மார்த்தாண்டம் கல்லூரி விழா- படங்கள்

சென்ற மார்ச் ஐந்தாம் தேதி நான் மார்த்தாண்டம் கிறித்துவக்கல்லூரி ஆங்கிலத்துறையில் இலக்கியவிழாவில் கலந்துகொண்டேன். நான் படித்த முதல் கல்லூரி அது. முதல்முறையாக பாண்ட் போட்டுக்கொண்டு அந்த வளாகத்தில் நுழைந்த நினைவுடன் பேசினேன். தமிழின் முக்கியமான எழுத்தாளரான நண்பர் குமாரசெல்வா அங்கேதான் தமிழ்த்துறையில் பணியாற்றுகிறார்.

உற்சாகமான நிகழ்ச்சியாக இருந்தது. என்னை ஆங்கிலத்துறை பேராசிரியர் ஜெயசேகர் அவர்கள் அறிமுகம் செய்தார்.விழா புகைப்படங்களை அங்கே பேராசிரியராகப் பணியாற்றும் சுகிதர் போஸ் அனுப்பித் தந்தார். பார்வதிபுரத்தில் வசிக்கும் ஆங்கிலப்பேராசிரியை ஆன்னி நித்யாதான் என் சொற்பொழிவை ஏற்பாடு செய்திருந்தார்

விழாவில் ஒருமணி நேரம் கேள்விகளுக்குப்பதில் அளித்தேன். சலிக்காமல் இலக்கியம் சார்ந்த வினாக்களைத் தொடுத்த ஜெருஷலிட் என்ற ஆங்கில இலக்கிய மாணவியைத்தான் விழாநாயகி என்று சொல்லவேண்டும். எல்லாக் கேள்விகளுமே நுட்பமானவை, பொருள் கொண்டவை. அபூர்வமாகவே கல்லூரிகளில் அத்தகைய உண்மையான படைப்புத்திறமைகளைக் காணமுடிகிறது

ஜெ

[இறைவணக்கம். காஸ்பல் இசையுடன்]

ஜெருஷ்லிட்டுடன்

[கூட்டுப்புகைபப்டம்]

[குமாரசெல்வா]

[வினா நேரம்]

[பதில்]

அரங்கு

[உரை]

முந்தைய கட்டுரைபிம்பங்களை ஏன் உடைக்கவேண்டும்?
அடுத்த கட்டுரைதிருமுகப்பில்-கடிதம்