தேர்தல்முறை, ஒரு கடிதம்

வணக்கம் ஜெயமோகன் .
நான் இன்னும்,  உங்களுடைய நூல்கள் எதையும் வசிக்க ஆரம்பிக்கவில்லை . சமிபகாலமாக உங்கள் கட்டுரைகளை இந்த வலைமனையில் தொடர்ந்து வருகிறேன். உமைச்  செந்நாயை ரசித்தேன் .

நமது தேர்தல் முறையை பற்றிய எனது எண்ணங்களை கூறி, உங்களது கருத்துகளையும்  அறிய விரும்புகிறேன்.

நமது தேர்தல் முறை பெரும்பாண்மை மக்களின் விருப்பத்தை மட்டுமே பிரதிபலிப்பதாக உள்ளது. மக்களின் வெறுப்பு பதிவு செய்யப்படுவது இல்லை. ஒரு சிறு உதாரணத்துடன் விளக்குகிறேன். 1000 வாக்களர்களை கொண்ட ஒரு தொகுதியில்  “அ” , “ஆ “, “இ “, “ஈ” என்று 4 கட்சிகள் தேர்தலில் போட்டியிடுவதாக கொள்வோம்.  இவற்றில் “அ” , “ஆ “, “இ ” கட்சிகளுக்கு  முறையே  400,350,150  ஓட்டுகளும் மீதமுள்ள 100 பேர்  “அ”  கட்சி வர விருப்பமில்லாததால் “ஈ” க்கும் வாக்களிக்கிறார்கள்.
 இங்கு 100 பேரின் வெறுப்பு பதிவு செய்யப்படுமேயானால் ,  “அ” கட்சிக்கு உண்மையான ஆதரவு   300 வாக்குகளே . வெற்றிபெறுவது  “ஆ ” கட்சியே !!.  மக்களின் வெறுப்பை பதிவு செய்ய , ஒவ்வொரு வாக்களரிடமும் “விருப்பு” , “வெறுப்பு” என்று இரண்டு நிலைகளை பதிவு செய்யவேண்டும். “வெறுப்பு” நிலையை optianal ஆகப்பதிவு செய்தால் இன்னும் சிறப்பு . வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஒவ்வொரு வேட்பாளருக்கு எதிராக “விருப்பு” , “வெறுப்பு” என்று இரண்டு பொத்தான்களை வைத்து இதை அமல் படுத்தலாம் .

தேர்தல் பற்றிய உங்களுடைய நிலைபாடு என்ன ? என்னுடைய கருத்தில் உங்களுக்கு சம்மதமா ?

– இது எனது முதல் கடிதம் , பிழைகள் இருந்தால் பொருத்துக் கொள்ளவும் .

– அன்புடன்
தமிழரசன் .

 

அன்புள்ள தமிழரசன்

உங்கள் கடிதம்.

நீங்கள் இவ்விஷயத்தைப்பற்றி சிந்தனைசெய்திருக்கிறீர்கள். ஏறத்தாழ ஞாநி அவர்களும் இதையே சொல்லிவருகிறார் என நினைக்கிறேன். எனக்கும் இது உடன்பாடான கருத்தாகவே படுகிறது. ஆனால் இதுவிஷயமாக நான் விரிவாக வாசிக்கவோ படிக்கவோ இல்லை. உங்கள் தரப்பைப் பார்க்கையில் சரி என்ற எண்ணமே ஏற்படுகிறது

ஜெ

முந்தைய கட்டுரைமு. இளங்கோவன்
அடுத்த கட்டுரைசமரச சினிமா