முதற்கனல் – கடிதம்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, நலமாக இருப்பீர்களென நினைக்கின்றேன் …தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர்க்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள். இன்று நற்றிணை பதிப்பகத்திற்கு சென்று முதற்கனல் செம்பதிப்பு பிரதியை வாங்கி வந்தேன் .. கடந்த 2 வாரம் மும்பையில் இருந்ததால் வெள்ளி அன்று நேரில் வந்து பெற்றுக்கொள்ள இயலவில்லை பிரதி மிக பிரமாதமாகவும் மிக நேர்த்தியாகவும் வந்துள்ளது … காகித தரம், படங்களின் வண்ணக் கலவை, படம் பதிந்த காகித தரம், அச்சு தரம் அனைத்தும் மிகக் கச்சிதமாக வந்துள்ளது. தங்களின் …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=49082

ஜோ -சில வினாக்கள்

இந்தக் கருத்துக்களை முன்வைப்பதற்கு முன்பு என்னுடைய அரசியல்நிலைபாட்டை முன்வைத்துவிடுகிறேன். தேர்தலை ஜனநாயகத்தில் இயல்பாக நிகழும் ஒரு எளிய அரசியல்தலைமை மாறுதலாக மட்டுமே பார்க்கிறேன். அதன்மூலம் பொருளியல், சமூக மாறுதல்கள் ஏதும் நிகழப்போவதில்லை. மிக எளிமையான சில மாற்றங்கள் நிகழலாம். எழுத்தாளனாக நான் அவற்றில் நம்பிக்கை கொள்ளமுடியாது. நான் நம்பும் மாற்றம் வேறு. அது சமூகத்தின் மனநிலையில், பண்பாட்டு அமைப்பில் உருவாகும் மாற்றம். இப்படிச் சொல்கிறேனே, ஒரு சமூகமே ஊழலால் நிறைந்திருக்கையில் ஊழலுக்கு எதிரான சமூகமனநிலை மாற்றமே உண்மையான …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=49053

‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 51

VENMURASU_EPI_101

பகுதி பத்து : அனல்வெள்ளம் [ 4 ] அவைக்காவலர் தலைவனான குந்தளன் தன் உதவியாளர்களுடன் மந்தணஅவையில் ஓசையின்றி பணியாற்றிக்கொண்டிருந்தான். அமர்வதற்கான பீடங்களையும் பொருட்கள் வைப்பதற்கான உபபீடங்களையும் உரியமுறையில் அமைத்தான். சத்யவதி அமரவேண்டிய பீடத்தின் மேல் வெண்பட்டையும் பீஷ்மர் அமரவேண்டிய பீடம் மீது மரவுரியையும் சகுனி அமர வேண்டிய பீடம் மீது செம்பட்டையும் விரித்தான். உபபீடங்களில் என்னென்ன பொருட்கள் இருக்கவேண்டுமென துணைவர்களுக்கு ஆணையிட்டான். அது இளவேனிற்காலத் தொடக்கமாதலால் காற்று தென்மேற்கிலிருந்து வீசி வடகிழக்குச் சாளரம் வழியாக வெளியேறும். …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=48481

ஆழமும் அலைகளும்

அன்புள்ள ஜெயமோகன், வலசைப்பறவை 6 , பகற்கனவின் பாதையில் என்று தலைப்பில் எழுதப்பட்டிருந்த கருத்துக்கள் உள்ளதை உள்ளபடி விளக்கிக் கூறுகின்றன. கு.ப.ரா. பற்றி பத்து வருடங்களுக்கு முன்பு திண்ணையில் இதே கருத்துக்களை மிதமான வார்த்தைகளில் கூறியிருக்கிறீர்கள். நாற்பது வருடங்களாக தமிழ், இந்திய, ரஷ்ய இலக்கிய நூல்களை வாசித்து வருகிறேன்.தி,ஜா.வின் சிறுகதைகள் அனைத்தையும் வாசித்திருக்கிறேன். கடன் தீர்ந்தது, பாயசம், கொட்டு மேளம் போன்ற சிலவற்றை விரும்பி இருக்கிறேன். பல வருடங்களுக்கு முன்பு மோகமுள் வாசிக்க ஆரம்பித்து பின் முடியாமல் …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=48285

‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 50

VENMURASU_EPI_100_

பகுதி பத்து : அனல்வெள்ளம் [ 3 ] விதுரன் அம்பாலிகையின் மாளிகைமுற்றத்தை அடைந்தபோது அவனுக்காக சாரிகை காத்து நின்றிருந்தாள். அவளை நோக்கி ஓடிவந்து “சிறிய அரசியார் சினம் கொண்டு உங்கள் மாளிகைக்கே கிளம்பிவிட்டார்கள் அமைச்சரே. நான் அது பீடன்று என்று அவர் கைகளைப்பற்றி அமைதிப்படுத்தினேன்” என்றாள். “வந்திருக்கலாமே, ஏழை அமைச்சனுக்கு அது பெரிய கௌரவமாக அமைந்திருக்குமல்லவா?” என்றான் விதுரன். அவள் திகைத்தபின் “ஆனால்…” என்று சொல்லவந்து அதன்பின்னரே விதுரன் நகையாடியிருக்கிறான் என்று புரிந்துகொண்டு புன்னகை செய்தாள். …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=48479

மழைப்பாடலின் ஓவியங்கள்

அன்புள்ள  ஜெ, மழைப்பாடலில் ஓவியங்கள் மேலும் மேலும் அழகும் நுட்பங்களும் கொண்டவையாக மாறி வருகின்றன. சமீபத்தில் எந்த ஒரு தொடருக்கும் இவ்வளவு அழகான ஓவியங்களை நான் கண்டதில்லை. பல ஆயிரம் ரூபாய் செலவில் வணிக இதழ்கள் வெளியிடும் ஓவியங்கள் கூட இதில் பாதிக்குக்கூட இல்லை. விரிவாக்கிப்பார்க்கும்போது படங்களில் உள்ள நுட்பமான தகவல்கள் பிரமிக்கச்செய்கின்றன. உங்கள் வார்த்தைகள் அஸ்தினாபுரியையும் மார்த்திகாவதியையும் கனவிலே நிலைநாட்டுகின்றன என்பது எந்த அளவுக்கு உண்மையோ அதைப்போலவே ஓவியங்களும் செய்கின்றன. சிலசமயம் ஓவியம் உங்களை தாண்டிச்சென்றுவிடுகிறது …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=48778

மழைப்பாடலின் மௌனம்

அன்புள்ள ஜெ, வெண்முரசுவை மிகுந்த மன எழுச்சியுடன் ஒவ்வொருநாளும் இருமுறைக்குமேல் வாசித்துக்கொண்டிருக்கிறேன். பெரிய புத்தகமாகக் கையில் கிடைக்காமல் இபப்டிச் சிறிய அத்தியாயங்களாக கிடைப்பது எல்லா நுட்பங்களையும் பலமுறைவாசித்து அர்த்தம் அடைவதற்கு மிகவும் உதவியாக இருக்கிறது. அதிலும் முதற்கனலை விட மழைப்பாடல் இன்னும்கூட நுட்பமானது. முதற்கனலில் வெளிப்படையாக நிறைய விஷயங்கள் இருந்தன. தீவிரமான நிகழ்ச்சிகள் நடந்துகொண்டே இருந்தன. இதில் பெரியவிஷயங்கள் அதிகமாக நடக்கவில்லை. சுயம்வரங்களும் குழந்தைபிறப்பதும் மட்டும்தான் நடக்கிறது. ஆனால் கதாபாத்திரங்களின் குணச்சித்திரங்களும் அவர்களின் உறவுகளுக்கிடையே உள்ள நுட்பமான …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=48780

‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 49

VENMURASU_EPI_99_

பகுதி பத்து : அனல்வெள்ளம் [ 2 ] சகுனியின் படை பெருக்கெடுத்து நகர்நுழைவதை விதுரன் முகத்தில் எந்த உணர்ச்சியும் வெளிப்படாமல் நோக்கி நின்றான். முதலில் பதினெட்டு யானைகள் பொன்வேய்ந்த முகபடாமும் பொன்னூல் பின்னிய அணிபடாமும் தொங்கும் மணிச்சரடுகளும் அணிந்தவையாக, செம்மணிக்குடை பிடித்த காவலன் மேலே அமர்ந்திருக்க, சங்கிலி குலுங்கும் ஒலியுடன் காலெடுத்துவைத்து வந்தன. ஒவ்வொன்றிலும் பொன்னணிசெய்த பெரிய பித்தளைப்பேழைகள் இருந்தன. அதன்பின் முந்நூறு ஒட்டகங்கள் அரிக்குஞ்சலங்கள் அணிந்த கழுத்துக்களுடன், கடிவாளம் இழுபட தலைதாழ்த்தியும், பந்தங்களைக் கண்டு …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=48477

உதயகுமார், மதமாற்றம்- கடிதங்கள்

அன்புள்ள ஜெ, அன்னிய நிதி மூலம் சமூகசேவை என்ற போர்வையில் மதமாற்றம் நடந்தால் கூட பரவாயில்லை என்றும், ஆனால் அரசியல் செயல்பாட்டாளர்கள் அத்தகைய நிதியைப் பெறுவது மட்டுமே ஆட்சேபத்திற்குரியது என்றும் நீங்கள் கூறுவது வினோதமாக இருக்கிறது. அந்த மதமாற்றங்களின் உண்மையான நோக்கம் அரசியலும் அதிகாரம விழைவுமே அல்லவா? தங்கள் விசுவாசிகளின் எண்ணிக்கையை திட்டமிட்டு படிப்படியாக அதிகரித்து அதன் மூலம் இந்திய சமூகத்தில் பிளவுகளையும் பரஸ்பர வெறுப்புணர்வுகளையும் கலாசார அழிவுகளையும் உண்டாக்குவது *மட்டுமே* அன்னிய நிதி மூலம் செய்யப்படும் …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=48651

‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 48

EPI_98

பகுதி பத்து : அனல்வெள்ளம் [ 1 ] அஸ்தினபுரியின் வரலாற்றில் அதற்கிணையானதொரு மழைக்காலமே வந்ததில்லை என்றனர் கணிகர். ஆறுமாதகாலம் மழை பிந்தியதுமில்லை. வந்தமழை மூன்றுமாதம் நின்று பொழிந்ததுமில்லை. புராணகங்கையில் நீர் ஓடியதைக் கண்ட எவருமே அஸ்தினபுரியில் வாழ்ந்திருக்கவில்லை. நூற்றைம்பதாண்டுகளுக்கு முன்பு அதில் நீர்பெருகியதை கணிகர்நூல்கள் குறிப்பிட்டன. அப்போது ஆமை ஒன்று அஸ்தினபுரியின் மாளிகைமாடத்தின் மீது ஏறியது என்றன. மழை பொழியத் தொடங்கி ஒரு மாதமானபோது நாணல்களுக்குள் வாழும் எலிகளைப்போல மனிதர்கள் மழைத்தாரைகளுக்குள் வாழக்கற்றுக்கொண்டனர். தவளைகளைப்போல நீரில் …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=48442

Older posts «

» Newer posts