Tag Archive: அறம்

அறம்-கடிதம்

திரு ஜெயமோகன் அவர்களுக்கு அறம் படித்துவிட்டு எழுதுகிறேன். பொதுவாகவே நான் சற்றே வேகமாகப் படிக்கும் பழக்கம் கொண்டவன். ஆனால் இந்தமுறை அப்படி நடக்கவில்லை. மதியம் மூன்று மணியளவில் ஆரம்பித்து இரவு ஒன்பது மணி வரை ” சோற்றுக் கணக்கு ” வரையே படிக்க முடிந்தது. எந்த சிந்தனையுமின்றி மனம் வேறு ஏதோ உலகில் இருந்தது. “பைல்க’’ளில் குறிப்பிட்டுள்ளதைப் போல ஒவ்வொன்றுக்கும் ஒரு கட்டுரை எழுத வேண்டும் போல இருக்கிறது. உண்மையில் “அறம் ” படித்த பிறகு அடுத்த …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=34471

அறம்-ஒரு கடிதம்

அன்பார்ந்த ஜெயமோகன் , முதலில் எனது தற்போதைய வைரஸ் காய்ச்சலுக்குத்தான் நன்றி சொல்லவேண்டும். இல்லாவிட்டால் மூன்று நாள் கட்டாய ஓய்வு கிடைத்திருக்குமா? அதிலும், மிக அமைதியான சூழலில் ‘அறம்’ படித்திருக்கத்தான் முடியுமா? யானை பற்றி அடுத்தடுத்து இரண்டு கதைகள்… வணங்கான் & யானை டாக்டர். அதென்னவோ யானை மேல் ஏறுவதென்பது அலாதிதான். தென் மாவட்டக்காரர்களும், மலையாளிகளும் அதிகம் ரசிக்கும் ஒரு விலங்கு யானை. குலசேகர ஆழ்வாரையே அது ஈர்க்கவில்லையா? அவர் ராஜா, அதுவும் கேரளத்து ராஜா “கம்ப …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=34393

நான்கு வேடங்கள்

அன்புள்ள ஜெ , தேடல் கொண்டவனாக ஒரு கட்டத்தினை அடைந்து விட்டேன் .ஆனால் என் வேலை சார்ந்த தளத்தினை மிக சிக்கலாகி விட்டேன். இத்தனைக்கும் நான் பணி செய்த இடங்களில் மிகத் திறமை கொண்டவனாக அறியப்படுவேன் . இத்தனை ஆண்டுகள் கடந்தும் கூட நான் தொழில் வேலை சார்ந்து செல்ல முடியும் என்று கூட முடிவெடுக்க முடியவில்லை .என்னை கவனித்தவர் நீங்கள், நான் என்னை எப்படி வடிவமைத்துக் கொள்வது என்று நீங்கள் ஏதேனும் அறிவுரை வழங்க வேண்டுகிறேன். …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=28848

புனைவு, முழுமை

உங்களின் “நவீன தமிழிலக்கிய அறிமுகம்” நூல் மூலமாகவும், உங்களின் இணைய தளத்தில் உள்ள இலக்கிய கட்டுரைகளின் வழியாகவும் கற்றுக்கொண்டதில் புதுக்கவிதையை குழப்பமில்லாமல் ஓரளவிற்கு வாசிக்க முடிகிறது. சற்று குழப்பமாக இருந்தாலும் மீண்டும் மீண்டும் படிக்கும் போது அதை என் அனுபவம் சார்ந்து புரிந்துகொள்ள முடிகிறது. கவிதைகள் சில பல வார்தைகளில் இருப்பதால் தொடர்ந்துபடிப்பதன் மூலம் அதில் உள்ள படிமம், குறியீடு போன்ற விசயங்களையும் கண்டுகொள்ள முடிகிறது. ஆனால் சிறுகதை, நாவல் போன்று பக்கம் பக்கமாக வாசிக்கும்போது மொழிக்குறிய …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=27554

ஏன் இருண்மையை வாசிக்கவேண்டும்?

மதிப்புமிகு ஜெயமோகன் அவர்களுக்கு. நான் இது இரண்டாவது முறை எழுதும் கடிதம். எனது முந்தைய கடிதமும் ஏறக்குறைய இதை ஒட்டியதே. இதற்கும் விளக்கம் கிடைக்காவிட்டால் இனி நான் இலக்கியம் வாசிப்பது வீண் என்றே நினைக்கிறேன். இந்தக் கேள்வியை நான் உங்களிடம் கேட்கக் காரணம் உங்கள் அறம் சிறுகதைத் தொகுப்புதான். மானுடத்தின் மீதான நம்பிகையை அது கூட்டுகிறது. அதுவே நான் இலக்கியமாக நம்பி வாசிக்கும் வடிவம். இந்நிலையில் ‘பாலமுருகனின் நாவல்‘ எனும் தலைப்பில் தாங்கள் இணைத்த கட்டுரையில் ஷோபா …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=27345

நூறுநாற்காலிகளும் நானும்

[தலித் ஆய்வுநூல் வெளியீட்டகமான எழுத்து பிரசுரம் நூறுநாற்காலிகள் கதையை மட்டும் சிறிய மலிவுப்பதிப்பாக அதிகமான பிரதிகள் வெளியிட்டு மக்களிடையே கொண்டுசெல்லவிருக்கிறது. அதற்கு எழுதிய முன்னுரை] இந்தவருடம் ஜனவரியில் திடீரென்று எழுந்த ஒரு மன எழுச்சியைத் தொடர்ந்து பன்னிரண்டு கதைகள் எழுதினேன். முதல் கதை ‘அறம்’. அதுவே அத்தனை கதைகளுக்கும் சாராம்சமான கரு. இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பு இலக்கியத்தின் சாராம்சம் என்றால் என்ன என்று நான் கேரளப் பெரும்படைப்பாளியான வைக்கம் முகமது பஷீரிடம் கேட்டேன்.  ‘நீதியுணர்ச்சி’ என்று அவர் …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=21421

அறம்-எஸ்.கெ.பி.கருணா

நண்பர் ஜெயமோகன் அவர்களுக்கு, இன்று, எனது கல்லூரியில் பணிபுரியும் அவ்வளவு பேருக்கும் புத்தாண்டுப் பரிசாக அறம் புத்தகத்தைப் பரிசளித்தேன். ஒரே நேரத்தில், அத்தனை பேருக்கும் எனக்கு மிகவும் பிடித்த ஒரு புத்தகத்தைப் பரிசாக வழங்குவது மிகப் பெருமிதமாக இருந்தது. தனித்தனியாக அனைவருக்குமே வாழ்த்துக் கூறிப் புத்தகத்தைக் கொடுக்கும் போதும் ஒரு சில விஷயங்களை கவனித்தேன். 1. புத்தகம்தானே என்று யாருமே ஒரு வித அலட்சியமாகப் பாராமல், அத்தனை பேருமே சற்று மரியாதையுடனே பெற்றுக் கொண்டார்கள். 2. பெரும்பாலும் …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=23654

கடிதங்கள்

ஜெயமோகன் அவர்களுக்கு வணக்கம். தங்களது அறம் நூல் வாசித்துக்கொண்டு இருக்கிறேன்.. ஒரு வாரத்திற்கு முன்பு முதல் கதையான அறம் வாசித்து அதன் பாதிப்பில் இருந்து வெளி வர இயலாததால் தொடர்ந்து படிக்கவில்லை. நேற்று வணங்கான் வாசித்தேன். “மனிதன் கள்ளமற்று இருக்கும்போது கடவுள் அவரது இரக்கமில்லாத விதிகளை எல்லாம் கொஞ்சம் தளர்த்திக்கொள்ள வேண்டும். வேறு வழியே இல்லை அவருக்கு.” கடவுள் எத்தனையோ முறை இக்கட்டான சூழல்களில் இருந்து காப்பாற்றி இருக்கிறார். அப்போதெல்லாம் மிகுந்த நன்றிமட்டுமே இருந்தது. உங்கள் இந்த …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=23090

கடிதங்கள்

அழகிய பெண்,அன்னை, ஆதர்ச பெண்… ஒவ்வொரு ஆணும் ஜூலியா ராபர்ட்ஸ் வடிவில் தன் அன்னையை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறான் என்று ஓஷோ ஒருமுறை சொன்னார்… நாலாவது முறை அவன் கண்டது தன் ஆதர்சப் பெண்ணின் வடிவில் தன் அன்னையைத்தான்.. திரும்பிப் பார்க்கும் முன்பே அது அவனுக்கும் நன்றாகத் தெரியும்… இதுதான் என்னுடைய புரிதல்… ஆயினும் மோனோலிசா புன்னகை போல விளக்கியும் விளக்க முடியாத ஒரு புதிர் இந்தக் கதையில்(அந்தமுகம்) உள்ளது… ஒருவேளை நம் அந்தரங்கத்திற்குத் தெரியுமோ என்னவோ… …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=22752

பின்தொடரும் நிழலின்குரலும் அறமும்

அன்புள்ள ஜே நீண்ட நாட்களாக எதுவும் எழுதாமல் இருந்தபின், எண்ணங்களைக் கோர்வையாக்கி எழுத விழைகிறேன். இந்தக்`குழுமத்தில் சேர்ந்த பிறகு உங்கள் படைப்புகளைத் திரும்பவும் ஒரு புதிய கோணத்தில் படிக்க எண்ணி ,இரண்டாம் முறையாகப் “பின் தொடரும் நிழலின் குரல்” படிக்க ஆரம்பித்தபொழுது இவ்வாறு ஒரு அனுபவத்திற்குள்ளாவேனென்று நினைக்கவேயில்லை. அதன் தாக்கம் என்னைப் பல திசைகளுக்கு இழுத்துச்சென்றது. அருணாச்சலம், கெ.கெ.எம், வீரபத்ரபிள்ளை, புகாரின், அன்னா, குழந்தை, ஜெயமோகன், டால்ஸ்டாய்….. அனைவருமே என்னோடு கூடவே இருப்பதுபோல் ஒரு உணர்வு என்னால் …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=22672

Older posts «

Switch to our mobile site