தமிழ்ஹிந்து

தமிழ் ஹிந்து நான் விரும்பி வாசிக்கும் இணையதளங்களில் ஒன்று. அதில் ம.வெங்கடேசன் எழுதிவந்த ‘புரட்சியாளர் அம்பேத்கார் மதம் மாறியது ஏன்?’ என்ற கட்டுரை சமீபத்தில் நான் வாசித்த முக்கியமான கட்டுரைகளில் ஒன்று. இந்த அளவுக்கு விரிவான தரவுகளுடன் அரசியல்தளத்தில் எவரும் எழுதுவதில்லை என்பதே உண்மை. இங்கே ஒரு தார்மீகக்கோபத்தை பாவனைசெய்துகொண்டாலே போதும் என்ற நம்பிக்கை நிலவுகிறது. நம் அரசியல் அக்கப்போர்க்காரர்களால் அக்கட்டுரையை ஆதாரபூர்வமாக எதிர்கொள்ள முடியாதென்பதையே அதற்கு எதிராக வந்த மௌனம் காட்டியது.

அதேபோல இப்போது வெங்கடேசன் எழுதிவரும் பாரதி பற்றிய கட்டுரையும் மிக முக்கியமானது, ஆழமானது. அவர் எதிர்கொள்ளும் தரப்பு என்பது ஒரு தரப்பே இல்லை, வெறும் டீக்கடை வெட்டிப்பேச்சு அது. ஆனாலும் வெங்கடேசன் அளிக்கும் விளக்கம் பாரதி வாசகர்களுக்குப் பல கதவுகளைத் திறக்கலாம்.

ஆனால் எனக்கு ஆச்சரியம் இந்தக் கட்டுரை. அதைவிட எந்தக்கட்டுரைக்கும் பின்னூட்டம் கொந்தளிக்கும் தமிழ்ஹிந்துவில் காணக்கிடைக்கும் பேரமைதி.

முந்தைய கட்டுரைஅம்மாவின் இடம்
அடுத்த கட்டுரைஒளியை விட வேகமானது – விளம்பரம்