Columbus Tamil Sangam meeting

In association with Columbus Tamil Sangam, we are arranging for 2 hour meeting/discussion with Mr. Jeyamohan. We are working on a flyer which will go to entire mailing list of the ‘Columbus Tamil Sangam’. I will send you the final copy once it is complete. In the meantime, could you please add a note in …

மேலும் »

Permanent link to this article: http://www.jeyamohan.in/76644

நியூஜெர்சி வரவேற்புரை -பி.கே.சிவக்குமார்

//சுந்தர ராமசாமியுடனான தன்னுடைய உறவைப் பற்றி, ஜெயமோகன் விரிவாக “நினைவின் நதியில்” என்ற நூலில் எழுதியிருக்கிறார். என்னைப் பொருத்தவரை அந்நூல் சு.ரா.வுக்குச் செய்யப்பட்ட மிகச் சிறந்த அஞ்சலி ஆகும். அந்தப் புத்தகத்தைப் படிக்க ஆரம்பித்தவுடன் படித்து முடித்த பின்னரே என்னால் நிறுத்த முடிந்தது// puthu.thinnai.com/?p=29703

Permanent link to this article: http://www.jeyamohan.in/76629

‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 36

பகுதி ஏழு : ஒளி உண்ணும் குருதி – 2 சத்யபாமா கையசைக்க ஏவலன் தலைவணங்கி வெளியே சென்று படைத்தலைவர்களை உள்ளே வரச்சொன்னான். அவர்கள் வந்து தலைவணங்கி பீடங்களில் அமர்ந்தனர். அனைவர் முகங்களும் தளும்பி நிறைந்த கலங்கள் போல இருந்தன. சத்யபாமா “நாம் சததன்வாவை வென்றுவர முடிவெடுத்திருக்கிறோம். நம் படைகள் அவன் நகரை அழிக்கவேண்டும்…” என்றாள். “கிருஷ்ணவபுஸ் என்றொரு நகரே இனி உலகில் இருக்கக்கூடாது. அங்குள்ள ஒவ்வொரு கல்லும் பெயர்க்கப்பட்டாகவேண்டும்…” “நமது படைகளுக்கு முன் கிருஷ்ணவபுஸ் யானைகாலடியில் …

மேலும் »

Permanent link to this article: http://www.jeyamohan.in/76595

கலாச்சார இந்து

அன்புக்குரிய ஜெயமோகன் அண்ணாவிற்கு, வணக்கம். எனது குடும்பத்தில் அனைவருமே கடவுள் பக்தி உடையவர்கள். நான் மட்டும் எனது பதின்பருவத்தில் இருந்து ஒரு பின்பற்றும் இந்துவாக (Practicing Hindu) இல்லாமல் இருந்துவருகிறேன். சிறுவயதிலேயே படிக்கக்கிடைத்த ஈவேரா பெரியாரின் கருத்துக்கள் இதில் கணிசமாக தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கக்கூடும் என்ற போதிலும் இதற்கு முக்கியகாரணம் எனது  தர்க்க புத்திதான். ஆயினும் மூர்க்கத்தனமாக இறைவழிபாட்டை ஒதுக்கியவனும் கிடையாது. எவராவது திருநீற்றை தந்தால் பூசிக்கொள்வதும் உண்டு. உறவினர்கள் நண்பர்கள் கோயிலுக்கு அழைத்தால் சென்று கும்பிடுவதும் …

மேலும் »

Permanent link to this article: http://www.jeyamohan.in/27843

நான் இந்துவா?

அன்புள்ள ஜெயமோகன், நீண்ட நாட்களாகவே இதை பற்றி உங்களுக்குக் கடிதம் எழுத வேண்டும் என்று நினைத்து கொண்டிருந்தேன். இப்போதுதான் நேரம் வாய்த்தது. முதலிலேயே சொல்லி விடுகிறேன். எனக்குக் கடவுள் என்று சொல்லப் படுகிற புறச்சக்தியின் மேல் நம்பிக்கை இல்லை. இது திராவிடக் கழக புத்தகம் படித்தும் ஏற்பட்டதல்ல. முழுக்க முழுக்க என்னுடைய சொந்த மனக்குழப்பத்தாலும், அதன் மூலம் எழுந்த சிந்தனையாலும் ஏற்பட்டது. அதன் பிறகு ராமகிருஷ்ணர், விவேகானந்தர், ரமணர் போன்றவர்களின் சிந்தனைகளைப் படித்து அந்தக் கடவுள் என்ற …

மேலும் »

Permanent link to this article: http://www.jeyamohan.in/21656

‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 35

பகுதி ஏழு : ஒளி உண்ணும் குருதி- 1 சாத்யகிதான் விடியற்காலையில் வந்து அச்செய்தியை சொன்னான். திருஷ்டத்யும்னன் இரவில் அருந்திய மதுவின் மயக்கில் மஞ்சத்தில் கைகள் பரப்பி, ஒரு கால் சரிந்து கீழே தொங்க குப்புறப்படுத்து துயின்று கொண்டிருந்தான். விடிகாலையில் ஒருமுறை நீர் அருந்த எழுந்தபோது தலை எடை மிக்கதாக தோன்றவே தலையணையை எடுத்து தலைக்கு மேல் வைத்து அழுத்திக்கொண்டிருந்தமையால் காவலன் அவன் கேட்கும்பொருட்டு சிலமுறை அவ்வழியாக காலடியோசை கேட்க நடந்ததை அவன் அறியவில்லை. அதன் பின் …

மேலும் »

Permanent link to this article: http://www.jeyamohan.in/76555

தகர முரசு

கல்கத்தாவில் என் நண்பர் ஒருவர் கொஞ்சநாள் மலையாள நாளிதழின் செய்தியாளராக இருந்தார். சென்னையில் மெரினா கடற்கரையில் மலையாள எழுத்தாளர் ஒருவரும் நானும் அந்த நண்பருடன் பேசிக்கொண்டிருந்தோம். எழுத்தாளரும் இதழாளரும் மதுவின் போதையில் இதமாக தளர்த்திக்கொண்டிருந்தார்கள். கடலை விற்கும் ஒரு குள்ளச்சிறுவன் ஒரு தகர டப்பாவை அடித்தபடி எங்களைக் கடந்து சென்றான் நான் புன்னகை செய்தேன் ’என்ன?’ என்றார் எழுத்தாளர் . ’டின் டிரம்’ என்றேன். நோபல் பரிசு பெற்ற ஜெர்மானிய எழுத்தாளர் குந்தர் கிராஸின் நாவல் அது. …

மேலும் »

Permanent link to this article: http://www.jeyamohan.in/11268

‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 34

பகுதி ஆறு : மணிமருள் மலர் – 7 ஜாம்பவர்குலத்தில் மூத்தஜாம்பவரின் மகளாக நான் பிறந்தபோது எட்டு நற்குறிகள் தோன்றின என்று என் குலப்பாணர் பாடுவர். என் அன்னை பின்மதிய வேளைக்கனவில் வெண்முகில்குவை ஒன்று யானையெனத்திரண்டு அஸ்வபாதத்தின் மேல் வலது முன்கால் வைத்து இறங்கி வெண்ணுரைபெருகும் அருவியென மலைச்சரிவில் வழிந்து தழைப்பெருக்குக்குள் மான்கூட்டங்கள் போல இலையலைத்து ஓடி வருவதை கண்டாள். குளிர்ந்த நீர் அவள் கால்களை நனைக்க விழித்துக்கொண்டபோது அறைக்கு வெளியே கிரௌஞ்சம் ஒன்று மும்முறை குரலெழுப்பியது. …

மேலும் »

Permanent link to this article: http://www.jeyamohan.in/76539

நியூ ஜெர்ஸி உரை

  நியூ ஜெர்ஸி தமிழ்ச் சங்கத்தில் ஆற்றிய உரை – ஒலி வடிவம்

Permanent link to this article: http://www.jeyamohan.in/76604

பாபநாசம்

பாபநாசம் நேற்றே இங்கு அமெரிக்காவில் வெளியாகிவிடும். அதைப்பற்றி ஒரு பதைப்பு எனக்கு இருந்தபடியே இருந்தது. ஆகவே அதைப்பற்றிய செய்திகளை தொடர்ந்து நோக்கவில்லை. நேற்று மாலை நியூஜெர்சி தமிழ்ச்சங்க நிகழ்ச்சி முடித்து விருந்தும் உரையாடல்களும் கடந்து நள்ளிரவில் நண்பர் அரவிந்தன் கன்னையன் அவர்களின்வீடு திரும்பியபின்புதான் இணையத்தில் எதிர்வினைகளைப் பார்த்தேன். கமலுக்கும் சுகாவுக்கும் ஜித்துவுக்கும் மின்னஞ்சல் அனுப்பிவிட்டு நிறைவுடன் தூங்கப்போனேன். காலையில் பெட்டிநிறைய மின்னஞ்சல்கள். இந்தத்தளத்தில் நான் எழுதும் திரைப்படங்களைச் சார்ந்து அதிகமாகப் பேசவேண்டாம் என எண்ணம் கொண்டிருப்பதனால் விமர்சனங்களையும் …

மேலும் »

Permanent link to this article: http://www.jeyamohan.in/76598

Older posts «