கவிதைக்கூடல் படங்கள் தொடர்புடைய பதிவுகள்கல்பற்றா நாராயணன் கவிதையரங்குதுவைதம்கல்பற்றா நாராயணன் கவிதைக்கூடல்
Tag Archive: கல்பற்றா நாராயணன் கவிதைக்கூடல்
Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=34844
கல்பற்றா நாராயணன் கவிதையரங்கு
சென்ற வருடம் கோவையில் நிகழ்ந்த விஷ்ணுபுரம் விருதுவிழாவிற்கு கல்பற்றா நாராயணன் வந்திருந்தார். அன்று மதியம் நண்பர்கள் அவருடன் ஒரு இயல்பான சந்திப்பு உரையாடலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கல்பற்றாநாராயணனின் கவிதைகள் வாசிக்கப்பட்டு அதன்மேல் அவரிடம் கேட்கப்பட்ட வினாக்களுக்கு அவர் பதில் சொன்னார். அப்போது நண்பர் ராம் கல்பற்றா நாராயணனுக்காக ஒரு கவிதையரங்கு ஏற்பாடுசெய்யவேண்டும் என்று சொன்னார். ஏற்கனவே விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் சார்பில் தேவதேவன், எம்.யுவன் ஆகியோருக்குக் கவிதை வாசிப்பரங்குகளை அமைத்திருந்தோம். பல இடங்களில் இடம்தேடி கடைசியில் ஆலப்புழாவில் …
Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=34816
துவைதம்
[ஒன்று] தூங்கிக்கொள் முலைகளை நான் பார்த்துக்கொள்கிறேன். இருந்திருந்து சலித்திருக்கும் அவை மாற்றி அமரச்செய்கிறேன் கைபிடித்து வெளியே கொண்டுசெல்கிறேன் வாசலுக்கு அழைத்துச்சென்று கம்பியில் தலைமுட்டி தூங்கும் பயணிகள் கொண்ட கடைசிப்பேருந்தை காட்டுகிறேன் பொறாமைக்குடுக்கைகளான இந்த சகபாடிகளை எனக்குப்பிடிக்கும் ஒன்று கேசாதிபாத மதுரம் இன்னொன்று சிந்தைக்கினியது* படிஏறுவதிலும் பெருமூச்சுவிடுவதிலும் மேற்படிப்பு முடித்திருக்கிறார்கள் சிலசமயம் வாசலில்காத்திருக்கும் இரு பதற்றங்கள் சிலசமயம் முற்றத்தில் இறங்கிநிற்கும் இரு நிலைகொள்ளாமைகள் உள்ளே புயலடிக்கும் இரு தேனீர்க்கிண்ணங்கள் வெளியே சொல்லமுடியாத இரு திணறல்கள் சின்னப்பிள்ளைகள் வரையும் மனிதவடிவங்கள் …
Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=34824
கல்பற்றா நாராயணன் கவிதைக்கூடல்
நண்பர்களே வரும் மார்ச் 2,3 சனி ஞாயிறு ஆகிய தேதிகளில் கேரள மாநிலம் ஆலப்புழையில் மலையாளக் கவிஞர் கல்பற்றா நாராயணன் அவர்களின் கவிதைகள் குறித்து ஒரு வாசிப்பு அரங்கம் நடத்தவுள்ளோம். அவரின் தமிழ்ப்படுத்தப் பட்ட கவிதைகளை வாசிக்கிறோம், பின் அது குறித்து உரையாடுகிறோம். ஏற்கனவே இதேபோன்று தேவதேவன் மற்றும் யுவன் ஆகியோர் கவிதைகளை முன் வைத்து தனித் தனியே 2 வாசிப்பரங்குகள் நடத்தியுள்ளோம். இதில் கல்பற்றா உட்பட ஜெயமோகன்,யுவன்,கலாப்ரியா ,தேவதேவன் , மோகனரங்கன் ஆகியோர் கலந்து கொள்ள …
Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=34395



