கல்பற்றாவைப்பற்றி ஒரு கட்டுரை

நீண்ட நாட்களுக்கு பிறகு மனதிற்கு மிகவும் நெருக்கமாக உணர்ந்த படைப்பிது.நாவலின் மனிதர்கள் நமக்கு பரிட்சயமான நபர்களை ஒத்திருந்தால் வரும் மனநிறைவு.நான் அறிந்து வைத்திருக்கும் எத்தனையோ பெண்களின் வாசம் சுமித்ராவிடம்.வயநாட்டின் ஈரத்தை தன்னிடத்தே கொண்ட பெண்ணவள்.

யாழிசை ஓர் இலக்கியப்பயணம் கல்பற்றா நாராயணனைப்பற்றி தேடிக்கொண்டிருக்கும்போது இந்த இணையதளத்தை கண்டேன். லேகா என்பவர் அவருக்குப்பிடித்தமான நூல்களைப்பற்றி எழுதியிருக்கிறார். பெரும்பாலும் நேரடியான வாசக அனுபவக்குறிப்புகள். கி.ராஜநாராயணன், வண்ணதாசன், பெருமாள்முருகன்,எஸ்.ராமகிருஷ்ணன் போன்றவர்களின் நூல்களைப்பற்றி எழுதியிருக்கிறார். வாசிப்பை விவாதிக்கவிழைபவர்கள் வாசிக்கலாம்.

கல்பற்றாவை பற்றிய குறிப்பில் பொதுவான வாசிப்பனுபவத்துக்கு அப்பால் செல்லும் ஓர் அந்தரங்க ஈடுபாடு தெரிகிறது.

கல்பற்றா நாராயணன் கவிதைகள் 1

கல்பற்றாநாராயணன் கவிதைகள் 2 ல்பற்றா நாராயணன் கவிதைகள்

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 66
அடுத்த கட்டுரைசிறிய இலக்கியம் பெரிய இலக்கியம்