நாஞ்சில் சிலிக்கானில்

தமிழில் பெரும்பாலான இணையதளங்கள் தேங்கி நின்றுவிட்டன. வலைப்பதிவர்களில் ஒருசிலரே ஊக்கமுடன் எழுதுகிறார்கள். தொடர்ச்சியாக வெளிவருபவை பெரும்பாலும் வெட்டிஆசாமிகளின் சினிமா- அரசியல் மொக்கைகள். ஊடாக அவ்வப்போது பீரிட்டுக் கிளம்பும் வசையர்களின் தளங்கள். உண்மையில் இணையத்தில் வாசிப்பவர்களுக்கு உருப்படியாக வாசிக்க எதுவுமே இல்லையே என்ற எண்ணம் எழும்

பிடிவாதமாக வந்துகொண்டிருக்கும் தரமான இணையதளங்களில் முக்கியமானது சிலிகான் ஷெல்ஃப். நான் தொடர்ச்சியாக வாசிக்கும் தளம் அது. நண்பர் ஆர்வி விடாமல் பதிவேற்றம் செய்துவருகிறார். முழுக்கமுழுக்க நூல்களைப்பற்றிய தளம். அவரது நண்பர்களான பக்ஸ் [பகவதிப்பெருமாள்] அருணா , மயிலேறி என்னும் விசு போன்றவர்களும் எழுதுகிறார்கள்

ஆர்வி
விசு
பக்ஸ்

ஆர்வி வாசித்துக் கடுப்பேறுவதற்காக மட்டுமே நூல்களைத் தேர்வுசெய்து வாசிக்கிறார் என்று அவதூறு அவரது நண்பர்களால் முன்வைக்கப்பட்டாலும் இந்த தளத்தில் உள்ள பலவகைப்பட்ட நூல்கள் பற்றிய சுருக்கமான விமர்சனக்குறிப்புகள் உற்சாகமானவை

ஆர்வி அமெரிக்காவில் ஃப்ரீமாண்டில் இருக்கிறார். அங்கே சமீபத்தில் நாஞ்சில்நாடன் சென்றிருந்தபோது அவருடன் இருந்த நாட்களைப்பற்றி ஏற்கனவே பக்ஸ் எழுதியிருந்தார். இப்போது விசு எழுதியிருக்கிறார். சுவாரசியமான குறிப்புகள். நீர் நோட்டம் பார்த்துச்சொல்லும் ஆசான் என நாஞ்சிலைப் பற்றி சொல்லியிருக்கும் வரிகள் விசுவை ஓர் எழுத்தாளனாகக் காட்டுகின்றன.

முந்தைய கட்டுரைசென்னையில் தோட்டக்கலை
அடுத்த கட்டுரைதீராக்குழந்தை