வார்களா என்பது பெரிய கேள்விக்குறிதான். இதில் உங்களுக்கு கருத்து வேறுபாடு இருக்குமானால், நீங்களே அந்தக் கட்டுரையை ஆரம்பித்து வையுங்கள். அப்புறம் பாருங்கள் உங்கள் நிலைமை என்னவென்று? இது இணைய விவாதங்களில் நான் கண்ட உண்மை வெங்கிராம்   அன்புள்ள வெங்கிராம் நீங்கள் சொல்வது உண்மை, இளையராஜாவுக்கு ரசிகர்களும் உண்டு, பக்தர்களும் உண்டு. …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/6480

வண்ணதாசனுடன் இரண்டுநாட்கள்
    வண்ணதாசனைப்பற்றிய ஆவணப்படம் ஒன்று எடுக்கவேண்டும். அஜிதன் மணிரத்னத்தின் படத்தில் இரவு பகலில்லாமல் தீவிரமாக இருக்கிறான். வேறு சிலரை அணுகினோம். அரைலட்சத்துக்குக் குறையாமல் பட்ஜெட் சொன்னார்கள். வேறுவழியில்லாமல் நாங்களே எடுத்துவிடலாமென முடிவுசெய்தோம். செல்வேந்திரன் இயக்குநர், சக்தி கிருஷ்ணன் உள்ளூர் ஒருங்கிணைப்பு. சென்ற டிசம்பர் 5,6 தேதிகளில் நெல்லைக்குச் சென்றோம். நான் நாகர்கோயிலில் இருந்து சென்றிருந்தேன். நெல்லைக்குச் செல்லும் முன்னரே ஜெயலலிதா உடல்நிலை மோசமாக இருக்கும் செய்தி வந்தது. கிளம்பவேண்டுமா வேண்டாமா என்று செல்வேந்திரனே குழம்பிக் கொண்டிருந்தார். …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/93267

யோகியும் மூடனும்
  அன்புள்ள ஜெயமோகன் சார்..     வணக்கம்.     நலம் தானே!     ”வழிப்போக்கர்கள்” கட்டுரையை வாசித்தேன். யோகி ராம்சுரத்குமாரைப் பற்றி, நீங்கள் அவருடன் சக சாமியாராக அங்கே இருந்தது பற்றிக் குறிப்பிட்டிருகிறீர்கள்.  பின்னர் அவரைச் சந்தித்ததாகவும் சொல்லியுள்ளீர்கள். ’மா தேவகி டயரி’  என்னும் நூலில் இருந்து ஒரு சிறு பகுதியை இணைத்துள்ளேன். இதில் யோகியார் சன்னதித் தெரு இல்லத்தில் இருக்கும் போது இரு எழுத்தாளர்கள் வந்து சந்திப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் குறிப்பிடப்படும் …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/93088

MA DEVAKIS DIARY
    An interview with the Lord 8th March, 1992   It was on the 8th day of March in the year 1992. That being a Sunday, there was already a sizable crowd outside Bhagavan’s residence in Sannidhi Street even at 10 a.m. We submitted the chappatthi packet and the gooseberry juice bottle at Bhagavan’s …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/93085

பிறிதொரு உலகம்
    என் அனுபவங்களின் மறுஆக்கம் என் கதைகளில் பெரும்பாலும் இருக்கும். என் எழுத்துக்களை முழுமையாக வாசிப்பவர்கள் எங்கோ ஓரிடத்தில் என் கதைகளில் நேரடி அனுபவங்கள் உருமாறி மறைந்திருப்பதைக் காணமுடியும். ஆனால் சினிமாக்களில் அப்படி அல்ல. அவை பெரும்பாலும் அந்த இயக்குநரின் சிருஷ்டிகள். இயக்குநருக்கு கதைக்கருவைச் செப்பனிட உதவுவது மட்டுமே என் பணி. விதிவிலக்கு என சில சினிமாக்களைச் சொல்லமுடியும், அதிலொன்று ஆறுமெழுகுவத்திகள். துரை இயக்கத்தில் ஷ்யாம் நடிப்பில் வெளிவந்த அந்தப்படம் அவ்வருடத்தில் முக்கியமான படங்களில் ஒன்றாகக் …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/92615

வழிப்போக்கர்கள்
  எண்பதுகளில் தர்மபுரியில் பணியாற்றிக்கொண்டிருந்தபோது திருவண்ணாமலைக்கு அடிக்கடி சென்று கொண்டிருந்தேன். எவ்வகையிலோ அந்த ஊருடன் எனக்கொரு ஈர்ப்பும் ஒவ்வாமையும் உண்டு. நான் கல்லூரி இறுதியாண்டு படிப்பை முடிக்காமல் துறவியாகும் பொருட்டு வீட்டை விட்டுக் கிளம்பி அலைந்து திரிந்த நாட்களில் பழனியிலும் பின்பு திருவண்ணாமலையிலும் இருந்திருக்கிறேன். அந்த ஊரின் வெயிலும் வரண்டநிலமும் எனக்கு ஒவ்வாதாயின. அங்கு நான் இருந்த ஒரு சிறு காலகட்டத்தின் நினைவுகள் இனிதாயின.   திருவண்ணாமலைக்கு எண்பத்தொன்றில் என்னை மலையாளத்துச்சாமி என்று அழைத்த பாண்டிச்சாமி என்ற …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/92612

வீட்டைக் கட்டிப்பார்
அன்புள்ள என் ஆசிரியர்க்கு நாங்கள் இங்கு சவுதியில் நலம். அது போல் உங்கள் நலனும் குடும்பத்தில் அனைவரின் நலனையும் அறிய அவல். கிராமத்தில் புது வீடு கட்டியிருக்கிறேம். போனவருடம் விடுமுறையின் போது உங்களுடன் கோவையில் ஒரு நாள் கழித்தேன். இந்த முறை உங்களை சந்திக்க பெருமுயற்சி எடுத்தும் முடியவில்லை. புது வீடு கட்டும் வேலை அத்தனை விடுமுறை நாட்களையும் எடுத்துக்கொண்டது. நான் சவுதிக்கு வந்தபின் நீங்கள் மற்றும் நண்பர்கள் வேலூர் மாவட்டத்தில் சுற்று பயணம் வந்துள்ளீர்கள். வாய்ப்பு …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/92010

நான்கள்

2 (2)
  எண்பதுகளில் நான் எஸ்.ராமகிருஷ்ணனை சந்தித்து நிறைய பேசியிருக்கிறேன். 2007-ல் நீண்ட இடைவேளைக்குப் பின்னால் என்னைச் சந்தித்த பின்னர் அவர் சுகாவிடம் சொன்னதாகச் சுகா சொன்னார் ‘ஜெயமோகன் தானான்னே சந்தேகமா இருக்கு. நீங்க அவரை இருபது வருசம் முன்னாடி பாத்ததில்லை. ரொம்ப அடங்கிட்டார். ரொம்ப சிரிக்கிறார். ரொம்ப கனிஞ்சிட்டார்னு தோணுது’ அதை சுகா சொன்னபோது நான் எனக்குள் புன்னகை செய்தேன். நல்ல சொல்தான். ஆனால் கனிவு என்பது என்ன? தெரியவில்லை. ஒருவகை விடுபடுதல்தான் நான் அடைந்தது என்று …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/11693

புண்படுதல்
ஆசிரியருக்கு, நாம் ஆகும்பே அருவி வழியில் உரையாடியது தான், ஆனால் அது முற்றுப் பெறவில்லை. அங்கே கொண்ட அட்டையாக அது இன்னும் ஓட்டிக்கொண்டே இருக்கிறது , நீங்கள் வீடு திரும்பும் முன் இக்கேள்வி காத்திருக்கும் , ஆம் பாதையோர ஈரத்தில் அட்டைபோல. நாம் உண்மையையோ அல்லது உண்மை என நம்புவதையோ அப்படியே போது வெளியில் சொல்ல முடிவதில்லை, சில சமயம் நன்றாகத் தெரிந்த நண்பர்களிடம் கூட . இதனால் புண்பட்டுவிடுவார்களோ என்ற நிரந்தர அச்சத்துடனேயே ஒரு உரையாடலை …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/30073

Older posts «