Jeyamohan

Author's details

Name: Jeyamohan
Date registered: August 24, 2011
URL: http://www.jeyamohan.in

Latest posts

  1. நூல்கள் வாங்க — May 28, 2015
  2. மோஹித்தேவும் மருந்தும் மிதவையும் — May 28, 2015
  3. ஊட்டி நண்பர்கள் வருகை — May 28, 2015
  4. வேறு மனிதர்கள் வேறு வாழ்க்கை ஒரே உலகம் -காளிப்பிரசாத் — May 27, 2015
  5. இசை – கடிதங்கள் — May 27, 2015

Author's posts listings

நூல்கள் வாங்க

பனுவல் இணையதளம் வழியாக ஜெயமோகன் நூல்களை வாங்க பனுவலிலில் ஜெயமோகன் நூல்கள்

Permanent link to this article: http://www.jeyamohan.in/75545

மோஹித்தேவும் மருந்தும் மிதவையும்

1

அன்புள்ள ஜெ ஊட்டி முகாம் அளித்த ஆனந்தத்தை இன்னும் நினைத்துக்கொண்டேயிருக்கிறேன். வீட்டு ஞாபகமே இல்லாமல் நண்பர்களோடு பேசுவதும் நீங்கள் பேசுவதை கேட்டுக்கொண்டிருந்ததுமான நாட்கள். மனைவியையும் குழந்தையையும் மச்சினன் வீட்டில் விட்டுவிட்டு வந்தேன். ஊட்டியிலிருந்த மூன்று நாட்களும் அவளுடன் பேசவில்லை. 4 மாத கர்ப்பமாக இருப்பவளிமும் 4 வயது பெண்ணிடமும் பேசத்தோனாமலிருந்தது என்னவொரு மனநிலை என்று தெரியவில்லை. வெள்ளிக்கிழமை அம்மாவிற்கு கால் நடக்க முடியாமல் போயிருந்தது. தினமும் ஆட்டோவில் போய் டாக்டரை பார்த்து வந்திருந்தார்கள்.இவர்கள் யாருக்குமே என்மீது கோபமில்லை.. …

மேலும் »

Permanent link to this article: http://www.jeyamohan.in/75476

ஊட்டி நண்பர்கள் வருகை

இனிய ஜெயம், ஊட்டி முகாம் பதிவுகள் கண்டேன். அதென்ன பள்ளிப் பிள்ளைகள் பள்ளிக்கு டிமிக்கி கொடுத்தால் அவர்கள் பெயரை கரும் பலகையில் எழுதி வைப்பதைப் போல எனது, ஜாஜா, மற்றும் பிரசாத் பெயர்களை எழுதி ஒட்டி விட்டீர்கள்? பிரசாத் , ஜாஜா, சுனில் இவர்கள் அனைவரும் இல்லறமல்லது [அல்லாதது] நல்லறம் அன்று என்று கண்டு அமைந்து விட்டார்கள் என நினைக்கிறேன். சேலம் சதீஷ் [ஆச்சர்யம்] தம்பதி சமேதராக புகைப்படத்தில் கண்டேன். [மகா ஆச்சர்யம்] சிரித்துக் கொண்டு வேறு …

மேலும் »

Permanent link to this article: http://www.jeyamohan.in/75504

வேறு மனிதர்கள் வேறு வாழ்க்கை ஒரே உலகம் -காளிப்பிரசாத்

kali

பஸ்ஸில் பேசிக்கொண்டு போக முடியாது எனவே எட்டு மணி பஸ்ஸுக்கு ஏழு மணிக்கே வந்து சந்திப்போம் என சென்னை நண்பர்களிடம் சொல்லியிருந்தாலும் கவிதை பிரிண்ட்டுகளை எடுத்துக்கொண்டு செல்ல எட்டேகாலாகிவிட்டது. சென்னை வட்ட செயலாளர் செந்தில்குமார்தேவன் வரமுடியாததால் சதுர செயலாளர் செளந்தர் அனைவரையும் ஒருங்கிணைத்திருந்தார். செளந்தரை பலமுறை சந்தித்திருந்தாலும் மற்றவர்களை சந்திப்பது இதுவே முதல்முறை. ரகுராமன் மற்றும் டாக்டர் வெஙகடேஷை ஒருமுறை பார்த்து ஹலோ சொல்லியிருக்கிறேன். அறிவழகனும் ரவிகுமாரும் அன்றுதான் அறிமுகமாகியிருந்தார்கள். எப்படி குழுமம் அறிமுகமானது என பேசிக்கொண்டு …

மேலும் »

Permanent link to this article: http://www.jeyamohan.in/75459

இசை – கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன், மகாராஜாவின் இசை படித்தேன் – அருமை தங்களுக்காக இந்த இராமாயண பாடல் நீங்கள் கேட்டிருக்கக் கூடும் இருப்பினும் .. புரியாத புதிய விஷயங்களை பெரியவர்கள் ” இருப்பா சொல்றேன் என்று ஆற அமர விளக்கும் போது ஏற்படும் தெளிவு மகிழ்ச்சி உங்கள் பல வரிகளில் உள்ளது போலவே மகாராஜாவின் இசையும் இவருடன் எனக்கு பிடித்தமானவர்கள் KVN மற்றும் சஞ்சய் நன்றி மணிகண்டன் திரு ஜெயமோகன், பேதங்களை வளர்க்கும் கருத்துக்களில் சிக்கவேண்டாம் என்பது என் பொதுவான …

மேலும் »

Permanent link to this article: http://www.jeyamohan.in/75456

ஊட்டி முகாமனுபவம்

பேரன்பிற்கும் பெருமதிப்பிற்குமுரிய ஜெயமோகன் அவர்களுக்கு வீடு வந்து சேர்ந்த இரண்டு நாட்களாக ஊட்டி முகாம் ஊட்டிவிட்டனுப்பிய இலக்கியச் சுவையை (உணவுச் சுவையையும் கூட) மீண்டும் மீண்டும் மனதால் ருசித்தபடியே இருக்கிறேன். ஈடு இணையற்றது என்பதைத் தவிர வேறொன்றும் சொல்வதற்கில்லை என்போன்ற இலக்கிய வட்டத்தின் வாசலில் நிற்பவர்க்கு. நட்பிற்குரிய சீனு இல்லாததில் மட்டும் ஒரு சிறு வருத்தம்.   புதுவை, சென்னை, திருச்சி, கோவை ஆகிய ஊர்களில் உங்களது வெவ்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டிருந்தாலும் ஊட்டி முகாமனுபவம் முற்றிலும் …

மேலும் »

Permanent link to this article: http://www.jeyamohan.in/75479

ஷோபா சக்தி நடித்த படத்திற்கு கேன்ஸ் விருது

1

தமிழின் தலைசிறந்த எழுத்தாளர்களில் ஒருவர் என ஷோபா சக்தியை நினைக்கிறேன். அவர் நடித்த தீபன் என்ற சினிமா உலகசினிமாவிழாக்களில் முதன்மையான கேன்ஸ் திரைவிழாவில் போட்டிப்பிரிவில் முதற்பரிசு பெற்றிருப்பதை அறிந்து பெருமிதம் அடைந்தேன். ஜாக்யூஸ் அடியார்ட் இயக்கிய இந்த பிரெஞ்சுப்படம் புலம்பெயர்ந்த ஈழ அகதிகள் ஐரோப்பாவில் வாழும் வாழ்க்கையின் சித்திரம் கேன்ஸ் விழாவில் பங்கெடுப்பதென்பதே இந்திய சினிமாக்காரர்களின் கனவு. அங்கே விருதுபெறுவதென்பது ஒருவகையில் வாழ்க்கையின் உச்சதருணங்களில் ஒன்று. ஷோபா சக்திக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

Permanent link to this article: http://www.jeyamohan.in/75486

‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’

E015WC

காண்டவத்தை நிறுத்தியதும் வீட்டில் இருக்காதது நன்றாகப்போயிற்று. ஊட்டி கருத்தரங்குக்கு 22 அன்றுசென்று சேர்ந்தேன். மனதுக்கு உகந்த தோழர்கள் வந்திருந்தனர். [கடலூர் சீனு, ராஜகோபாலன் பிரசாத் மட்டும் வரவில்லை] ஒவ்வொருவரையாக தழுவிக்கொண்டே இருந்தேன். அவர்களின் தொடுகையே முதன்மையாகத் தேவைப்பட்டது. திரும்பவரும்போதே எழுதவேண்டுமென தோன்றியது. கணிப்பொறி கொண்டுசெல்லவில்லை. ஆகவே இரவெல்லாம் இந்த நாவலின் முதல் அத்தியாயத்தை எண்ணியபடி துயிலாதிருந்தேன். 25 அன்று காலை பேருந்திலிருந்து இறங்கும்போது முதல் வரி வந்துவிட்டது. வந்ததுமே எழுதத்தொடங்கிவிட்டேன். இந்திரநீலம் என்பது நவமணிகளில் ஒன்றாகிய நீலத்தில் …

மேலும் »

Permanent link to this article: http://www.jeyamohan.in/75435

நாஷ்- ஒரு சூதர் பாடல்

nash_postcard

அன்புள்ள ஜெ, நேற்று ஒரு சாலை விபத்தில் காலமானார் நாஷ் (http://en.wikipedia.org/wiki/John_Forbes_Nash,_Jr.) இவர் “கேம் தியரி” உருவாக்கத்தில் முக்கிய பங்காற்றியவர், economics துறையில் மிக உயரிய விருதான Nobel Memorial Prize in Economic Sciences (இது அல்ப்ரெட் நோபலால் உருவாக்கப்பட்ட விருது இல்லையெனிலும், அதே தேர்வு முறையைக்கொண்டு, அதே மேடையில் தரப்படுகிறது) விருது பெற்றவர். இன்று இன்று ஒரு முக்கிய செய்தி, ஆனால் முன்னிறுத்தப்படுவது இச் சாதனைகள் நல்ல. பெரும்பாலான செய்தி தலைப்புகள் இந்த சாதனைகளை …

மேலும் »

Permanent link to this article: http://www.jeyamohan.in/75431

பிரயாகை- கேசவமணி

கேசவமணி பிரயாகை பற்றி எழுதத்தொடங்கியிருக்கும் விமர்சனத்தொடர். அவரது இணையதளத்தில் வெண்முரவு விவாதங்கள் அனைத்தும்

Permanent link to this article: http://www.jeyamohan.in/75429

Older posts «