ஆர்வி அவரது சிலிகான் ஷெல்ஃப் தளத்தில் நெருக்கடிநிலைக்காலகட்டத்தில் கேரளத்தில் கொல்லப்பட்ட மாணவர் ராஜனின் தந்தை ஈச்சர வாரியர் எழுதிய ‘ஒரு தந்தையின் நினைவுக்குறிப்புகள்’ என்ற நூலை அறிமுகம் செய்திருக்கிறார். ராஜன் கேரள அரசியல் வரலாற்றுடன் பின்னிப்பிணைந்த நிகழ்ச்சி இது. கொல்லப்பட்ட இளைஞரின் தந்தையின் பிடிவாதமான நீதிதேடல் இப்போது ஒரு சமகாலத் தொன்ம அந்தஸ்தை அடைந்துள்ளது. ராஜன் ஓர் இடதுசாரித் தீவிரவாதக் குழுவில் இருந்தார். இடதுசாரிகளை ஒடுக்கும்படி அரசு ஆணையிட்டதற்கேற்ப போலீஸார் இளைஞர்களைப் பிடித்து வதைத்துத் தகவல்களைக் கறந்தனர். …
Tag Archive: ஈச்சர வாரியர்
Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=25150


