கடிதங்கள்

ஜெ ,

ராஜா புகைபடத்தில் கையெழுத்திடும் அந்த மூன்று படங்கள் பொக்கிஷம் .

ராஜா சார் இது போன்று சட்டை பித்தான் திறந்து போட்டோவுக்கு காட்சி கொடுப்பது இல்லை.
இது மிகவும் யதார்த்தமாய் உள்ளது .

Jegan .

பெருமதிப்பிற்குரிய ஜெயமோகன்,

குழந்தைகளுக்கான நூல்கள் குறித்து அசோக்குமார் கடிதம் கண்டேன். சென்ற வருடம் சென்னை புத்தக கண்காட்சியில் ‘துலிகா புக்ஸ்’ ஸ்டாலில் தரமான அட்டை காகிதத்தில் , பளபள வண்ணங்களில் அச்சிடப்பட்ட தமிழ் ‘பட புத்தகங்கள்’ (picture books) நிறைய இருந்தன. 150 ரூபாய் ஒரு புத்தகம் என்றதும் செல்போனில் பேசுவது போல் பாவ்லா செய்து நழுவியது நினைவுக்கு வந்தது. அப்படி மிச்சம் பிடித்த பணத்தில் வயிற்ருக்கும் கொஞ்சம் KFC சிக்கன் ஈய்ந்து கொண்டோம்!

அசோக் சென்னையில் இருந்தால் இந்த வருட புத்தக கண்காட்சியில் அவர்களை தேடலாம் அல்லது துளிகா வெப்சைட்டில் (http://www.tulikabooks.com) இருந்து வரவழைக்கலாம். வலைக்கடையை விட கண்காட்சியில் அதிக புத்தகங்கள் பார்த்த ஞாபகம். மேட்டுக்குடி கடையாக முதல் பார்வையில் தோன்றும் துலிகா, கானாஉலகநாதனின் குத்து பாட்டை வைத்து குழந்தைகளுக்கான பட புத்தகம் வெளியிட்டிருக்கிறது!

http://www.tulikabooks.com/catalog_img/book_page/122_cover.png

பணிவன்புடன்,

லட்சுமணன்

முந்தைய கட்டுரைபத்மவியூகம் – சிறுகதை
அடுத்த கட்டுரைநூல்கள் கடிதங்கள்