அன்புள்ள ஜெயமோகன் உங்கள் பதிலுக்கு நன்றி. நீங்கள் அ.கி. பரந்தாமனாரின் இலக்கண நூலையும், மற்றொருவர் “தமிழ் நடைக் கையேடு” பற்றியும் குறித்துள்ளீர்கள். அ.கி. பரந்தாமனாரின் நூல் பல இலக்கண நூல்களின் மற்றொரு தகாத குணத்தை காண்பிக்கிறது. அது தூயதமிழ் சாய்பு கொண்டது. அதைப்பற்றிய விமரிசனங்கள் 1. தமிழ் எப்படி சமஸ்கிருதத்திலிருந்து தனி என வாதிடுகிறது. இது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான், இது பேச்சு அல்லது உரைநடை இலக்கண விவகாரம் அல்ல. 2. ஒரு பக்கம் தமிழில் இருக்கும் …
Tag Archive: தமிழ் இலக்கணம்
Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=28690
இலக்கணம், அ.ராமசாமி கடிதம்
ஜெயமோகனுக்கு தங்களின் இணையத்தில் இடம் பெற்றுள்ள ஒரு கடிதத்திற்கு நீங்கள் அளித்துள்ள பதில் தொடர்பாக இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். ”தமிழில் மரபான இலக்கணம் முழுக்க செய்யுளை மனதில்கொண்டு உருவாக்கப்பட்டது. நமக்கு உரைநடைக்கான இலக்கணம் இல்லை.உரைநடைக்கான இலக்கணம் என்பது பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஆறுமுகநாவலர், பின்னத்தூர் நாராயணசாமி அய்யர், வெள்ளக்கால் சுப்ரமணிய முதலியார் போன்றவர்களால் உருவாக்கப்பட்டது. அதிகமும் ஆங்கில இலக்கணத்தை முன்னுதாரணமாகக் கொண்டது.உரைநடை இலக்கணம் என்பது உரைநடை வளர்ந்து மாறும்போது தானும் மாறியாகவேண்டியது. தமிழாசிரியர்கள் அந்த மாற்றத்தை உணராமல் பத்தொன்பதாம் …
Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=28652
இலக்கணம்-கடிதங்கள்
அன்புள்ள ஜெயமோகன், இதில் உரைநடை இலக்கணத்தின் முக்கியத்தைப் பற்றி பேசியுள்ளீர்கள். அது முக்கியம் தான். தொல்காப்பியம், நன்னூல் போன்ற மரபு இலக்கண நூல்கள் நல்ல மரபுச் செய்யுள் செய்வதையே குறிக்கோளாக வைத்துள்ளன. அதனால் பள்ளி மாணவர்களுக்கு மரபு இலக்கண நூல்கள் படிப்பூட்டுவது நிறுத்தப்பட்டால், அல்லது வெகுவாக குறைக்கப்பட்டால், ஒரு நஷ்டமும் இல்லை. மொழி பேசுவதிலிருந்து வருவதால், இலக்கணம் என்பது எப்படி ஒரு மொழி பேசும் குழு, சில விதிகளை (அறிந்தோ, அறியாலமோ) பின்பற்றி பேசுவதை புரிந்து கொள்கின்றனர் …
Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=28203
நாத்திகம், இலக்கணம்
அன்புக்குரிய ஜெயமோகன் அண்ணாவிற்கு, வணக்கம். தங்களின் விரிவான பதிலுக்கு மிகவும் நன்றி. இந்துமதம் தொடர்பான ஆழ்ந்த அறிவு, அதை சரியான முறையில் வெளிப்படுத்தக்கூடிய மொழி ஆளுமை ஆகிய இரண்டும் உடையவராக கண்ணுக்கு எட்டியவரை நீங்கள் ஒருவரே தெரிகிறீர்கள். இpதை பயன்படுத்திக்கொள்வது கடமையாகும். எனவே உங்களின் நேரத்தில் சிறிது எடுத்துக்கொள்வதற்கு மன்னிக்கவும். உங்களின் பதில் சிறப்பான வரலாற்றுரீதியான ஒரு பின்புலத்தை அளித்தது. அத்துடன் நம் எழுத்தாளர்களின் காலத்தால் முன்னோடியான சிந்தனை வீச்சையும் அறிந்து கொண்டேன். அவர்கள் மீதான மரியாதை …
Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=28160


