அன்புள்ள ஜெ, “சாமி தெருவெங்கும் அலைந்து கொண்டிருக்கிறது தகப்பன்களாக. பெண் பெற்ற எந்தத் தகப்பனும் சாமிதான். தகப்பன் சாமி.” – [தெருவெங்கும் தெய்வங்கள்-கடலூர் சீனு] இதை வாசிக்கும்போது நான் மனக்கிளர்ச்சியடைந்தேன். உணர்ச்சிவசப்பட்டேன். எவ்வளவு உண்மை. என் கண்கள் நிறைந்தன. ஏனென்றால் ஒரு பெண்குழந்தையின் தந்தையாக இதை என்னால் உணர முடிகிறது. நாம் எல்லாரும் ஒன்றுதானோ உள்ளூர? வெங்கடேஷ் சீனிவாசன் அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, உங்கள் அறம் சிறுகதைத் தொகுப்பு, உங்கள் படைப்பிலேயே மிகவும் உயர்வானது. சோற்றுக் கணக்கு …


