கஞ்சாக்குடும்பம், சாக்தம்- கடிதம்

அன்பின் ஜெயமோகன்

இது போதை வஸ்து பாவிப்பதால் மனிதர்கள்  மட்டும் சமூகத்தில் இருந்து வழுக்கி விழுவதில்லை அவர்களது நாய்களுக்கும ஏற்படும் துன்பத்தை விவரிக்கும் சிறிய அனுபவப் பகிர்வு.

போதை வஸ்துக்களுக்கெதிரான உங்கள் எழுத்துகளுக்கு எனது வாழ்த்துகள்

http://noelnadesan.wordpress.com/2011/08/04

கஞ்சாக் குடும்பம் – அனுபவப் பகிர்வு

நடேசன்

அன்புள்ள எழுத்தாளருக்கு!

வணக்கம்! நலமா?
நவீன வேளாண்மை அறிவியல் சிந்தனைகள்,  லாபம் வருவதற்கான அதிக மகசூல் வழிமுறைகளுடன் நின்றுவிடுகிறது. அவை ஏற்படுத்தும் புற, அக மாறுதல்கள் குறித்து நுழைவதே இல்லை. பாரம்பரிய விவசாயிகள் அறிந்துள்ள வழிமுறைகள்,அவற்றின்  பின்புலம் அறிந்த வேளாண்  அறிஞர்கள் இயல்பாக விவசாயிகளுடன் உரையாடுகிறார்கள். அவர்கள் பரிந்துரைப்பதை விவசாயிகள் உடனே செயல் படுத்துகிறார்கள். என் பேராசிரியர் முதலில் ஒரு பாரம்பரிய விவசாயி,கல்வித் தகுதியில் அவர் விஞ்ஞானி பிறகு . அவர் வழிகளை நானும் பின்பற்றுகிறேன்!
நன்றி வணக்கம்!
Dhandapani

அன்புள்ள ஜெ,

இந்த இணையதளத்தைப் பற்றி உங்கள் கருத்து, பல தத்துவ முறைகளைப் பற்றிய எழுத்து தொகுப்பு  ,  சாங்கிய தத்துவத்தைப் பற்றியும் உள்ளது , இத முறையான துவக்க உரையா என்று தெரிய வேண்டும். உங்கள் புரிதலில் இருந்து இதனை எப்படி அணுகுவது என்ற ஒரு தத்துவ தொடக்க மாணவனாக அறிய வேண்டி .
Lachin என்கிற  லக்ஷ்மி நரசிம்மன்
அன்புள்ள லச்சின்
அந்த இணைப்பைப் பார்த்தேன், அறிமுகக் கட்டுரைகள் என்றவகையில் முக்கியமானவை.
பொதுவாகத் தத்துவம் சார்ந்த விஷயங்களில் விவாதம் முக்கியமானது. குருவிடம் நண்பர்களிடம். நாம் வாசித்தது சரியா என நாமே அறிய அது உதவும்.
ஜெ


 

முந்தைய கட்டுரைஅண்ணா ஹசாரே நூல்
அடுத்த கட்டுரைஅறிவியலுக்கென்ன குறை?