புகோகா மீண்டும் இரு கடிதங்கள்

சக்கரவர்த்தி திருமகளின் (பட்டாம்பூச்சியின்) ஜன்மாந்திரப் பயணம்..

உங்களின் கீழை ஞாநி கட்டுரை சிறப்பாக இருந்தது.

மொனர்ச் பட்டர்-ப்லைஐ (monarch butterfly) சக்கரவர்த்தி திருமகள் என மொழி பெயரித்து உள்ளேன். அது தற்போது ‘அழிந்து கொண்டிருக்கும்’ (endangered spieces) ஆக பெயரிடப் பட்டுள்ளது. இதற்கான பின்னணி..

அமெரிக்காவில் சோளம் வெகுவாக பயிரடப் படுகிறது. அதை ஒரு கச்சாப் பொருளாக உபயோகிக்கின்றனர். உணவு வகை கூட்டாகவும், கொழுப்பு சத்துள்ள பாலிற்கு மாற்றாகவும், கோழி மற்றும் மாட்டுத் தீவனமாகவும் உபயோகப் படுகிறது. (தவிர, ஜீவ-அணுப் பொறி-இயல் (bio-engineering) மூலம் அதிபுரத சத்து சோ-ளங்கள் பண்ணை தீவனத்திற்காக பயிரடப் படுகிறது. இதனால் ஏற்படுகிற சுழல் குழப்பங்களையும்,  கொழுப்பு மிகுந்து உற்பத்தி ஆகும் இறைச்சியும், உடல் நலம் கேள்விக்குறியாகும் பண்ணை உயிரனங்களையும், பிறகு காணலாம்)

சூழலில் (environment) ஒருங்கிணைந்த பார்வை அவசியம்.  இதனால் பூச்சி கொல்லி மருந்தின் மிக அதிக உபயோகம், பின்வரும் தலை முறைகளின் உடல் நலம் பாதிக்கும் என்பதால், ஜீவ அணுப் பொறி-இயல் மூலம் சோளத்தின் இயல்பை மாற்றுகின்றனர். இந்த புதிய சோளம், பூச்சிகளை எதிர்க்கும் தன்மை வாய்ந்தது. இதன் பூக்களின் மகரந்தத்தின் மூலக்கூறுகள் சற்று பெரியதானவை.  இவை பூச்சிகளினால் ஜீரணிக்க முடியாது. இதனால், இம்முயற்சி, புரட்சியாக கருதப் பட்டது.

ஆனால், சக்கரவர்த்தி பட்டாம்பூச்சிகள் இதனால் பெரும் அவஸ்தைக்கு உள்ளாயின. இந்தப் பட்டாம்பூச்சிகள், கனடாவிலிருந்து புறப்பட்டு, மெக்சிகோவிற்கு வந்து, பின் மீண்டும் கனடா செல்லும். சாதரணமாக இதன் வாழ்க்கை அளவு ஐந்து வாரமே. இந்த நீண்ட பயணத்தில், ஐந்து மாதம் வரை உயிர் வாழும். இந்த காரணத்தினால், இந்த குடி பெயர்தல் (migration) பேரதிசயமாக கருத படுகிறது.  இந்த பிரயாணத்தை முடிக்க ( 2800 மைல்கள்) மூன்றில்-இருந்து நான்கு தலை முறைகள் தேவை. ஒரு நாளுக்கு 50 மைல்கள் பிரயாணம் செய்யும் இப்பூச்சிகளின் வாழ்க்கை, நமது வாழ்க்கையின் முயற்சிகளுக்கு ஊற்றாக இருக்கும்.

ஜீவ அணுப் பொறி-இயலின் தாக்கம், சக்கரவர்த்தி திருமகளை, அழியும் உயிரனங்களின் எல்லைக்கு அனுப்பி விட்டது. இப்பட்டாம்பூச்சிகள், சோளத்தின் மகரந்தங்களை உணவாக கொள்ளும். புதிய சோளத்தின் மகரந்தங்களின் மூலக்கூறுகள் பெரியதனவை. இதை உட்கொண்ட பட்டாம்பூச்சிகள் இறந்து விடுகின்றன.

2004 இல் சிகாகோவில் இதை கவனித்த சூழல் பொறியாளர்கள் அதிர்ச்சியடைந்து, மொன்செண்டோ (monsento) கார்ப்பரேஷன் – இடம் தெரிவித்தார்கள், முதலில் மறுத்து, பின்பு மெதுவாக இந்த விளைவை ஒத்து கொண்டிருக்கிறார்கள்.

ஜீவ அணுப் பொறி-இயல் பல்வேறு காரணிகளை கொண்டுள்ளதால், சமூகத்தின் பொறுப்பு மிக அதிகமானது. அரசியலும், வணிகமும் முதிர்ந்த பின்தான் இத்தகைய முயற்சிகள் மக்களுக்கு நன்மை பயக்கும்.

நம்மில் பலர் இந்த விஷயங்களை படித்து தெரிந்து கொண்டு, நமது குரல்களை எழுப்ப வேண்டும் (voicing our opinion) என்கிற பாணியில்.

அரசியல், வணிகம் சார்ந்த விஷயம் என்று ஒதுங்காமல், எல்லோரையும் பாதிக்க கூடிய விஷயங்களில், நம் பங்கை, நாம் செய்வது நல்லதே.

அன்புடன்
முரளி

***

அன்புள்ள ஜெயமோகன்

புகோகா இறப்பு வருத்தம் தந்தது. ஒரு இயக்கம். தனிமனித இயக்கம் அவர். நான் உங்கல் இணையதளத்தில்தான் அவரது இறப்பை வாசிக்கிரேன். தினமணிகூட ஒரு செய்தி போடவில்லை. என்ன இதழ்கள்!

நான் விவசாயி இல்லை என்றாலும் எனக்கு  ஒற்றைவைக்கோல் புரட்சி ஒரு நல்ல வழிகாட்டி நூலாகவே இருந்துள்ளது. வாழ்க்கை என்பது ஒரு சிறிய புல் போல இயற்கையில் இணைந்து இருப்பது மட்டுமே என்று அந்த நூல் எனக்குச் சொல்லிக் கொன்டிருந்தது. நானே அந்த நூலை மொழியாக்கம் செய்தேன். பிறகுதான் அது தமிழில் வெளிவந்துள்ள விஷயமே தெரிந்தது

சிவராம்
சென்னை

முந்தைய கட்டுரைஃபுகோகா :இருகடிதங்கள்
அடுத்த கட்டுரைதமிழ்ப்பெண்ணியம் – சுருக்கமான வரலாறு