உரைகள்

வணக்கம் ஜெயமோகன்,

நேற்றிரவு கேட்ட உங்களது “வல்லினம்” உரையின் பாதிப்பில் இன்று ஒரு பெரிய மடல் எழுத ஆரம்பித்து அது பாதியிலேயே நிற்கிறது. :) மிக மிக நல்ல உரை அது. அந்தப் பேச்சினை ஒட்டி மீண்டும் ஒரு முறை விஷ்ணுபுரம் படிக்க வேண்டும். சில மாதங்களாகப் பெரிய நாவல்களைப் படிக்க முடியாத அளவிற்கு மனம் சலசலப்புடன் இருக்கின்றது.. மனதைக் கொஞ்சம் அமைதியாக்கவாவது பெரிய நாவல் ஒன்றை கையில் எடுக்க வேண்டும்.

American Public Works தொகுத்த “a century of great african american speeches” என்ற ஒலிக்கோப்பை நீண்ட நாட்களுக்கு முன் கேட்டிருந்தேன். 1895ல் புக்கர் வாஷிங்டன் உரையில் துவங்கி 2009ஆம் ஆண்டு ஒபாமாவின் பதிவியேற்புரை வரையிலான ஒரு நூற்றாண்டின் சிறந்த ஆப்பிரிக்க அமெரிக்க பேச்சுகள். இன்று நண்பர் பகிர்ந்திருந்த மார்டின் லூத்தர் கிங் உரையை பார்த்தவுடன், இது நினைவிற்கு வந்தது. அப்படியே உங்களது வல்லின உரையும். அந்தத் தொகுப்பின் அனைத்து உரைகளும் (ஒலிக் கோப்புகளுடன்) இந்தத் தளத்தினில் உள்ளன.

http://origin-americanradioworks.publicradio.org/features/blackspeech/

சித்தார்த்.

முந்தைய கட்டுரைபாண்டிச்சேரியில்…
அடுத்த கட்டுரைஆய்வும் மேற்கும்