அன்புள்ள ஜெயமோகன்: நலம் தானே? உங்களது விஷ்ணுபுரம் நாவல் வாசிப்பரங்கு நடந்து முடிந்தது குறித்துக் கேள்விப்பட்டுக் கொஞ்சம் பொறாமையாக இருந்தது. நான் வருகிற ஜூலை 15 தேதியில் இருந்து ஆகஸ்டு 13 ஆம் தேதி வரை இந்தியா வர உள்ளேன். அதுவும், குழந்தைகள்/மனைவி இல்லாமல். இன்னும் சில நாட்கள் தள்ளி இந்த வாசிப்பரங்கு இருந்திருந்தால் அவசியம் வந்திருப்பேன்! சரி, இந்த முறை பங்கேற்க முடியாமல் போய் விட்டது. உங்களது அருகர்களின் பாதையைப் படித்ததில் இருந்து அவசியம் இந்தியாவில் …


