Tag Archive: கொற்றவை

காடு, விஷ்ணுபுரம், வெறும்முள்-கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, வணக்கம். ‘காடு’ நாவல் சமீபத்தில் வாசித்து முடித்தேன். ஒரு பிரம்மாண்ட அனுபவத்தை எனக்கு அளித்தது. மிக்க நன்றி. உங்கள் வரிகளில் காடும் காடு சார்ந்த இடங்களும் என்னுள் புது பரிணாமம் பெற்றது. இனி நான் காட்டை நேரில் காண நேர்ந்தால் அங்குள்ள சிறு பூச்சிகளின் ஓசையைக் கூட என் மனம் தவறவிடாது. அணு அணுவாய் ரசிக்கத்தோன்றும். கிரியும் அய்யரும் ரசித்தது போல. நாவலில் காட்டு வாழ்கையையும் நகர வாழ்கையையும் ஆங்காங்கே ஒப்பிடப்பட்டுள்ளது. அவை …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=35603

கொற்றவை-கடிதம்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, “என் ஆக்கங்களில் நான் மிகச்சிறப்பானதாக எண்ணுவது கொற்றவை” என்று தாங்கள் சொல்லி இருக்கிறீர்கள். ” முன்னூறு பக்கங்கள் வரை உரைநடையில் எழுதிவிட்டு பின்னர் இது கோரும் வடிவம் வேறு என்பதை உணர்ந்து செய்யுள் நடையில் எழுதியதாக ஒரு பேட்டியில் குறிப்பிட்டு இருக்கிறீர்கள். ” ஒரு யுகத்திற்கு ஒருமுறை ஆதிகேசவப் பெருமாள் புரண்டு படுக்கிறார் ” என்ற சொற்றொடரே விஷ்ணுபுரம் எழுதுவதற்கு ஆதாரமாக அமைந்தது என்றும் ஒரு குறிப்பு உண்டு. அது போல “கொற்றவை” …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=35667

வாசிப்புக்கு உதவி

மதிப்பிற்கும் அன்பிற்கும் உரிய ஜெயமோகன் சார் அவர்களுக்கு வணக்கங்கள். உங்களின் தீவிர ரசிகன் நான். உங்களுடய படைப்புகளில் ‘காடு’ மிகவும் பிடித்து இருந்தது . கொற்றவையும், விஷ்ணுபுரமும் வாசித்தேன் என்றாலும் , அது என் சிற்றறிவுக்குப் பெரிய விஷயமாக இருந்தது. எனவே இன்னும் சில முறை படித்து விட்டு உங்களுக்கு எழுதலாம் என்று இருக்கின்றேன். உங்களுடைய கட்டுரைகளைத் தொடர்ந்து வாசித்து வருகிறேன். தத்துவம், வரலாறு மற்றும் இலக்கியம் என்ற உங்களின் பரந்த எழுத்து பெரும் பிரமிப்பை அளிக்கின்றது. …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=35117

படைப்புக்குள் ஆசிரியன்

அன்புள்ள ஜெ , விஷ்ணுபுரம் வாசிக்கும் போது உங்களைப் பற்றிய எந்தத் தகவலும் தெரியாது, பின்பு உங்களை அறிந்த பின்பு திருவடியின் தந்தையில் உங்கள் தந்தையைக் கண்டேன், உங்களின் நெருக்கமானவர்களை உங்கள் புனைவில் மாற்றி மாற்றிக் கொண்டு வருகிறீர்கள். டார்த்தீனியத்தில் நீங்கள் உங்கள் தந்தை எப்படி இருக்க வேண்டும் என்று சிறு வயதில் விரும்பினீர்களோ அப்படியே வந்தார். இப்போது கிடா கதையில் உங்கள் அண்ணனை அப்படியே காண்கிறேன். இதில் முறை பெண்ணிற்கு பதில் அம்மாவின் நெருக்கமான அன்பு …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=35067

சுயபலி

அன்புள்ள ஜெயமோகன், நலமா? கொற்றவை மறுவாசிப்பு செய்து கொண்டு இருக்கிறேன். முதல் முறை மனதிற்கு சிக்காத பல விஷயங்களுக்கு இப்போது தெளிவு கிடைத்துள்ளது. இருப்பினும் ஒரு விஷயம் தொடர்ந்து பிடி கிடைக்காமல் நழுவிச் சென்று கொண்டே இருக்கிறது. அது நாவலின் மூன்றாம் பகுதியில் கண்ணகியும் , ஐந்தாம் பகுதியில் சேரன் செங்குட்டுவனும் பழங்குடி வழிபாட்டில் வழியெங்கும் காணும் மனித பலிக் காட்சிகள். மனிதர்கள் தங்களைக் தாங்களே பலி கொடுக்கின்றனர். இப்படி ஒரு வழிபாட்டு முறை பல்வேறு பழங்குடிச் …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=30136

காடு, கொற்றவை-கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகனுக்கு, நான் தங்களுக்கு எழுதும் முதல் கடிதம். இது முதல் இனி உங்களின் பாதிப்பு என்னைப் புரட்டிப்போடும் எல்லா நேரங்களிலும் கடிதம் எழுத முயலுவேன். தங்களைப் பற்றி வாசிப்பின் மூலமறிந்து தங்கள் எழுத்தின் உன்னத வல்லமையை உணர்ந்த பின்னரே இதை எழுதுகிறேன். யாரையும் எளிதில் பாராட்டிவிடும் எளிய மனிதன் அல்ல நான். நான் என்னும் அகந்தையை சற்று அதிகமாகக் கொண்டவன் நான். ஆனால் எல்லாம் “காடு” வாசிப்பிற்கு முன்னால். ஒரு புத்தகம் எவ்வளவு ஆழமாக, உக்கிரமாக, …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=29214

கொற்றவை – ஒரு கடிதம்

அன்புள்ள திரு.ஜெயமோகன் அவர்களுக்கு , நலம் அறிய ஆவல். எட்டு மாதங்களுக்கு முன்பு வாங்கிய “கொற்றவை” புத்தகத்தை கொஞ்சம் கொஞ்சமாக, கவனமாக தற்போதுதான் வாசித்து முடித்தேன். எனக்கு 60% தான் புரிந்து கொள்ள முடிந்தது. கடந்த நான்கு ஆண்டுகளாகத்தான் நான் புத்தகம் வாசித்துக் கொண்டு இருக்கின்றேன். எனக்கு இன்னும் இந்த நாவலை உள்வாங்கிக் கொள்ளப் பக்குவம் வரவில்லை என்ற குற்ற உணர்வு வந்துவிட்டது. ஆனால் புரிந்த வரை எனக்கு மிகுந்த வியப்பு தந்ததையும் ஒப்புக்கொள்ள வேண்டும். நிஜமாகவே …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=27467

கனவும் வாசிப்பும்

அன்புள்ள ஜெ, உங்கள் வலைத்தளத்தில் சமீபத்திய யானை பற்றிய பதிவான யானைப்பலி வாசித்த பிறகு உறங்கச் சென்றேன். இரவு தோன்றிய (நிகழ்ந்த?) கனவு இது. போர்க்களம் போல ஒரு விளையாட்டு மைதானம் அல்லது விளையாட்டு மைதானம் போல ஒரு போர்க்களம். ஒரே ஒரு யானை மைதானத்தில்; சுற்றிலும் நிறைய மனிதர்கள், அவர்களில் நானும் ஒருவன். யானை என்னை கவனிக்கிறது; கவனிப்பதை நான் உணர்கிறேன். யானையின் தும்பிக்கையில் ஒரு பெரிய கல்; என்னை நோக்கி வீசுகிறது. பறந்து வரும் …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=26896

கொற்றவையும் சன்னதமும்

அன்புள்ள ஜெயமோகன், நான் தங்களின் மூன்று வருட வாசகன். உங்களை கோவைப் புத்தகக் கண்காட்சியில் சந்தித்துப் பேசியது நினைவிருக்கலாம். “பண்படுதல்” பற்றியும் “டி.டி கோசம்பி” ஆவணப் படத்தைப் பற்றியும் என் எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்துகொண்டேன். என்னுடைய இலக்கிய, சமூக, அரசியல் தளங்களில் உருவாகி வந்த கருத்துக்கள் அனைத்திலும் உங்களின் தாக்கம் மிக அதிகம். உங்களின் விஷ்ணுபுரம், பின் தொடரும் நிழலின் குரல் நாவல்களை முடித்து விட்டு இப்பொழுது “கொற்றவை” படித்துக் கொண்டிருக்கிறேன். சுமார் 400 பக்கங்கள் கடந்த …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=26888

கடிதங்கள்

அன்புள்ள ஜெ கடைசியில் கேட்டே விடுகிறேன். அந்த கடைசி முகம் என்ன? எந்த முகத்தை ஓர் ஆண் உயிரைக்கொடுத்தாவது பார்ப்பான்? கதையிலே எங்காவது க்ளூ இருக்கிறதா என பலமுறை தேடிப்பார்த்தேன். கிடைக்கவில்லை செம்மணி அருணாச்சலம் அன்புள்ள அருணாச்சலம் கதையில் க்ளூ இல்லை. உங்கள் வாழ்க்கையில் இருக்கும் பத்தாயிரம் ரூபாய் டிடியுடன் சுயவிலாசமிட்ட கடிதம் அனுப்புபவர்களுக்கு பதில் அளிக்கப்படும் ஜெ அன்புள்ள ஜெ, நலமா அகந்தொட்டு புறந்தொட்டு என் வாழ்க்கையைப் புரட்டிப் போட்டு விட்டாள் ‘கொற்றவை’. இருமுறை வாசித்த …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=22607

Older posts «

Switch to our mobile site