கென் வில்பர்:இருகடிதங்கள்

திரு ஜெயமோகன்
தங்களது சித்தர்கள் பற்றிய கட்டுரையும் [மந்திர மாம்பழம்] கென் வில்‌பர் பற்றிய கட்டுரையும் [முழுமையறிவும் கென் வில்பரும் ]சிந்திக்க உதவியாக இருந்தது
தங்களுடன் பகிர்ந்து கொள்ள சில சிந்தநைகள் (தாங்கள் இந்த விஷயங்களை ஏற்கநவே அறிந்த்திருக்கலாம்)
சித்தர்கள் பற்றி: ரூமி என்கிற ஸூஃபி கவிஞர் மொழிபெயர்ப்புகளை படித்திருக்கிறேன். மொழிசார்ந்த கட்டமைப்புகளை தாண்டி உணர்வு பூர்வமாக மனத்தை தொட வல்லவை இந்த கவிதைகள். இவையுடன் சித்தர் பாடல்களையும் சிந்தித்தது உண்டு. இவை இரண்டிற்கும் உள்ள ஒற்றுமை கட்டுப்பாடுகளைத் தாண்டுவதே. இந்த அணுகுமுறையில் உள்ள சிக்கல் – மிகவும் நீண்ட கால பரிமாணத்தில் கட்டுப்பாடுகளை மீறுவதே ஒரு அமைப்பு ஆகிவிடும்.

இதே போன்று, – சீன நாட்டு சிந்தனையாளர் லா ட்சுவின் – டௌ டே ஜிங் – என்ற நூல் – மிக ஆச்சரியமான பிரபஞ்ச சிந்தனைகள் நிரம்பியது. பழைய கால நூல்கள் முதல் வாசிப்பிலேயே தன்னை வெளிப்படுத்துவது இல்லை. படித்து உள்வாங்கி பின் தன்னுள் அடக்க சற்று நேரம் தேவை.

தங்களது கணிப்பு காரியானதுதான்; இந்த இலக்கியங்களை அறிய ஒரு (மாடல்) இல்லை. இதனால் தானோ – இவ்விலக்கியங்களை – மிஸ்டிக்ஸ் – என அழைக்கிறார்கள்.

இனி கென் வீல்புர் பற்றி: பர்ட்ராந்ட் ரஸல் எல்லாவற்றையும் தன்னடகிய ஒருங்கிணைப்பு தேற்றத்தை உருவாக்க யத்தநித்தார். (தங்கள் கட்டுரையில் குறிப்பிட்டது இதைத்தான் என எண்ணுகிறேன்). கர்ட் கோடெல் என்கிற கணித மேதை மற்றும் சிந்தனையாளர் – இது சாத்தியமில்லை என நிரூபித்து விட்டார். கோடெல்-இன் மிக முக்கிய கண்டு-பிடிப்புகளில் ஒன்று – தெரிந்து கொள்ளும் முறைகளில் எவ்வளவு தெரிந்து கொள்ள முடியும் என்கிற வரையறை.
முதலில் – ஆக்ஸீயம்ஸ் – ஆரம்பித்து தேற்ற-ங்-களை வரையறுக்கலாம். இந்த முறையில், சில கூறுகளை – நிரூபணமோ அல்லது எதிர் நிரூபணமோ செய்யவே முடியாது. இந்த பேருண்மை செவ்வறிவியலில் பெருந்துளையிட்டது. இந்நிலையில், வேண்டிய உண்மைகளை நிரூபிக்க புதிய ஆக்ஸீயம்ஸ்-கள் தேவை. அறிவியலில் ஆழ்ந்த அறிவு இருந்தால் – புதிய ஆக்ஸீயம்ஸ்களை உருவாக்கி புதிய உண்மைகளாக விஸ்தரிக்கலாம்

இந்த நிகழ்வினால்  புத்தம் புதிய முதிரா அறிவியல்கள் உருவாயின. ஆக்ஸீயம்ஸ்-களை கூட்டு-வதால் வேறு ஒரு சிக்கலுண்டு. இப்போது, நிரூபணம் அல்லது எதிர் நிரூபணம் செய்யமுடியாதவைகளின் வளி (ஸ்பேஸ்) கூடி விடும். இதை புரிந்து கொள்ள (functional mathematics) அளவில் ஒரு சொற்றொடர் உண்டு – அறிந்து கொள்ளக்கூடிய உண்மைகள் – எண்ணில்-அடங்கும் அனந்தம் – அனைத்ததுமான உண்மைகள் – எண்ணில்-அடங்கா அனந்தம் – பவர் செட் ஆஃப் எண்ணில்-அடங்கும் அனந்தம்

இந்த முறையில், ‘எண்ட் ஆஃப் ஸைந்ஸ்’ என்கிற புத்தக்தை ஜாந் ஹொர்கந் எழுதி-உள்ளார் – இதில் முதிரா அறிவியல்களின் பரப்பை நன்றாக கவர்ந்துள்ளார். (எச்சரிக்கை: சில அறிவியலாளர்களை – ஸ்டீவந் ஹாகிந்ஸ் போன்றோர்-களை – சற்று மரியாதை குறைவுடன் விமரிசித்துள்ளது)

தங்களது இரண்டு தொடர்களும் – மிக சுவாரசியமாக உள்ளது

தொட-ர்பில்லா குறிப்பு – தங்களது இணைய எழுத்துக்கள் – மிக கடின உழைப்பளரையும், பன்முக நோக்குள்ளவரையும், மற்றும் அழகுணார்ச்சியுள்ளவரையும் தெரியப்படுத்துக்கிறது

தங்களது முயற்சிக்கு வாழ்த்துக்கள்

அன்புடன் – முரளி
Technology Consultant,Covansys (India) Private Limited,
Unit 13, Block 2, SDF Buildings,
Madras Export Processing Zone,
Chennai 600 045, India
**

அன்புள்ள முரளி
உங்கள் கடிதம் கண்டேன். நான் இந்த மேலைநாட்டுச் சிந்தனைகளைப் பார்க்கும் போது எனக்குப்படும் முக்கியமான விஷயம் ஒன்றுண்டு. இவர்கள் இந்திய,சீன சிந்தனைகளை மிக இலகுவாக எடுத்துக் கொள்கிறார்கள். அதை உள்ளடக்கிக் கொள்ள முயல்வதேயில்லை. அவர்களின் சுயம் என்பது எப்போதுமே ஐரோப்பிய அடையாளம்தான். உலகப்புகழ்பெற்ற தத்துவ நூல்களில்கூட இந்திய ,சீன சிந்தனைகளுக்கு அளிக்கப்பட்டுள்ள குறைவான பக்கங்கள் மிக வியப்பூட்டுவது. முதலில் ஒருங்கிணைந்த சிந்தனை இங்கிருந்துந்தொடங்கப்படவேண்டும்.

நீங்கள் உங்கள் கடிதத்தை ஏன் தமிழில் எழுதக்கூடாது? அதை நான் வெளியிடமுடியும். வாசகர்களுக்கு உதவும். இவ்விஷயங்களை எழுதுவது சிரமம்தான்.ஆனால் முயன்றால் நாம் சொல்லாட்சிகளையும் சொற்றொடர்களையும் உருவாக்கிக் கொள்ள முடியும் அல்லவா?

ஜெயமோகன்
**

அன்புள்ள ஜெயமோகன்
கென் வில்பர் பற்றிய கட்டுரை படித்தேன். ஒருங்கிணைந்த அறிதலுக்கான முயற்சிகளுக்கு இந்த நூற்றாண்டளவுக்கே வரலாறு உண்டு. இவற்றில் இதுவரை நிகழ்ந்துள்ள முயற்சிகளின் முக்கியமான பலவீனம் என்னவென்றால் இவற்றில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு அவர்களின் தளங்களைச் சார்ந்தே சிந்திக்க முடிகிறது என்பதே. அதாவது துறசார்ந்த தன்னிலை ஒன்று அவர்களுக்கு இருக்கிறது. அவர்களால் அதைத்தாண்டி வரவே முடிவதில்லை. கணிதமேதை ஒருவர் எத்தனை மாமேதையாக இருந்தாலும் அவரால் கணிதத்தில் இருந்து வெளிவர முடிவதில்லை.

இரண்டாவதாக மிகவிரிவான அளவில் பார்த்தால்எல்லா சிந்தனையாளர்களும் ஒரு காலகட்டத்தின் ஆக்கங்களே. இதை நான் என் வகுப்புகளில் இவ்வாறு சொல்வதுண்டு. கடலுக்குள் நின்றுகொண்டு நாம் பல மரக்கலங்களைப் பார்த்தோமென்றால் ஒவ்வொன்றும் ஒவ்விரு வகையில் ஆடுவதைக் காணலாம். ஆனால் அவை அனைத்தையுமே தன்மீது தூக்கி வைத்து ஆட்டும் கடல் ஒன்று அடியில் உள்ளது. சமகாலச் சிந்தனையாளர்களைப் பற்றி யோசிக்கும்போது நாம் இந்த அம்சத்தைக் காணமுடியாது. சமகாலச் சிந்தனையாளர்களை பற்றிப் பேசும்போது நாம் அவர்களிடம் உள்ள முரண்பாடுகளுக்கெ அழுத்தம் அளிக்கிறோம். அதற்கான காரணம் அவர்கள் தங்கள் முரண்பாடுகள் மூலம் மாறி மாறி நிரப்பும் இடங்களைப் பற்றிய நமது ஆர்வம் ஒன்று. இன்னொன்று விவாதங்களின் முரணியக்கம் மூலம் உருவாகி வரக்கூடிய புதிய இடத்தை பற்றிய கவனம்

ஆனால் சென்ற நூற்றாண்டுச் சிந்தனையாளர்களைப் பார்க்கும்போது அவர்களின் பொது அம்சமே நம் கண்களை கவர்கிறது. உதாரணமாக பத்தொன்பதாம் நூற்றாண்டுச் சிந்தனைகள் அனைத்திலுமே வரலாற்றின் நோக்கம் மற்றும் முழுமையான மனிதன் பற்றிய ஒரு தேடல் பொதுவாக இருப்பதைக் காண்கிறோம். இது அவர்கள் உருவாக்கி வரலாற்றுக்கு அளித்த அம்சமா இல்லை வரலாறு அவர்கள் அனைவரிலும் உருவாக்கிய விளைவா என்பது பெரும் வினா. இரண்டாவதே என் பதில். மனித சிந்தனை என்பது எத்தனை பெரிதாக இருந்தாலும் வரலாற்றின் மகத்தான அலைகளுக்கு மேல் தெறிக்கும் திவலை போன்றதே அது.
ஆகவே வரலாற்றின் தருணங்களில் உருவாகிவரும் சிந்தனைகளை தனியாகப் பிரித்தெடுத்து பொதுமைப்படுத்துவதும் சரி பொது அளவுகோல்களுக்குச் செல்வதும் சரி உªக்கிரமான மூளைப்பயிற்சிகள் மட்டுமெ. முற்றிலும் வீண் முயற்சிகளும்கூட. சிந்தனைகளை தொகுக்கவும் மதிப்பிடவும் வரலாற்றை அனுமதிப்பதே நாம் செய்யக்கூடுவது. வேறு வழியே இல்லை. கருத்துக்கள், கோட்பாடுகள், சிந்தனைகள் அனைத்துமே தங்களுக்குள் முரண்பட்டு மோதி வரலாற்றை நம் கண்முன் நிகழ்த்துகின்றன. தங்கள் பணிமுடிந்ததும் வரலாற்றில் சென்று அமைகின்றன. இப்போது இருத்தலியத்தின் மதிப்பை நாம் அதன் வரலாற்றுப் பங்களிப்பை வைத்து எளிதாக உணர முடியும். அதற்கும் அக்கால தொழில் நுட்பத்திற்கும் அறிவியல் கோட்பாடுகளுக்கும் அக்காலத்து வானவியல் கண்டுபிடிப்புகளுக்கும் இடையேயான உறவுகளை வகுக்க முடியும்.
அதாவது வரலாறு மட்டுமே ஒரே unifying factor.

ஞானசேகர் அற்புதம்
*

அன்புள்ள ஜெயமோகன்
கென் வில்பர் பற்றிய உங்கள் கட்டுரைக்குறிப்பு ஆர்வத்தை தூண்டியது. உங்கள் குறிப்பில் விடுபட்டுப்போன, விடுபடவேகூடா, முக்கியமான பெயர் ஏ.என்.வைட்ஹெட். [Alfred North Whitehead]. சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் மனித அறிதல்களை ஒருங்கிணைக்கும் ஒரு முறைமைக்கான தேடலை தொடங்கியவர்களில் அவர் முக்கியமானவர். தத்துவார்த்தமாக பார்த்தால் இந்த தேடல் எப்போதும் விழுமியங்கள் சார்ந்தே நிக முடியும். மனிதனின் எல்லா அறிதல்களும் மனித வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ளவும் முழுமைப்படுத்தவுமே முயல்கின்றன, முயல வேண்டும். ஆகவே எல்லா அறிதல்முறைகளும் தங்களுக்குரிய விமுமியங்களையே உருவாக்குகின்றன. அத்தனை அறிவுத்துறைகளையும் ஒரே புள்ளியில் குவிப்பதென்றால் அது விழுமியங்களாக தொகுப்பதன் மூலமே சாத்தியமாகும்
ரா. ராகவன்
[கடிதங்கள் தமிழாக்கம் செய்யபப்ட்டவை]

முழுமையறிவும் கென் வில்பரும்
மந்திர மாம்பழம்

முந்தைய கட்டுரைபள்ளிகொண்டபுரம்:நீலபத்மநாபன் கடிதம்
அடுத்த கட்டுரைதவசதாரம்