என்னுடைய முதல் நினைவு நான் ஆறுமாதக் கைக்குழந்தையாக இருந்தபோது தொடங்குகிறது.இதை நவீன உளவியலாளர் அன்றிப் பிறர் நம்பமாட்டார்கள் என்று நான் அறிவேன். பலரிடம் சொல்லி நகைப்புக்கு இடமாகியிருக்கிறேன். நானே அதை ஒரு கனவு எப்படியோ நனவாக மூளையால் தவறாக எண்ணப்பட்டுவிட்டது என்று எண்ணிக்கொண்டிருந்த காலமும் உண்டு. 1994இல் நித்யா குருகுலத்தில் பஞ்சாபைச்சேர்ந்த மூத்த உளவியலாளர் ஒருவரிடம் அதைப்பற்றிச் சொன்னேன். அது அபூர்வமானதுதான் ஆனால் மிக அபூர்வமானது ஒன்றும் அல்ல என்று சொன்னார். நான் ஒரு தவழும் குழந்தை. …
Tag Archive: அனுபவம்
Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=804
முதற்சுவை
அம்மாவுக்கு நல்ல குரல், ஆனால் பாட்டு பாடுவதில்லை. கவிதைகள்தான் மெல்லிய ராகத்துடன் சொல்லுவாள். சம்ஸ்கிருத யாப்பை ஒட்டி மலையாளத்தில் கவிதை இலக்கணம் அமைந்தபோது சம்ஸ்கிருதத்தில் உள்ள சந்தங்களும் கவிதையில் குடியேறின. அனுஷ்டுப்பு சந்தத்தில்தான் பழைய கவிதைகள் பெரும்பாலும் இருக்கும். துஞ்சத்து எழுத்தச்சன் கிளிப்பாட்டு என்ற நாட்டார் சந்தத்தில் தன் ‘அத்யாத்ம ராமாயணம்’ காப்பியத்தை எழுதி அதைப்பிரபலப்படுத்தினார். பின்னர் கிளிப்பாட்டு முக்கியமான ஒரு சந்தமுறையாக மாறியது. கிட்டத்தட்ட சொல்வதுபோலவே ஒலிக்கும் கேட்க ஒருவகை ஆசிரியப்பா. பெரும்பாலான மலையாளிகள் கவிதைகளை …
Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=807
இணைவைத்தல்
[ஆகஸ்ட் 8, 2008 அன்று வெளியான கட்டுரை. மறுபிரசுரம்] இன்று எங்கள் பதினேழாவது திருமண நாள். 1991 ஆகஸ்ட் எட்டாம் தேதி நான் அருண்மொழியை மணந்தேன். எனக்கு அப்போது 29 வயது. அருண்மொழிக்கு 20 தாண்டியிருந்தது. நான் ‘ரப்பர்’ நாவல் எழுதி அகிலன் நினைவுப்பரிசு பெற்று இலக்கியவட்டாரத்தில் கவனம் பெற்றிருந்தேன். ‘படுகை’, ‘போதி’, ‘ஜகன்மித்யை’, ‘மாடன்மோட்சம்’ போன்ற கதைகள் பேசப்பட்டன. ரப்பர் நாவலைப்படித்துவிட்டு என் வாசகியாக அறிமுகமானாள் அருண்மொழி. ஒரு கட்டத்தில் அது காதலாகியது. காதல் மணம். …
Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=597
நிழல்கள்
சென்ற செப்டெம்பர் எட்டாம்தேதி ஆந்திரத்தில் நல்கொண்டா என்ற ஊருக்கு அருகில் உள்ள பன்னகல் என்ற சிறு கிராமத்துக்குச் சென்றிருந்தோம். தொல்பொருட்துறையால் பேணப்பட்டுவரும் ‘பச்சன சோமேஸ்வரர்’ ஆலயத்தைப் பார்த்துக் கொண்டிருந்தபோது அங்கே ‘சாயா சோமேஸ்வரர்’ ஆலயம் பற்றி எழுதிவைக்கப்பட்டிருந்ததைப் படித்தோம். அந்த ஆலயம் பன்னகலிலில் இருந்து மேலும் தள்ளி, கரும்பும்சோளமும் வளர்ந்து பச்சை அலைகள் நெளியக்கிடந்த விரிந்த வயல்பரப்புக்கு நடுவே செந்நிற நதிபோல ஓடிய செம்மண்சாலைக்கு மறு நுனியில் இருந்தது. கார் புயல்பட்டபடகுபோல அலைபாய, அந்தச்சாலையில் சென்று …
Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=1083
கடைசிக் குடிகாரன்
1985 ல் ஒரு ஆடிமாதம், மெல்லிய மழைத்தூறல் விழுந்துகொண்டிருந்த இரவில் நான் காசர்கோட்டில் அந்தச் சாராயக்கடை முன் வந்துசேர்ந்தேன். நான் தூங்கி பலநாட்கள் ஆகிவிட்டிருந்தன. என்னை ஓயாது துரத்திக்கொண்டிருந்த தனிமை இரவுகளில் பலமடங்கு எடை கொண்டுவிடும். நோய்களெல்லாம் இரவுகளில் வீரியம் கொள்கின்றன. தனிமை ஒரு நோய். துயரமும் ஒரு நோய்தான். ஆனால் அவ்வப்போது ஓர் அலைபோல தூக்கம் வந்து என் மீது படர்ந்து என்னை எங்கெங்கோ கொண்டுபோய் சுழற்றி திருப்பிக் கொண்டு வந்துவிடும். சிலசமயம் சாலையில் …
Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=970
ஜெ.சைதன்யாவின் மொழியியல் நோக்கு
ஜெ. சைதன்யாவுக்கும் தமிழன்னைக்குமான உறவென்பது அவர்களுடைய சொந்த அன்னைக்கும் அவர்களுக்கும் இடையேயான உறவுக்கு நிகரானது .ஜெ. சைதன்யாவின் அதிகபட்ச சாத்தியம் என்ன என்பதை ஒரு படி மேலாகவே கற்பனைசெய்து மதிப்பிட்டு அதற்கேற்ற அதிகபட்ச கவனத்துடன் அனைத்தையும் அவர் ஒழுங்கு செய்தபோதிலும் அனேகமாக தினமும் எதிர்பாராத இடத்தில் ஜெ. சைதன்யாவைக் கண்டு தூக்கிவாரிப்போடுவதே இருவருக்கும் வழக்கமாக இருக்கிறது . “ஏண்டி ஸ்டாண்டில வச்ச பாலில ரசத்தக் கலந்தே ?” .”அஜிதான் அம்மா சேர் போட்டுக் குடுத்தான்” .” அம்மா …
Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=402
ஜெ சைதன்யாவின் பிரபஞ்சம்
ஜெ. சைதன்யா அவர்கள் அடிக்கடி பயன்படுத்தும் சொற்றொடர் “இந்த ஒலகத்திலேயே…” என்பதாகும். “இந்த ஒலகத்திலேயே ஒம்பேச்சு கா” என்றால் இனிமேல் காலம் பிரபஞ்சம் ஆகியவை உள்ளளவும் உன்னிடம் பேசப்போவதில்லை என்பதே பொருளாகும். காலம் பொருள்வயப் பிரபஞ்சம் ஆகிய இரண்டும் வேறு வேறல்ல என்ற புரிதல் அன்னாரிடமிருந்தது. பிரபஞ்சம் என்பது ஓர் ஒழுங்கு மற்றும் நோக்கம் என ஜெ. சைதன்யா அவர்கள் புரிந்துகொண்டிருக்கிறார். ஆகவே ஒவ்வொன்றிலும் உள்ள ஒழுங்கைத் தன் முழு ஆளுமையாலும் வலியுறுத்துவது அவரது வழக்கம். உதாரணமாக …
Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=401
வற்கீஸின் அம்மா
வற்கீஸ் என் அண்ணாவுடன் படித்து தோற்று ஏழாம் வகுப்பில் என்னுடன் படிக்க வந்தான். என்னுடன் படித்த அவனது தம்பி சேவியர் என் தங்கையுடன் படிப்பதற்காகச் சென்றான். வற்கீஸின் அப்பா ராணுவ வீரராக ஓய்வுபெற்று அப்போது அருமனையில் டாக்ஸி ஓட்டிக்கொண்டிருந்தார். அக்காலத்தில் அருமனையில் நான்கே டாக்ஸிகள். ஆகவே டாக்ஸி ஓட்டுவதென்பது ஒரு உயர்தொழில்நுட்ப வேலை. டிரைவர் ராஜு அவரது தைரியம், நிதானம், யார் என்றில்லாமல் உதவும் தன்மை ஆகியவற்றுக்காக புகழ்பெற்றிருந்தார். அவர் இறந்து இப்போது முப்பத்தைந்து வருடங்களாகின்றன, இன்றும் …
Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=755
ஜெ.சைதன்யாவின் கல்விச்சிந்தனைகள்
ஜெ. சைதன்யா ‘கின்டு விடியாலாயா’ என்ற பள்ளியில் சேர்க்கப்பட்டது அவருடைய கோரிக்கைக்கு ஏற்பவே என்பது ஓர் உண்மை. ஆனால் அவர் ‘க்கூள்’ என்பது வேறு விதமாக இருக்குமென எதிர்பார்த்திருந்தார். இவரது தமையனார் ஜெ அஜிதன் தினமும் பள்ளிக்கு புத்தகப்பை, தண்ணீர் புட்டி முதலியவற்றுடன் போவதும், போகும்போது நல்ல உடைகளையும் ஷூக்களையும் அணிவதும், ரகசியமாக பொம்மைத்துப்பாக்கி கவண் கல் முதலியவற்றை எடுத்துக் கொள்வதும் இவர் கவனத்துக்கு வந்தபோது தானும் போக இவர் விரும்பியமை இயல்பே. ” பாப்பூவும் க்கூளுக்கு …
Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=397
துணை
சிற்றிதழ்களில் எழுத ஆரம்பித்த காலகட்டத்தில் ,1986ல் , திருமலை ஆசிரியத்துவத்தில் வந்துகொண்டிருந்த தீபம் இதழில் ஒரு கதை எழுதினேன். ‘ரோஜா பயிரிடுகிற ஒருவர்’. முதிர்ச்சி இல்லாத நடைகொண்ட அந்தக்கதையை நான் தொகுப்புகளில் சேர்க்கவில்லை. நீண்ட இடைவேளைக்குப் பின் அக்கதையை வாசித்த நினைவை ஒரு நண்பர் என்னிடம் பகிர்ந்து கொண்டார்.”ஜே, அது வைலோப்பிள்ளி ஸ்ரீதர மேனன் தானே?” .புன்னகை மட்டும் செய்தேன். மலையாளக்கவிஞர் வைலோப்பிள்ளி ஸ்ரீதரமேனனை நான் அவரது சொந்த வீட்டில்ற்குச் சென்று சந்தித்த அனுபவத்தைப்பற்றிய கதைதான் அது. திரிச்சூரில் …
Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=769



