Tag Archive: திரைப்படம்

சினிமா, கடிதம்

அன்புள்ள ஜெ, சமீபத்தில் எழுதிய கட்டுரை வாசித்தேன். ‘ஆனால் படச்சுருள் காலாவதியாகும்போது அகிரா குரசேவா அவரது மகத்துவத்தை இழக்கிறார்’ என்பதை படித்து விட்டு சோகமாகி விட்டேன். நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்பது ஓரளவு புரிந்த போதும் கூட. தொழில் நுட்ப உபகரணங்களை உபயோகித்தல், மனித சமூகத்தை எதோ ஒரு தளத்தில், நேரத்தில், இணைக்க விட்டு விடுகிறது என்பதை போல.. நாடகம், நடனம், இசை, போன்ற செவ்வியல் ஆரோகணித்த கலைகளையும், புகைப்படம், சினிமா, முதலான நவீன கலைகளையும், செவ்வியல் …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=8136

சினிமா என்ற உரையாடல்

இந்த அவையில் சினிமாவைப்பற்றிப்பேசுவதற்கு எனக்கிருக்கும் தகுதி என்னவென்றால் எனக்கு சினிமா பற்றிய முறையான, சீரான அறிவு இல்லை என்பதையே சொல்லவேண்டியிருக்கும். பலவருடங்கள் நான் சினிமாவைக் கவனித்ததே இல்லை. தமிழ் சினிமாவுக்கு நான் தற்செயலாக வந்தேன். முன்னரே எனக்கு சினிமாவில் நல்ல வாசகர்கள் இருந்தாலும்கூட என் நண்பர் லோகிததாஸின் கட்டாயத்தால் வேறு வழியில்லாமல் கஸ்தூரிமானுக்காக வசனங்கள் எழுதினேன் இன்று எனக்கு சினிமா சார்ந்த ஆர்வம் இந்த அளவில்தான். அது ஓர் எளிய நல்ல தொழில் என்று எனக்கு பட்டது. …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=8068

அங்காடித்தெரு கேரளத்தில் …

அங்காடித்தெரு கேரளத்தில் வெளியாவதில் பல சிக்கல்கள். என் நண்பர் கோவை கேசவேட்டன் அவர்கள்தான் வினியோகஸ்தர். ஏற்கனவே சிலர் தமிழ்ப்படங்களை இருவாரம் கழித்தே வெளியிடவேண்டும் என்ற கேரள தயாரிப்பாளர் அமைப்பின் தடையை மீறியதனால் ஒட்டுமொத்தமாக தமிழ்ப்படங்களை தடைசெய்தார்கள். அதை மீறி ராவணன் வெளியாக திரையரங்க உரிமையாளர்களும் வினியோகஸ்தர்களும் தயாரிப்பாளர்களும் மோதிக்கொண்டார்கள். அதன் சிக்கல் காரணமாக வடகேரளத்தில் வெளியாகி சின்னாள் கழித்தே அங்காடித்தெரு தென்கேரளத்தில் வெளியாகியது. கேரளத்திலும் அது ஒரு பெரிய வணிக வெற்றி. இப்போதும் அரங்குகளில் உள்ளது. ஆனால் …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=7908

கேரளா கபே

அன்பு ஜெ.மோ., Kerala Cafe – மலையாளப் படம் பார்த்தீர்களா? இலக்கிய வாசிப்பின் அனுபவத்தை கிட்டத்தட்ட திரையில் கொடுக்கமுடியும் என நிரூபித்துள்ள படம். 10 சிறுகதைகள் செயற்கையாக இணைக்கப்பட்டிருந்தாலும் அருமையான படமாக இருக்கிறது. நெஞ்சைத்தொடும் கதைகள், பேய்க்கதை, நகைச்சுவை என நல்ல கதம்பம். அன்புடன், சாணக்கியன் http://vurathasindanai.blogspot.com/ இன்னும் பார்க்கவில்லை. அதேபோல இங்கும் ஒரு முயற்சி செய்யலாமென சில இயக்குநர்கள் சேர்ந்து விவாதித்தோம்- கடைசியில் சிக்கல் அதேதான், தயாரிப்பாளர் யார்? ஆனால் கேரளா கபே இருமடங்கு லாபம் …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=7732

நமது சினிமா ரசனை

சைதன்யாவிடம் ‘எந்தெந்த படங்கள்டி அப்பா பாக்கலாம்?’ என்று கேட்டு அவள் தேர்ந்து கொடுத்த படங்களை தினம் ஒன்றாகப் பார்த்துக்கொண்டிருக்கிறேன். மிகப்பழைய படங்கள், கொஞ்சம் பழையபடங்கள், புதுப்படங்கள் என ஒரு கலவை. படம் பார்ப்பதற்கான தூண்டுதலாக இருப்பது சமீபத்தில் வாங்கிய வீட்டரங்கு வசதிகொண்ட பெரியதிரை ஒளித்திரவத் தொலைக்காட்சி. ஆனால் எனக்கு சினிமா எப்போதுமே முக்கியமான கலைவடிவம் அல்ல. ஈடுபாட்டுடன் தொடர்ந்து படம் பார்க்க என்னால் இயலாது. என்னுடைய ஈடுபாடு தத்துவம், வரலாறு, இலக்கியம் சார்ந்ததே. அதிலும் சமீபமாக என்னை …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=7563

குப்பைத் தொட்டியும் சிம்மாசனமும்

சினிமாவுக்குள் நுழைந்த பின்னர் நான் உணர்ந்துவரும் வியப்புகளில் ஒன்று வாய்ப்புகள் வரும் விதம். யாரோ யாருடனோ சொல்கிறார்கள். அவர் இன்னொருவர் வழியாக அணுகுகிறார். அலகிலாத ஓரு விளையாட்டு நடந்து கொண்டே இருக்கிறது. திரையுலகில் யார் எப்படி வாய்ப்புகள் பெற்றார்கள் என்று பேசிக்கொள்வது மிக ஆர்வமான ஓர் உரையாடல். ராம்கோபால் வர்மாவின் இக்கட்டுரை என்னை மிகவும் கவர்ந்தது அதனால்தான் http://vaarthaikal.wordpress.com/2010/05/03/rgv2/

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=7322

19 ஆவது படி

கீழ்க்கண்ட செய்தியை ஓர் இணைய இதழில் கண்டேன். நீங்கள் 19 ஆவது படியின் தமிழ் வடிவத்தை எழுதுவதாக இருந்தது. ஆகவே இதை உங்கள் கவனத்துக்குக் கொண்டு வருகிறேன். உங்கள் கருத்து என்ன? எஸ். http://ww1.4tamilmedia.com/index.php/2009-04-19-23-29-27/2009-04-21-23-03-21/7217-storey-director அன்புள்ள எஸ். 19 அவது படி கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு முன் எழுதப்பட்டது. பல வடிவம் கண்டது. பலமுறை படமாக்க முயலப்பட்டது. கடைசியாக பரத் பாலாவுக்காக அதன் தமிழ் வடிவை நான் எழுதினேன். கதையை நான் திருவிதாங்கூர் பகுதிக்குக் கொண்டு வந்தேன். …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=7307

அங்காடித்தெரு, நூறாவது நாள்.

இன்று அங்காடித்தெரு நூறுநாளை தொடுகிறது. இவ்வருடத்தின் மாபெரும் வெற்றி இந்தப்படம்தான் என்று திரையுலகில் சொன்னார்கள். எளிமையான முதலீட்டில் எடுக்கப்பட்டு பற்பலமடங்கு லாபம் கண்ட படம். ஒரேசமயம் விமரிசகர்களின் பாராட்டையும் வணிக வெற்றியையும் பெறுவதென்பதே எந்த திரைப்படைப்பாளிக்கும் கனவாக இருக்கும். அதை வசந்தபாலன் சாதித்திருக்கிறார்

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=7295

தலைமறைவு

நகைச்சுவை தமிழ்நாட்டில் அதிகமாகப் புழங்கும் சொல் என்ன என்பதை தெரிந்துகொள்ள ஒரு வாய்ப்பு கிடைத்தது. செல் பேசியை எடுத்ததுமே ஹலோ என்பதற்குப்பதிலாக அதைச் சொல்லலாம் என்றும். ஆரம்பத்தில் அதிர்ச்சிதான். ”ஹலோ நான் ஜெயமோகன் பேசுறேன்..” என்ற பவ்யமான குரலுக்குப் பதிலாக ”தாயோளி!” என்று தெளிவாக ஒரு குரல் ”சார்?” ”தாயோளி!” ”யாரு வேணும்?” ”நீதாண்டா வேணும் தாயோளி” ”ஸாரி நீங்க வேற யாரையோ கேக்குகிறீங்க…அது நான் இல்ல…” ” டேய் தாயோளி” ”ஸாரி சார்,நீங்க நம்பர் செக் …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=574

லீனா மணிமேகலை

என்வரையில் எல்லா வேறுபாடுகளையும் மீறி அந்த உதவிகளுக்குப் பின்னால் உள்ள மனநிலை போற்றத்தக்கது.

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=7256

Older posts «

» Newer posts