நலம்தானே?. போன வாரம் வாங்கிய சிங்காரத்தின் “புயலிலே ஒரு தோணி” புத்தகத்தை நேற்று இரவுதான் படித்து முடித்தேன். நீங்கள் கூறியிருப்பது போல, கவிதை தன்மை கொண்ட வரிகள் நிறைய உள்ளன. ஒரு சில இடங்களில் நான் இரண்டு மூன்று முறை திரும்ப திரும்ப படித்தேன்.
![]()
இனி, கடலுக்கு அப்பால் படிக்க வேண்டும்.
அன்புடன்
இளங்கோ
அன்புள்ள இளங்கோ
ப.சிங்காரத்தின் நாவலில் சுயசரிதை இல்லை. சுய அனுபவங்கள் சில உள்ளன. குறிப்பாக சிங்கப்பூர் மீது நிப்பன் படைகள் புகும் காட்சி. வெட்டி வைக்கப்பட்ட தலைகளுக்கு முடிசீவி விடும் ஜப்பானிய சிப்பாய்.
நேதாஜி உண்மையான கதாபாத்திரம். தேசிய ராணுவத்தின் ஊழல்களும் காமப்பிறழ்வுகளும் எல்லாம் சிங்காரம் அறிந்த உண்மைகள். நாமறிந்த வரலாற்றை அந்தக்கதைகள் ஊடுருவிச்செல்கின்றன இல்லையா
சிங்காரத்தின் நாவலின் சிறப்பே அங்கதம்தான். சங்க இலக்கிய, சிலப்பதிகார வரிகளை பகடிக்காக அவர் ஒடித்து வளைத்திருக்கும் விதம். கோவலை வியாபாரத்துக்கு வந்த செட்டியாராக பினாங்கு தெருவில் போதையில் சந்திக்கும் பாண்டியனின் நிலை.
கடலுக்கு அப்பால் நேரடியான உணர்ச்சிமிக்க ஒரு காதல்கதை. சினிமாவாகக்கூட எவராவது எடுக்கலாம். ‘எந்தக்கழுதையும் கண்ணகியாகலாம், காலை இறுக்கி மூடிக்கொண்டிருந்தால்போதும்’ போன்ற வசனங்களை சென்சார் அனுமதித்தால்
ஜெ
கட்டுரையை மின்னஞ்சல் செய்ய(Email This Post)
You must be logged in to post a comment.


6 Responses to “ப.சிங்காரம்,ஒருகடிதம்”
சார், அந்த நூல் எங்க வாங்கலாம் ம கிரிராஜ்
By deepswa@in.com on Jan 11, 2010
தமிழினி வெளியீடு
67, பீட்டர்ஸ் சாலை
ராயப்பேட்டை
சென்னை 14
9884225576
By ஜெயமோகன் on Jan 11, 2010
சார்,
தகவலுக்கு மிக்க நன்றி. ஆன்லைன் இல் வாங்க முடியுமா?
ம. கிரிராஜ்
By deepswa@in.com on Jan 11, 2010
http://www.udumalai.com contact
By ஜெயமோகன் on Jan 11, 2010
புயலிலே ஒரு தோனிக்கான இணைப்பு
http://www.udumalai.com/?prd=%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87%20%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%20%E0%AE%A4%E0%AF%87%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF&page=products&id=3861
By chidambaram on Jan 11, 2010
// சினிமாவாகக்கூட எவராவது எடுக்கலாம்
சார்,
கதையை படித்து முடித்ததும் இதையே நானும் உணர்ந்தேன்…
அனால் இதற்கு திரைக்கதை எழுதுவதுதான் கொஞ்சம் கஷ்டம் என்று நினைக்கிறேன்…
நன்றி
By saran on Jan 12, 2010