பண்டிதர்-கடிதங்கள்

அன்புள்ள ஜெமோ

நீங்கள் இப்போது சொல்லும் இந்த டிரையாங்கிளை முன்னர் சொல்லியிருக்கிறீர்களா? தளையசிங்கம், எஸ் என் நாகராஜன், அயோத்திதாசர் பற்றி? எங்கேயாவது எஸ்.என்.நாகராஜனைப்பற்றிப் பேசியிருக்கிறீர்களா?

சாமிநாதன் கெ

அன்புள்ள சாமிநாதன்

இதை உண்மையில் நீங்கள் அல்லவா தேடிக்கண்டுகொள்ள வேண்டும்?

ஏறத்தாழ ஒரே காலகட்டத்தில் தான் இந்த மூன்றுபேரையும் சேர்த்து முன்வைக்க ஆரம்பித்தேன், 2000த்தில். எஸ்.என்.நாகராஜன் பற்றி இதுவரை நான்கு சிறு கட்டுரைகள்  எழுதியிருக்கிறேன். மிக விரிவாகப் பல இடங்களில் மேற்கோளும் காட்டியிருக்கிறேன்.

ஆம், பேசப்பேச சில இடங்களை விரிவாக்கம் செய்து கொண்டு செல்வது என் வழக்கம். அவ்வாறு பல கருத்துக்கள் இன்னும் விரிந்திருக்கும். எஸ்.என்.நாகராஜன் ஞானியின் ஆசிரியர். ஞானியை நான் என்றும் என் ஆசிரியராகவே சொல்லிவருகிறேன் –  உரிய முரண்பாடுகளுடன். ஞானிபற்றி எழுதிய கட்டுரைகளையும் எஸ்.என்.நாகராஜனிடமிருந்தே ஆரம்பிக்கிறேன்

ஜெ


அன்புள்ள ஜெமோ

அசல்சிந்தனையாளர்- வழிச்சிந்தனையாளர் என்ற உங்கள் பிரிவினையும் அடையாளப்படுத்தலும் ஆர்வத்தைத் தூண்டுகின்றன. பலகோணங்களிலே சிந்திக்கச்செய்கின்றன. உங்கள் பார்வையில் ஒவ்வொருவரையும் என்ன சொல்வீர்கள் என்று யோசித்துக்கொண்டிருக்கிறேன்

குமார் அறிவழகன்

முந்தைய கட்டுரைஇ.பா
அடுத்த கட்டுரைகுடி ஒருகடிதம்