சாதியும் அடையாளமும்

மதிப்பிற்குரிய எழுத்தாளர் அவர்களுக்கு, வணக்கம்.நான் உங்களுக்கு ஏற்கனவே எழுதியுள்ளேன். சாதி பற்றிய எதிர்வினைகள் முடிந்த பின்னே எழுத வேண்டுமெனக் காத்திருந்தேன்.தங்களின் எழுத்துகளை 80% வாசித்துள்ளேன்.எனவே இதைப்பற்றி உங்களால் மட்டுமே கூற இயலும் என்று எண்ணுகிறேன். நான் சாதிமறுப்பு மணம் புரிந்துகொண்டவள். சிறிய சாதிவேறுபாடுதான். எங்கள் இரு குடும்பங்களுமே திராவிட இயக்கப் பின்னணியிலானவை. பெரும் போராட்டங்களுக்குப் பின் இரு வீட்டினரும் சம்மதித்து திருமணம் செய்து வைத்தனர். ஏறக்குறைய உங்கள் திருமணம் போலவே நான் வீட்டிலிருந்து வெளியேறி வந்தேன்.அதன் பிறகே …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/67401

ஞானக்கூத்தன் கவிதைகள் பற்றி சாம்ராஜ்

விஷ்ணுபுரம் விருது 2014 – ஞானக்கூத்தன் கவிதைகள் பற்றி சாம்ராஜ்

Permanent link to this article: http://www.jeyamohan.in/68401

நிருபர்கள் -கடிதம்

இனிய ஜெயம், ஏன் சில குறிப்புகள் பதிவு வாசித்தேன். எல்லா துறைகளிலும் இருக்கும் பேரிடரே ஊடகத் துறையிலும் நிலவுகிறது. ஜர்னலிசம் படித்து முடித்தவர் மட்டுமே பணியில் அமர வேண்டும் என ஒரு சட்டம் வந்தால், பத்திரிக்கை தொலைக்காட்சி என ஒட்டுமொத்த ஊடகத் துறையிலும் சேர்த்து ஒரு பத்து பேர் தேறுவார்கள் என நினைக்கிறேன். ஊடகங்கள் பெருத்து விட்டன. செய்தி மழை. இந்த மழையை ஊடகங்களுக்குக் கொண்டு சேர்க்கும் நுண்ணுணர்வு கொண்ட ஊடகவியலாளர் அனேகமாக இன்று எவரும் [குறைந்த …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/67135

‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 63

ஓவியம்: ஷண்முகவேல்

பகுதி பதிமூன்று : இனியன் – 5 பீமன் காட்டுக்குள் அவன் வழக்கமாக அமரும் மரத்தின் உச்சிக்கிளையில் அமர்ந்திருந்தான். அவனைச்சூழ்ந்து பின்பொழுதின் வெள்ளிவெயில் இலைத்தழைப்பின் விரிவுக்கு மேல் கால்களை ஊன்றி நின்றிருந்தது. காற்று வீசாததனால் இலைவெளி பச்சைநிறமான பாறைக்கூட்டம் போல அசைவிழந்து திசை முடிவு வரை தெரிந்தது. பறவைகள் அனைத்தும் இலைகளுக்குள் மூழ்கி மறைந்திருக்க வானில் செறிந்திருந்த முகில்கள் மிதக்கும் பளிங்குப்பாறைகள் போல மிக மெல்ல கிழக்கு நோக்கி சென்றுகொண்டிருந்தன. முகில்களை நோக்கியபடி பீமன் உடலை நீட்டி …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/67124

வெள்ளையானை விமர்சனக்கூட்டம்

erippu

வெள்ளையானை நாவலைப்பற்றி எழுத்து பிரசுரமும் ஸ்ரீவில்லிபுத்தூர் அம்பேத்கார் பண்பாட்டுப் பாசறையும் இணைந்து நிகழ்த்தும் விமர்சன அரங்கு 21 -12-2014 அன்று ஸ்ரீவில்லிபுத்தூரில் நிகழவிருக்கிறது இடம் காத்தவராயன் அரங்கம், சாலியர் திருமண மண்டபம், ஸ்ரீவில்லிபுத்தூர் நாள் 21- 12-2014 நேரம் காலை 10 மணி கலந்துகொள்பவர்கள் ஸ்டாலின் ராஜாங்கம் ஜெகன்னாதன் பால்ராஜ் வே.அலெக்ஸ் ஜெயமோகன் வாசகர்களை அழைக்கிறேன் For content 09047920190

Permanent link to this article: http://www.jeyamohan.in/68346

தேவதேவன் – ஞானக்கூத்தனுக்கு வாழ்த்து

  கவிஞர் தேவதேவன் – கவிஞர் ஞானக்கூத்தனுக்கு வாழ்த்து. 2014 ஆம் வருடத்திற்கான விஷ்ணுபுரம் விருது பெறும் கவிஞர் ஞானக்கூத்தனுக்கு கவிஞர் தேவதேவனின் வாழ்த்து. ஞானக்கூத்தனைப்பற்றி கே.பி.வினோத் எடுக்கும் ‘இலைமேல் எழுத்து’ ஆவணப்படத்தில் இருந்து. விஷ்ணுபுரம் விருது விழா டிசம்பர் 28 மாலை 6 மணிக்கு கோவை நானி கலையரங்கில் நிகழகிறது.

Permanent link to this article: http://www.jeyamohan.in/68399

ஞானக்கூத்தன்- காலத்தின் குரல்

gnanakoothan-karutharangu

ஞானக்கூத்தன் பற்றி நரோபா எழுதிய காலத்தின் குரல் என்ற கட்டுரை பதாகை இணைய இதழில் வெளியாகியிருக்கிறது. ஞானக்கூத்தனின் அன்னியமாகி நின்று நோக்கும் பார்வையை அதன் வெளிப்பாடான அங்கதத்தை ஆழமாக ஆராயும் கட்டுரை ஞானக்கூத்தன்- காலத்தின் குரல் ஞானக்கூத்தன் கவிதைகள்

Permanent link to this article: http://www.jeyamohan.in/67362

‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 62

ஓவியம்: ஷண்முகவேல்

பகுதி பதின்மூன்று : இனியன் - 4 பெரிய மூங்கில் குழாய்களாலும் பலவகையான காய்களின் குடுக்கைகளாலும் உருவாக்கப்பட்ட தாளக்கருவிகளில் சிறிய குச்சிகளால் தட்டி தாளமிட்டு நடமிட்டபடி இடும்பர்குலத்துக் குழந்தைகள் குடில்களில் இருந்து கிளம்பினர். அவர்களுக்குப் பின்னால் குடிமூத்த ஆண்கள் நீண்ட கழிகளை கையில் ஏந்திச் செல்ல தொடர்ந்து இடையில் மான் தோல் அணிந்து பச்சை இலைகள் கொண்ட மரக்கிளை ஒன்றை ஏந்திய கடோத்கஜன் மகிழ்ந்து சிரித்து இருபக்கமும் நோக்கியபடி நடந்தான். அவனுக்குப்பின்னால் இடும்பியும் பெண்களும் சென்றனர். அவர்களின் வரிசையில் இணையாமல் …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/67118

பூமணிக்கு சாகித்ய அக்காதமி

நவீனத்தமிழிலக்கியத்தின் முதன்மைப்படைப்பாளிகளில் ஒருவரான பூமணி எழுதிய அஞ்ஞாடி என்ற நாவலுக்கு இவ்வருடத்திற்கான சாகித்திய அக்காதமி அளிக்கப்பட்டிருக்கிறது. எழுபதுகளில் இறுதியில் எழுதத்தொடங்கிய பூமணி தமிழின் இயல்புவாத அழகியலை முன்னெடுத்தவர். அவரது பிறகு என்ற நாவல் அதன் மிதமான இயல்புச்சித்தரிப்பு காரணமாக பெரிதும் விரும்பப்பட்டது. வெக்கை, நைவேத்யம் போன்றவை குறிப்பிடத்தக்க பிற ஆக்கங்கள் கருவேலம்பூக்கள் என்ற திரைப்படத்தை தேசியதிரைப்பட நிறுவனத்திற்காக எடுத்திருக்கிறார். 2011 ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது வழங்கப்பட்டது.. பூமணியைப்பற்றி ஜெயமோகன் எழுதிய ‘பூக்கும் கருவேலம்’என்ற நூல் வெளியிடப்பட்டது …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/68418

அயோத்திதாசர் கருத்தரங்கம்

ayothidhasar

19-12-2014 காலையில் சென்னை Madras Institute of Developmental Studies Chennai யில் பண்டித அயோத்திதாசரின் இன்றைய கருத்தியல் முக்கியத்துவம் குறித்த தேசியக் கருத்தரங்கில் பேசுகிறேன். 19,20 இரண்டுநாட்களும் இக்கருத்தரங்கு நிகழ்கிறது ‘அயோத்திதாசரின் மாற்றுப்புராண அழகியல்’ என்ற தலைப்பில் பேசுகிறேன் MIDS Second Main Road Gandhi Nagar Adayar Chennai 20

Permanent link to this article: http://www.jeyamohan.in/68342

Older posts «